பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் 8 குணநலன்கள்!

husband and wife
husband and wife
Published on

ந்தையாக, கணவனாக, காதலனாக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக தங்கள் வாழ்வில் நெருக்கமாக இருக்கும் ஆண்களிடம், பெண்கள் என்ன குணநலன்களை எதிர்பார்க்கிறார்கள்? ஒவ்வொரு உறவுக்கும் ஏற்றபடி இது மாறும் என்றாலும் பொதுவான சில பண்புகள் ஆண்களிடம் இருக்க வேண்டும். அவைதான் பெண்களின் அன்புக்குரிய நபராக ஒரு ஆளை மாற்றும். அந்தப் பண்புகள் எவை என்பதைப் பார்ப்போம்.

1. ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்: பெண்கள் ஏதாவது ஒரு விஷயம் குறித்து சீரியஸாக மனம் விட்டு பேசும்போது அதை ஆண்கள் கவனமாகக் கேட்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். இவர் கேட்டு அதற்கு எந்த பதிலையும் தீர்வுகளையோ சொன்னால் தங்கள் மன உணர்வை ஆண்கள் புரிந்து கொண்டதாக நினைக்கிறார்கள். பெண்கள் எங்கோ கவனத்தை தெரிவித்துக் கொண்டு அக்கறையின்றி  கேட்கும் ஆண்களை அவர்கள் வெறுக்கிறார்கள். பெண்கள் ஒருவேளை கோபமாக எப்போதாவது பேச நேர்ந்தால் அப்படிப்பட்ட சூழலில் தாங்கள்  ஏன் அப்படிப் பேச நேர்ந்தது என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பெண்கள் உடலிலும், மனதிலும் அவஸ்தைகளை சந்திக்கும் நேரத்தில் அவர்களின் இயல்புகளைக் கேட்க வேண்டும் என நினைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
கணவன் மனைவியை நேசிக்க வைக்கும் 9 விஷயங்கள்!
husband and wife

2. ஆறுதல் சொல்ல வேண்டும் நினைப்பார்கள்: பெண்கள் இயல்பாகவே கருணை பொழியும் பிறவிகள். அதேபோல், ஆண்களும் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக தன்னிடம் இருப்பது எல்லாம் எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக இருக்க வேண்டும் என்று இல்லை. குறைந்தபட்சம் மற்றவர் துயரத்தைக் கண்டு வருத்தப்படும் அளவாவது மனதில் கருணை இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தாங்கள் அழும் நேரத்தில் உடன் சேர்ந்து ஆண்களும் அழ வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இரக்கம் காட்டி ஆறுதல் சொல்லி உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

3. நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள்: நகைச்சுவை உணர்வு ஆண்களிடம் அதிகம் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட மனநிலையையும் மாற்றக்கூடிய அளவுக்கு நகைச்சுவையாக பேசும் ஆண்களை பெண்களுக்கு எப்போதும் பிடிக்கும். பெண்களுக்கு எப்போதுமே பேசுவது பிடிக்கும். உரையாடல்களை எப்போதும் விரும்புவார்கள். அதில் நகைச்சுவை கலந்து விட்டால் அதைவிட சுகம் வேறு இல்லை என்று நினைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜை பாதுகாப்பாகப் பராமரிக்க சில எளிய ஆலோசனைகள்!
husband and wife

4. தன்னம்பிக்கையை எதிர்பார்ப்பார்கள்: தாங்கள் எவ்வளவு பொய் பேசினாலும் தங்களிடம் பொய் சொல்லும் ஆண்களை பெண்களுக்குப் பிடிப்பதில்லை. ஆண்களின் அடையாளமாக நேர்மை இருக்க வேண்டும் என நினைப்பார்கள். பொய் பேசுவது தெரிந்தால் விலகி விடுவார்கள். தன்னம்பிக்கையோடு எதையும் ஆண்கள் செய்ய வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். எதையாவது முயற்சி செய்து தோற்றாலும் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். புலம்பல்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

5. பாராட்டை எதிர்பார்ப்பார்கள்: உங்களுக்கு அக்கறையான பாதுகாவலனாக ஆண்கள் இருக்க வேண்டும் என பெண்கள் ஆசைப்படுவார்கள். அதேசமயம் தங்களை அடிமை போல நடத்தும் ஆண்களை பெண்கள் வெறுக்கிறார்கள். அவர்களுக்கு நட்பான காவலனே தேவை. வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ஆண்களிடம் இருந்து பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். சமையலில், குடும்ப விஷயங்கள், மற்றவற்றில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

6. பொறுமையை எதிர்பார்ப்பார்கள்: கடினமான சூழல்களில் தங்கள் வேலைகளை பகிர்ந்துகொண்டு செய்து தர வேண்டும் என ஆண்களிடம் பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் பொறுமை காப்பவர்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். பொறுமைதான் ஒருவருக்கு சமூகத்தில் நற்பெயரை வாங்கித் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில கை வைத்தியங்கள்!
husband and wife

தங்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும், மனம் புண்படும்படி பேசக்கூடாது எல்லா நேரங்களிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக குறை சொல்லக்கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.அடுத்தவர்கள் எதிரில் திட்டக்கூடாது எந்த இடத்திலும் தங்களை விட்டுக்கொடுக்க கூடாது என்பது ஆண்களிடம் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயமாக உள்ளது. முக்கியமான விஷயங்களை தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். தங்கள் கருத்தையும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

7. குடும்ப முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவேண்டும்: தங்களிடம் எல்லா விஷயங்களிலும் மனம்விட்டு பேச வேண்டும். எதிலும் ஒளி மறைவு கூடாது என நினைக்கிறார்கள் பெண்கள். அதேபோல தாங்கள் சொல்வதையும்  நம்ப வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தங்களுக்கு உடல்நலம் இல்லாத போது உடன் இருந்து ஆண்கள் கவனிக்க வேண்டும் எனவும், பெண்கள் தங்கள் வேலைகளில் சின்ன சின்ன உதவிகளை ஆண்கள் அவ்வப்போது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன சிறிய மாற்றங்கள் - பெரிய பலன்கள் தரும்..!
husband and wife

எங்கு செல்வதாக இருந்தாலும் தங்களிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல திரும்பி வருவதாகச் சொன்ன நேரத்தில் வர வேண்டும். அப்போதுதான் வீட்டு நினைப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.

8. நல்ல நடத்தையை விரும்புவார்கள்: தீய பழக்கங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஒருவரிடம் தீய பழக்கங்கள் இருந்தால் அவர் எந்த தவறையும் செய்ய தயங்க மாட்டார் என பெண்கள் கருதுகிறார்கள். தங்கள் விருப்பங்கள், ரசனைகளை ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என பெண்கள் ஆசைப்படுகிறார்கள். பணத் தேவைக்காக எப்போதும் ஆண்களை சார்ந்து இருப்பதை பெண்கள் விரும்புவதில்லை. குடும்ப செலவுக்கு என தனியாக பணம் தர வேண்டும். அதை தங்கள் பணமாக உரிமையோடு எடுத்துச் செலவு செய்வதை பெண்கள் விரும்புகிறார்கள். பணம் சம்பாதிப்பதுதான் ஆண்களின் முக்கியமான பணி. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை. குடும்பத்துக்கும் உரிய முக்கியத்துவம், நேரம் தந்து நடந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இவையே இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com