
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் அடியெடுத்து வைக்க உள்ளனர். அவர்களுக்கு கல்லூரி குறித்த பயம் இருக்கும். புதிய நண்பர்கள், தனிமை பற்றிய பயம் அவர்கள் மனதில் வேரூன்றும். இந்த பயத்தின் காரணமாக மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை அனுபவிக்க முடியாமல் தவிப்பார்கள். இந்த விஷயங்களைக் கண்டு பயப்படாமல் சிலவற்றை மட்டும் கவனித்தால் போதும், கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
1. நம்பிக்கையோடு செல்லுங்கள்: கல்லூரியில் முதல் நாள் என்றால் உங்கள் நம்பிக்கையை வலுவாக வைத்திருக்கவும். இது நம்பிக்கையோடு உங்களை தைரியமாக நடமாட வைக்கும். நல்ல நட்பை உருவாக்கும்.
2. பயத்தை ஒழியுங்கள்: இப்போது எல்லா கல்லூரிகளிலும் ராகிங் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் ராகிங் குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சின்னச் சின்ன ராகிங்களை நீங்கல் எதிர்கொள்ள வேண்டியிருந்தால் வெளிப்படையாக பேசி எதிர்க்கவும். அதேசமயம் யாருடைய சுயமரியாதையும் புண்படுத்தாமல் கவனமாகப் பேசுங்கள்.
3. நட்புடன் இருங்கள்: கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் அனைவரிடமும் பேச முயற்சி செய்யுங்கள். அதனால் நீங்கள் உங்கள் நண்பர்களை எளிமையாக கண்டுபிடித்து நட்பாக இருந்து. அவர்களின் உதவியுடன் நீங்கள் நல்ல நண்பர்களை உருவாக்க முடியும். அதனால்தான் முதல் நாளிலிருந்தே அனைவரிடமும் பேசி உங்களோடு நட்பு கொள்வதும் மிகவும் முக்கியம்.
4. நேரம் ஒதுக்குங்கள்: உங்கள் நண்பர்களிடம் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். கல்லூரியில் படிக்க இருக்கும் வகுப்பறையையும் நிதானமாகத் தேடி கண்டுபிடிக்க முடியும். இதனால் கல்லூரிக்கு நேரத்தோடு சென்று விடுங்கள். கல்லூரி வகுப்புகளைத் தவற விடாதீர்கள்.
5. உதவி கேளுங்கள்: முதல் நாள் வகுப்பில் ஏதாவது புரியவில்லை என்றால் பயமின்றி, பேராசிரியரிடம் கேள்விகளைக் கேட்கலாம். கேள்வி கேட்பது தீர்வுகளை கண்டறியும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
6. மொழி பேசுவதில் கவனம்: கல்லூரியில் பேசும்போது உங்கள் மொழியை நினைவில் கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பேசுவதை தவிர்க்க வேண்டும். ஒருவரின் பேச்சைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். எப்போதும் பேசுவதில் கவனமாக இருங்கள்.
7. பட்ஜெட்டை கடைப்பிடியுங்கள்: கல்லூரிக்கான பணம் கட்டுவதை செமஸ்டர் முழுவதும் கட்டி உள்ளதா என்பதையும், உதவி தொகுப்பில் நிதி நிலையையும் நீங்கள் அறிந்து எப்போதும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். பணத்தை எவ்வாறு சேமிப்பது மற்றும் செலவழிப்பது என்பதை கற்றுக்கொள்வது முக்கியம். மன அழுத்தத்தை குறையுங்கள்.
8. மன அழுத்தத்தைக் குறையுங்கள்: கல்லூரி வாழ்க்கை சிலருக்கு மன அழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். கல்லூரி வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள். விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அதோடு, உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் உடைகளைப் பார்த்து, உங்கள் குணத்தைப் பார்த்து சக மாணவர்கள் உங்களைத் தீர்மானிப்பார்கள். இதனால் மன அழுத்தம் குறையும்.