
ஒவ்வொரு வீட்டிலும் லிவிங் ரூம் எனப்படும் ஹால் பகுதி மிக முக்கியமானது. வீட்டுக்கு வரும் விசிட்டர்களை வரவேற்று அமர வைத்து பேசும் இடம் லிவிங் ரூம். அதில் போடப்பட்டிருக்கும் சோஃபாக்கள் முக்கியமானவை. இந்தப் பதிவில் ஹாலை விதவிதமான சோஃபா செட்டுகளுடன் அலங்காரமாக வைத்திருக்க உதவும் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
1. மர சோஃபாக்கள்
வீட்டின் ஹால் பகுதிக்கு இயற்கையான, அழகான மற்றும் அமைதியான உணர்வை சேர்க்க மர சோஃபா செட்டுகள் உதவும். தேக்கு ரோஸ் வுட் உள்ளிட்ட மர வகைகளில் சோஃபாக்கள் செய்யப்படுகின்றன.
சோபாவின் கலர் மட்டுமில்லாமல் அதில் பொருத்தப்படும் மெத்தைகள் திண்டுகள் போன்றவற்றின் நிறத்தையும் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஹாலில் அடிக்கப்பட்டிருக்கும் பெயிண்டிற்குப் பொருத்தமான வகையில் சோஃபாவின் கலர் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
2. சிறிய ஹாலுக்கு L வடிவ சோபா
சிலர் தம் வீட்டு ஹால் சிறியதாக இருக்கிறது என்று கவலைப்படுவார்கள் அவர்கள் 'எல்' வடிவ சோபாவை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது இடத்தை மிச்சப்படுத்தவும், அதிக இருக்கைகளை உருவாக்கவும் அந்த அறையை சற்று பெரிதானது போலவும் தோன்றவும் செய்யும். இடத்தை அடைக்காமல் ஒரு மூலையில் வைத்து விடலாம். நான்கு பேர் அமரும் அகலமான சோபா மற்றும் இரண்டு பேர் அமரக்கூடிய சோபாவை அருகில் போடலாம். அதன் முன்பு ஒரு சிறிய டீப்பாயை வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
3. வண்ணமயமான சோஃபாக்கள்
ஹால் பகுதி பிரகாசமாக தோன்ற வண்ணமயமான சோஃபா செட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். நீலம், பச்சை அல்லது மஞ்சள் போன்ற வண்ணமயமான சோஃபாக்கள் ஹாலை ஈர்ப்பான இடமாக மாற்றும். சுவரின் பின்னணியில் மெல்லியதான நிறத்தில் பெயிண்ட் இருக்க வேண்டும். சோபாக்கள் வண்ணமயமாக இருப்பதால் பிற அலங்காரங்கள் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
4. லெதர் சோஃபாக்கள்
பொதுவாக லெதர் சோஃபாக்கள் லிவிங் அறைக்கு ஒரு ஆடம்பரமான கம்பீரமான தோற்றத்தைத் தரும். பாரம்பரியமான தோற்றத்திற்கு பழுப்பு அல்லது கருப்பு போன்று அடர் வண்ணங்களையும், நவீன தோற்றத்திற்கு இலகுவான நிறங்களையும் தேர்ந்தெடுக்கலாம். சோஃபாவின் முன்பு ஒரு ஆடம்பரமான காபி டேபிள் போட்டு சோஃபாவில் சில ஸ்டைலான குஷன்கள் போட்டுவிட்டால், அந்த இடமே மிக நேர்த்தியாக தோற்றமளிக்கும்.
5. யூ வடிவ சோஃபா
பெரிய ஹால் பகுதிக்கு 'யு' வடிவ சோஃபாக்கள் மிகப் பொருத்தமாக இருக்கும். அதிகமான நபர்கள் அமர உதவும். மேலும் குடும்பத்தில் இருக்கும் அத்தனை நபர்களும் ஒன்று கூட விரும்பினால் இவ்வடிவ சோபாக்கள் ஏற்றவை. நிறைய இருக்கைகள் இருப்பதால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொள்ளலாம். தரையில் பெரிய கம்பளத்தை விரித்து அதன் மையத்தில் ஒரு டீப்பாயை வைத்தால் அழகாக இருக்கும்.
6. விண்டேஜ் அல்லது பழங்கால சோஃபாக்கள்
விண்டேஜ் எனப்படும் பழங்கால ஸ்டைல் சோஃபாக்கள் பெரும்பாலும் தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளதால் ஹாலுக்கு சிறப்பு செய்கின்றன. ஒரு கிளாசிக் லுக் தரும். பழைய பாணி சோபாவை நவீன கால ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
7. மேரி கோல்ட் வெல்வெட் சோஃபா
லிவிங் ரூம் பார்க்க ஸ்டைலாக இருக்க வேண்டும் என்றால் வெல்வெட் போன்ற பல்வேறு துணிகளில் செய்யப்பட்ட மெத்தைகளைக் கொண்ட சோபாக்கள் ஏற்றவை. அழகான சாமந்தி மஞ்சள் நிறத்தில் அமைந்த வெல்வெட் சோஃபாக்கள் லிவிங் ரூமுக்கு ஒரு அழகான தோற்றத்தை தரும்.
8. பெப்பி பிங்க்
பெப்பி பிங்க் நிறத்தில் அமைந்துள்ள உயரம் குறைவான பெல்லினி ( bellini) சோஃபாக்கள் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான வகையில் இருக்கும்.