890 பார்கோடு இருந்தால் இந்தியத் தயாரிப்பா? 13 எண்களில் ஒளிந்திருக்கும் உண்மை!

890 பார்கோடு காட்டும் தகவல் உண்மையா? பொருள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாக அறிய வழிகாட்டி.
890 பார்கோடு
890 பார்கோடுGemini image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நாம் கடைகளில் பொருள் வாங்கும் போது அந்த பொருளின் பின்புறம் 890 என்ற பார்கோடு இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் பலருக்கும் இது என்னவென்று தெரியாது. ஆனால் அந்த எண்ணில் பல விஷயங்கள் மறைந்துள்ளது. வாங்க அதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நாம் கடையில் வாங்கும் பொருட்களின் பார்கோடு 890 என்று தொடங்கினால், அந்தப் பொருள் இந்தியாவில் பதிவு (Country Code) செய்யப்பட்டது (GS1 India) என்று அர்த்தம். பொதுவாக இந்தியாவில் விற்கப்படும் பொருட்களில் 13 இலக்கங்கள் கொண்ட EAN-13 (European Article Number) பார்கோடு பயன்படுத்தப்படுகிறது. பார்கோடில் உள்ள 13 எண்களும் (EAN-13) ஒரு பொருளின் அடையாளத்தையும் அதன் தயாரிப்பு விவரங்களையும் உலகளவில் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன.

பார்கோடு எண்களின் ரகசியம் (EAN-13 அமைப்பு) :

பொதுவாக நாம் வாங்கும் பொருட்களில் 13 இலக்க பார்கோடு இருக்கும். இது நான்கு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

* முதல் 3 எண்கள் என்பது பார்கோடு எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். 890 என்பது அந்தப் பொருள் இந்தியாவில் பதிவு (GS1 India). செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது அல்லது சந்தைப்படுத்தப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. (குறிப்பு: இது பொருள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை விட, அந்த நிறுவனம் இந்தியாவில் பார்கோடு பதிவு செய்துள்ளது என்பதையே குறிக்கும்). ஒரு பொருட்கள் வாங்கும்போது 890 என்ற எண்ணைப் பார்ப்பதன் மூலம், அது இந்தியாவில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.(உதாரணமாக: 000–139 அமெரிக்கா, 690–699 சீனா).

* அடுத்த 4 முதல் 7 எண்கள், பொருளைத் தயாரிக்கும் (Manufacturer Code) அல்லது விற்பனை செய்யும் நிறுவனத்தின் குறியீடு (Manufacturer Code).

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இந்திய பார்கோடு அமைப்பான GS1 India தனித்துவமான எண்ணை வழங்குகிறது. ஒரே நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களுக்கும் இந்த எண் பொதுவாக இருக்கும்.

* அடுத்த 2 முதல் 5 எண்கள் பொருளின் குறியீடு (Product Code). ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு வெவ்வேறு பொருளுக்கும் (உதாரணமாக: சோப்பு, ஷாம்பூ, அதன் எடை அல்லது அளவு, நிறம் அல்லது வகை) தனித்தனி (பொருளை அடையாளம் காண) எண்கள் வழங்கப்படும்.

* கடைசி 1 இலக்கம், இது சரிபார்ப்பு எண் (Check Digit). பார்கோடு ஸ்கேனர் எண்களைத் தவறில்லாமல் சரியாகப் படித்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த, கணித சூத்திரம் மூலம் கணக்கிடப்படும் எண்ணாகும்.

890 பார்கோடு - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்:

890 என்பது அந்தப் பொருள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான 100% உத்தரவாதம் அல்ல. அது அந்த நிறுவனத்தின் பார்கோடு இந்தியாவின் GS1 அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டுமே காட்டுகிறது.

Label|890 பார்கோடு
Label|890 பார்கோடு

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கிளை தொடங்கி, இந்தியாவின் GS1 அமைப்பில் பார்கோடைப் பதிவு செய்திருந்தாலும் அதன் எண் 890 என்றே தொடங்கும்.

அதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கிளை வைத்திருந்து, வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தாலும், இந்தியாவில் பதிவு செய்திருந்தால் 890 என்ற எண்ணையே பயன்படுத்த முடியும்.

அதேசமயம், ஒரு பொருளில் கொடுக்கப்பட்ட பார்கோடு எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை ஒருவர் அறிந்துகொள்ள முடிந்தாலும், அந்தப் பொருள் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை அவரால் கண்டறிய முடியாது.

உதாரணமாக, ஒரு பிரெஞ்சு நிறுவனம் இந்தியாவிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்து அயர்லாந்திற்கு அனுப்பினால், அந்தப் பொருளின் பார்கோடில் உள்ள நாட்டுக் குறியீடு அது பிரான்சில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கக்கூடும். எனவே, அயர்லாந்தில் உள்ள மக்கள் இந்தியப் பொருட்களை உண்ணாத பட்சத்தில், அந்தப் பொருள் உண்மையில் இந்தியாவைச் சேர்ந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது.

இதையும் படியுங்கள்:
இனி சிப்ஸ் பாக்கெட்டில் இந்த 'சிவப்பு லேபிள்' கட்டாயம்! வருகிறது புதிய கட்டுப்பாடுகள்!
890 பார்கோடு

அதேபோல் பார்கோடின் முதல் மூன்று இலக்கங்கள் (GS1 Prefix) பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டைக் குறிப்பதில்லை. மாறாக, அந்த நிறுவனம் எந்த நாட்டின் GS1 கிளையில் தன்னைப் பதிவு செய்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கும்.

ஒரு இந்திய நிறுவனம் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள GS1 அமைப்பில் பார்கோடைப் பதிவு செய்திருந்தால், அந்தப் பொருள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் பார்கோடு 890-ல் தொடங்காது.

எனவே, ஒரு பொருள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாக அறிய, பாக்கெட்டின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள "Country of Origin" (உற்பத்தி செய்யப்பட்ட நாடு) அல்லது "Manufactured by" (தயாரிப்பாளர் முகவரி) ஆகிய விவரங்களைப் பார்ப்பதே சரியான முறையாகும்.

இதையும் படியுங்கள்:
நீங்களுமா..? போலி லேபிள் ஒட்டி காலாவதியான பொருட்கள் விற்பனை: அமேசான், இன்ஸ்டா கிடங்குகளுக்கு சீல்!
890 பார்கோடு

இந்தியச் சட்டப்படி (Legal Metrology Rules), அனைத்துப் பொட்டலப் பொருட்களிலும் இந்த விவரம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

கடையில் பொருள் வாங்கும்போது 890 என்ற எண்ணைப் பார்த்தால், அது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் குறியீடு என்ற தெளிவு கிடைக்கும்; இறக்குமதி மற்றும் மறு-ஏற்றுமதி சூழல்களில் பார்கோடு எப்படி மாறுபடலாம் என்பதையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்.