சமையலறை சிங்க் அடியில் ஒளிந்திருக்கும் ஆபத்து! கட்டாயம் தவிர்க்க வேண்டிய 7 பொருட்கள்!

Things that should not be stored under the kitchen sink
Kitchen sink
Published on

மையலறை தொட்டியின் கீழ் பொதுவாக எப்போதும் இருண்டும், ஈரப்பதமான சூழ்நிலையும் காணப்படும். இதனால் பூஞ்சை மற்றும் பூஞ்சை காளான் தொற்று உருவாகும் இடமாக இது இருக்கும். அந்த இடத்தில் சில பொருட்களை வைப்பது அவற்றை சேதப்படுத்தக் கூடும்.

எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், ரசாயனங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை சமையலறை சிங்க்கின் கீழ் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. சிங்க்கின் கீழ் ஈரப்பதம் இருக்கும். சில சமயம் கசிவுகளும் ஏற்படும். எனவே, அந்த இடத்தில் சேதமடையக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள்: பெயிண்ட் தின்னர்கள், கரைப்பான்கள் மற்றும் சில துப்புரவுப் பொருட்கள் அதிகமான வெப்பம் அல்லது தீப்பொறியுடன் தொடர்பு கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய இந்த பொருட்களை சமையலறையில் வைக்காமல் உலர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
மரணத்தை வெல்ல இதான் ஒரே வழி! நம்ம பாட்டி சொன்ன ரகசியம்!
Things that should not be stored under the kitchen sink

2. ரசாயன பொருட்கள் (chemical cleaners): சமையலறை சிங்க்கின் கீழ் கடுமையான ரசாயனங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ப்ளீச், அமோனியா போன்ற வலுவான துப்புரவுப் பொருட்களை உலர்ந்த, ஈரப்பதம் இல்லாத, பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் எட்டாத வகையில் அவற்றை சேமித்து வைப்பது அவசியம்.

3. சிறிய உபகரணங்கள்(small appliances): பொதுவாக, சமையலறை சிங்க்கின் கீழ் ஈரப்பதம் மற்றும் நீர் கசிவு இருக்கும். இந்த இடத்தில் பிளெண்டர்கள், டோஸ்டர்கள், மின்சார கெட்டில்கள் போன்றவற்றை வைக்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் அங்குள்ள ஈரப்பதம் காரணமாக இந்த சாதனங்கள் பழுதடைந்து விடும். எனவே, இவற்றை சமையலறை அலமாரிகளிலோ அல்லது ஸ்டோர் ரூமிலோ சேமித்து வைப்பது நல்லது.

4. மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள்: சில வீடுகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களை சிங்க்கிற்கு கீழ் ஒரு ட்ரேயில் வைப்பார்கள். இன்னும் சிலரோ, செல்லப் பிராணிகளின் உணவுகளையும் இங்கு சேமித்து வைப்பார்கள். ஈரப்பதமான இந்த இடத்தில் வைப்பது உணவுப் பொருட்களுக்கு ஏற்றதல்ல. சிங்க்கின் கீழ் பகுதியில் உணவுப் பொருட்களையோ அல்லது மளிகைப் பொருட்களையோ சேமித்து வைப்பது சரியல்ல. உணவுப் பொருட்களை காற்று புகாத பாத்திரங்களில் சமையல் மேடைகளில் சேமித்து வைக்கலாம். மளிகைப் பொருட்களை சமையலறை அலமாரிகளில் சேமித்து வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பள்ளிப் படிப்பைத் தவிர, மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய தனித் திறமைகள்!
Things that should not be stored under the kitchen sink

5. பேட்டரிகள்: ஈரப்பதம் காரணமாக பேட்டரிகள் கசிந்து அரிக்கக் கூடும். எனவே, இவற்றை சிங்க்கின் கீழ் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பேட்டரிகள் கசிந்து சிங்க்கிற்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பிற பொருட்களையும் சேதமடையச் செய்து  விடும். எனவே, பேட்டரிகளை ஈரப்பதம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது பாதுகாப்பானது. சிங்க்கின் கீழ் உள்ள ஈரப்பதம் பேட்டரிகளின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

6. கைப்பிடி துணிகள்(dish towels): சில வீடுகளில் கைப்பிடித் துணிகளை சிங்க்கின் அடியில் சேமித்து வைப்பார்கள். இது அங்குள்ள ஈரப்பதத்தின் காரணமாக பூஞ்சை ஏற்பட்டு ஆங்காங்கு கருப்புப் புள்ளிகளாகக் காணப்படும். சமையலறைத் துணிகள் ஈரப்பதத்தையும், பூஞ்சை காளான்களையும் உறிஞ்சி விடும். எனவே, இவற்றை ஈரப்பதமான மற்றும் நீர் கசிவுள்ள இடங்களில் வைக்காமல் அலமாரியிலோ அல்லது ஒரு டிராயரிலோ சேமித்து வைப்பது நல்லது.

7. கத்தி, அரிவாள் போன்ற இரும்புப் பொருட்கள்: கத்தி, தேங்காய் உடைக்கும் அரிவாள், சுத்தியல் போன்ற இரும்புப் பொருட்களை சிங்க்கின் கீழ்  வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை அங்குள்ள ஈரப்பதத்தின் காரணமாக துருப்பிடித்து போகலாம். எனவே, இவற்றை ஈரம் இல்லாத உலர்ந்த இடங்களில் சேமித்து வைப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com