
மொபைல் போனும், டி வி யும் இன்றைய குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தை அழித்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க உதவும் 9 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.வாசிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள்
தினந்தோறும் புத்தகங்களை படிப்பதற்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்தப் பழக்கம் குழந்தைகளுக்கு வாசிப்பை மகிழ்ச்சியாக்குவதோடு, அன்றாட வழக்கமாக்கி , வலுவான வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடும் .
2.ஒன்றாக சேர்ந்து வாசியுங்கள்
குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் சத்தமாக வாசிப்பது, குழந்தைகளின் புரிதல், கவனிக்கும் திறன், வொகாபுலரியை அதிகரிப்பதோடு, உங்கள் இருவருக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் .இதனால் குழந்தைகள் வாசிப்பதை அன்றாட வழக்கமாக்கி புத்தகங்களின் மீது ஆர்வத்தை காட்டத் தொடங்குவார்கள்.
3.வயதுக்கேற்ற புத்தகங்கள்
குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தால் புத்தகத்தின் மீதான ஆர்வம் அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மேலும் பல்வேறு கடினமான புத்தகங்களை படிக்கும் திறன்களையும் இது அதிகரிக்கும்.
4.ஃபோனிக்ஸ் ஆக்டிவிட்டிகள்
வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை வாசித்துக் காட்டி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். வார்த்தைகளை உச்சரிக்கும் விளையாட்டுகள், நடவடிக்கைகள் போன்றவை தெளிவான உச்சரிப்புக்கு வழி வகுப்பதோடு அவர்கள் பயன்படுத்தாத வார்த்தைகளையும் தெரிந்து கொள்ள உதவும். இதனால்அவர்கள் தெளிவாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் வாசிக்க முடியும்.
5.கதை சொல்லும் பழக்கத்தை ஊக்குவியுங்கள்
குழந்தைகளை கதை சொல்லச் சொல்லி கேட்பதால் அவர்கள் என்ன வாசித்தார்கள் என்பதை நினைவு கூறுவதோடு, குழந்தைகளின் நினைவாற்றல் ,கற்பனை திறன் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரித்து நன்றாக படிக்க உதவும்.
6.நூலகம் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்
அடிக்கடி நூலகம் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டால் ,அது ஒரு மகிழ்ச்சியான குடும்ப நடவடிக்கையாக மாறி,குழந்தைகள் பல்வேறு புத்தகங்களையும் வாசிப்பார்கள். இது அவர்களுக்கு பல்வேறு டாபிக்குகளை புரிந்துகொள்ள உதவுவதோடு, பிடித்தபுத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிக்க உதவும்.
7.வாசிப்பு
குழந்தைகளும் நீங்களும் ஒன்றாக வாசிக்கும்போது குரல்களை ஏற்ற இறக்கங்களுடன் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி மாற்றிப் பேசி கேள்வி கேளுங்கள் .இப்படி வாசித்து உரையாடல்கள் நிகழ்த்தினால் அது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி அவர்களின் கவனத்தை அதிகரித்து புத்தகத்தை புரிந்து கொண்டு படிக்க உதவிகரமாக இருக்கும் .
8. ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டால் அதை கொண்டாடுங்கள்
குழந்தைகள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் அதை கொண்டாடி ,அவர்கள் கேட்டதை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தி விருந்து கொடுங்கள் .இது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி அவர்களுடைய புதிய இலக்குகளை நிர்ணயிக்க அவர்களை ஊக்கப்படுத்தும்.
9.ரோல் மாடலாகுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் புத்தகங்கள், செய்தித்தாள்கள் வார பத்திரிகைகள் ஆகிவற்றை வாசிப்பதன் மூலம் அவர்களுக்கு ரோல் மாடலாகலாம். குழந்தைகள் எப்போதும் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அதையே பின்பற்றுகிறார்கள் என்பதால் உங்களுடைய புத்தக வாசிப்பை பார்த்து அவர்கள் பின்பற்றி வாசிக்க தொடங்குவார்கள்.
மேற்கூறிய 9 வழிமுறைகளையும் கையாள குழந்தைகள் வாசிக்கும் திறன் மேம்படும் என்பதில் சற்று ஐயமில்லை.