
நாம் அனைவருக்குமே வாழ்வில் படிப்படியாக முன்னேறி, பெரும் பணக்காரராகி, பிள்ளைகளுக்கும் சொத்து சேர்த்து வைத்துச் செல்லவேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதற்கு நாம் தினமும் கடினமாக உழைக்கவும் தயங்கமாட்டோம். அத்துடன் நம் பாரம்பரிய வழக்கப்படி சோதிட விற்பன்னர்களின் ஆலோசனையையும் கேட்டு நடக்க விரும்புவோம். சோதிடர்கள் நாம் பிறந்த நேரம், நமது ராசி போன்றவற்றை ஆராய்ந்து, நம்முடன் இருக்க வேண்டிய நவ இரத்தின அல்லது உப இரத்தினக் கற்களில் ஏதாவது ஒன்றைப் பரிந்துரைப்பார். நம்முடன் இருக்க வேண்டிய 7 வகை கிரிஸ்டல்ஸ் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1.சிட்ரைன் (Citrine): இது வியாபாரத்தில் வெற்றியையும், சொத்துக்களையும் அபரிமிதமாகத் தரக்கூடியது. சொந்த பிசினஸ் செய்து கொண்டிருக்கும் வியாபாரிகள் இந்தப் படிகக் கல்லில் ஒன்றை தங்களின் பணப்பை அல்லது அலுவலக காசாளர் மேஜையின் இழுப்பறையில் நிரந்தரமாகப் போட்டு வைக்கலாம்.
2.பய்ரைட் (Pyrite): 'ஏமாளிகளின் தங்கம்' (Fool's Gold) எனவும் இது அழைக்கப்படுகிறது. தங்கம் போன்றே தோற்றமளிக்கும். மிகுந்த சக்தி வாய்ந்தது. இதை உடன் வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை பெருகும். நிதி நிலையை அதிகரிக்க உதவும் சந்தர்ப்பங்களும் தேடி வரும்.
3.க்ரீன் அவென்ச்சரைன் (Green Aventurine): அதிரஷ்டத்தையும் வளமான முன்னேற்றங்களையும் அள்ளிக்கொண்டு வரக்கூடிய சக்தியுள்ளது. சந்தர்ப்பம் தானே கூடிவரும். துணிவுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது, வெற்றியும் பணமும் பன்மடங்கு பல்கிப் பெருகும். வேலை வாய்ப்பைத்தேடி நேர்காணலுக்குச் செல்லும் முன் அல்லது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் முன் இந்த படிகக் கல்லை உடன் வைத்துக்கொண்டு சிறிது நேரம் மெடிட்டேஷன் செய்துவிட்டுச் சென்றால் வெற்றி நிச்சயம்.
4.டைகர்ஸ் ஐ (Tiger's Eye): தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள், உடன் வைத்துக்கொள்ள வேண்டிய கிரிஸ்டல் இது. அவர்கள் தங்களின் நிதி நிர்வாக மேலாண்மையில் அதிக கூர் நோக்குடனும் கவனத்துடனும் ஈடுபட்டு வெற்றிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல பெரிதளவில் உதவி புரியும் இந்த படிகக் கல்.
5.ஜேட் (Jade): இது பழங்காலத்தில் சீனாவில் தோன்றிய ஃபெங் சுய் (Feng shui) எனப்படும் கட்டடக் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் உபயோகித்து வந்த அதிர்ஷ்டக் கல். இக்கல்லை உடன் வைத்துக்கொண்டு கட்டிடங்கள், இடங்கள் மற்றும் பொருட்களை அமைப்பதன் மூலம் நல்லிணக்கம், அமைதியான வாழ்க்கை, செழிப்பு ஆகியவற்றை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.
6.க்ளியர் குவார்ட்ஸ் (Clear Quartz): நமக்கு ஒரு பொருள் அல்லது ஒரு செயல் மீதிருக்கும் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் இந்த கிரிஸ்டல். இதை நம் நிதி சம்பந்தப்பட்ட இலக்குகளுடன் 'கிரிஸ்டல் புரோகிராமிங்' செய்து கொண்டால் இலக்கை அடைவது வெகு சுலபமாகிவிடும். இந்தக் கல்லானது தனக்குள்ள சக்தியுடன், தன் உடனிருக்கும் மற்ற கிரிஸ்டல்களின் சக்தியையும் அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக, பய்ரைட் (Pyrite) அல்லது சிட்ரைனை இதனுடன் சேர்த்து வைத்துக்கொள்வதால் நற் பலன்கள் அதிகம் கிடைக்கும்.
7.மலாச்சைட் (Malachite): பணம் சம்பாதிக்கும் நோக்கில், ஒரே ஒரு வழியை மட்டும் பின்பற்றிக்கொண்டு அதிலிருந்து மீளவும் முடியாமல் பணம் சேர்க்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருப்போரை மீட்டு, வேறு ஒரு உருக்கொள்ளவும் நேர்மறை விளைவுகளை சந்தித்து பண வரவு உயரவும் வழி காட்டும் இந்த மலாச்சைட் கிரிஸ்டல்.
மேலே கூறப்பட்ட, சுப பலன்கள் தரும் உப ரத்தினங்களில் ஒன்றை நாமும் உபயோகித்து நற்பலன் பெறுவோம்.