குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாத 7 இடங்கள்!

Places where children should not be taken
Places where children should not be taken
Published on

குறும்பும் குதூகலமும் நிறைந்தவர்கள் குழந்தைகள். தாம் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியையும் துள்ளலையும் கொண்டு செல்கிறார்கள். அவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவை பொருத்தமான இடங்கள்தானா என்பதை கவனிக்க வேண்டும். ஆனால், குழந்தைகளை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வது ஏற்றதல்ல. அவை எந்த இடங்கள், ஏன் அங்கே அழைத்துச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கூட்டமான உணவகங்கள்: நெரிசலான, மக்கள் கூட்டம் அலைமோதும் உணவகங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது. அவர்களுக்கு அதிகமாக பசிக்கும்போது இந்த மாதிரி இடங்களுக்கு அழைத்துச் சென்றால் உடனடியாக அவர்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் அழுது பெற்றோருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, கூட்டம் அதிகம் இல்லாத நல்ல உணவகங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பூக்களைப் பற்றி ஆச்சரியப்படும் தகவல்கள் பற்றி அறிவோமா?
Places where children should not be taken

2. வன்முறை நிறைந்த திரைப்படங்கள்: குழந்தைகள் பார்க்கத் தகாத ரத்தம் தெறிக்கும் வன்முறை கலந்த, சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது. அவர்களது வயதுக்கும் இயல்புக்கும் பொருத்தமற்ற திரைப்படங்களை பார்க்கத் தேவையில்லை. அதேபோல இரவு 10 மணிக்கு மேற்பட்ட திரையரங்க காட்சிகளுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. தூக்கத்திலும் களைப்பிலும் உள்ள குழந்தைகளுக்கு தொந்தரவாக இருக்கும்.

3. இறுதிச் சடங்குகள்: இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்களில் மக்கள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். அந்த இடத்தில் அமைதி நிலவுவது அவசியம். குழந்தைகள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் விளையாடலாம் அல்லது கத்தி சடங்குகளுக்கு இடையூறு செய்யலாம். எனவே, அந்த இடம் அவர்களுக்கு ஏற்றதல்ல.

4. பணிபுரியும் இடங்கள்: வீட்டில் யாருமில்லாதபோது அல்லது அனுமதி இருக்கும் பணியிடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். ஆனாலும், பணியிடம் என்பது கவனமாக பணியிலும் தொழிலிலும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு சூழல் ஆகும்.

குழந்தைகள் அங்கே பெற்றோருக்கும் சக ஊழியர்களுக்கும் கவனச் சிதறலையும் தொந்தரவையும் ஏற்படுத்தலாம். அதேசமயம் குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் பணியிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அங்கு அவசியம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டு கார்பெட்டை சுத்தம் செய்யும் தந்திரங்கள்! 
Places where children should not be taken

5. இசை நிகழ்ச்சிகள்: கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் நிகழ்சிகளை மிகப் பொறுமையாக, அமைதியாக அமர்ந்து ரசிப்பது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அதற்கான பொறுமை இருக்காது. மேலும், சங்கீதத்தை ரசிக்கும் வயதோ ஞானமோ இல்லாமல் இருக்கும் குழந்தைகள் அந்த இடங்களுக்குப் பொருத்தமற்றவர்களாக இருப்பார்கள்.

6. ஜிம்/ உடற்பயிற்சி கூடங்கள்: இங்கே கனரக உபகரணங்கள், நகரும் பாகங்கள் போன்ற பெரிய சைஸ் உடற்பயிற்சி கருவிகள் இருக்கும். இந்த இடங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சற்றே கவனக்குறைவாக இருந்தால் குழந்தைகள் கனமான பொருட்களை எடுத்து தங்கள் உடல் மேல் போட்டுக்கொண்டு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இங்கே குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது.

7. அரசியல் பேரணிகள்/ போராட்டங்கள்: தொண்டர்கள் அரசியல் பேரணிகளில் கலந்து கொள்ளும்போதும் போராட்டங்களில் கலந்துகொள்ளும் புரட்சியாளர்களாலும் உணர்ச்சி வயப்படும் சூழல் நிலவும். தொண்டர்கள் கூட்டம் கூடும்போது தங்களை மீறி ஏதாவது மோதலில், அடிதடியில் ஈடுபட நேரிடலாம். பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படலாம். எனவே, அவை குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com