அன்பில்லாத இல்லம்; அழியப் போகும் உறவு: எச்சரிக்கை மணி!

Husband-wife relationship
Husband-wife
Published on

வ்வொருவர் வாழ்க்கையிலும் மனைவி என்பவள் முக்கியப் பங்கு வகிக்கிறாள். அப்படிப்பட்ட மனைவியை பல குடும்பங்களில் வேறு வீட்டிலிருந்து வந்தவள், மருமகள், அவளுக்காக கணவன் என்ற கெத்தை விட்டுத்தர முடியுமா? ஆண் எனப்பட்டவன்தான் குடும்பத் தலைவன், மனைவியாக வந்தவள் கணவனுக்கு அடிமை, கணவன் சொல்லுகிற வகையில்தான் மனைவி குடும்பம் நடத்த வேண்டும், மனைவிதான் அடங்கிப்போக வேண்டும், கணவனுக்குத் தொியாமல் மனைவி ஒரு துரும்பைக் கூட அசைக்கக் கூடாது, கணவன் சாப்பிட்டு முடித்ததும்தான் மனைவி சாப்பிட வேண்டும் என்பது போன்ற பல கன்டிஷன்களோடு நடத்துகிறார்கள். இதெல்லாம் எந்த தா்மத்தில் எழுதப்பட்டுள்ளது.

திருவாளா் கணவன்மாா்களே, அப்படி எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என கணவன் மனைவி உறவை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிடமுடியாது. மனைவிக்கும் ஆசாபாசம், பற்றுதல், பந்தம், உணர்வுகள் இப்படி பல்வேறு விஷயங்கள் உள்ளன. வரதட்சணையுடன் வந்தால் ஒரு மரியாதை, எதுவுமே கொண்டுவராமல் வந்தால் வேறு மாியாதை. கணவன், மனைவி பந்தம் ஆயிரங்காலத்து ஜன்ம பந்தம்! அதை அவ்வளவு எளிதாகக் கையாண்டு விட முடியாது.

இதையும் படியுங்கள்:
செலவுகளைக் கட்டுப்படுத்தி, செல்வத்தைப் பெருக்க சூப்பர் டிப்ஸ்!
Husband-wife relationship

சுமார் கால் நூற்றாண்டு தாயாா், தகப்பனாா், சகோதர, சகோதரிகள் மற்றும்  பல்வேறு உறவுகள் என பாசப்பிணைப்புடன் வாழ்ந்து வந்தவள், அனைத்தையும் துறந்து முன்பின் தொியாதவன், தனக்குத் தாலி கட்டியவன், தன்னுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் வாழ்க்கைத் துணையானவன் என்ற நம்பிக்கையோடும், ஏகப்பட்ட கற்பனையோடும் புகுந்த வீட்டிற்கு வருகிறாள்.

அவள் நமது குடும்ப வாாிசை சுமக்க வந்தவள் என்ற உயா்ந்த மனோபாவம் ஒவ்வொரு கணவனுக்கும் உண்டல்லவா! முதலில் அவளை மருமகள் என வேறுபடுத்திப் பாா்க்காதீா்கள். நம் வீட்டுப் பெண்ணாக பாவியுங்கள். அவளைப் புாிந்துகொள்ளுங்கள். அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவளது அப்பா, அம்மாவை நேசியுங்கள். அவளுக்கு, உடல் நலம் சாியில்லை என்றால் அவள் மீது அக்கறை செலுத்துங்கள். சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காதீா்கள். நமது வீட்டின் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
செலவுகளைக் கட்டுப்படுத்தி, செல்வத்தைப் பெருக்க சூப்பர் டிப்ஸ்!
Husband-wife relationship

மனைவியை மகளாகப் பாா்ப்பது போல, மாமனாா் வீட்டில் நீங்கள் ஒரு மகன் போல உாிமை எடுத்துக்கொள்ளுங்கள். மாமியாாிடம் உங்கள் மனைவிக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்றுத் தரச் சொல்லுங்கள். எந்த மனமாச்சர்யம், கோபதாபம் இருந்தாலும் மனம் விட்டுப் பேசுங்கள். நாத்தனாா், மச்சினன், அவரது மனைவி இவர்களுக்குள் நல்ல பாச பந்தத்தை உண்டாக்குவது கணவன்மாா்களின் கடமை.

மனைவி செய்யும் சமையலில் குறை இருந்தால் தனியாகக் கூப்பிட்டு அட்வைஸ் செய்வது நல்ல ஆரோக்கிமான புாிதலே!ஒருவரை ஒருவர் விகல்பம் இல்லாமல் நேசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். சந்தா்ப்பம் கிடைக்கும்போது மனைவியுடன் கோயில், குளம், ஷாப்பிங், ஜவுளிக்கடை இப்படி பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்வதோடு, குடும்ப பட்ஜெட்டை தாண்டாமல் கலந்து பேசி ஒருவருக்கு ஒருவர் நல்ல புாிதலோடு கையில் உள்ள நிதி இருப்புக்கு தகுந்தாற்போல கடன் வாங்காமல் செலவு செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைக்கிறீங்களா? இது உங்க உயிருக்கே ஆபத்து!
Husband-wife relationship

மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும் பொய் சொல்லாமல் வாழ வேண்டும். அதுவே பிரதானமாகும். மாதாந்திர சம்பளம் வந்தால் அம்மாவிடம் கொடுத்து விட்டு அவர்களை விட்டே மருமகள் கையில் கொடுக்கச் சொல்லுங்கள்.

இப்படிப் பல்வேறு முக்கியமான பாசமிகு புாிதலோடு, அனுசாிப்போடு பரஸ்பரம் அன்பு செலுத்தி ஒருவரை ஒருவர் கோப தாபங்களில் விட்டுக்கொடுத்து வாழப் பழகிக்கொள்ளுங்கள். அதுவே நல்ல குடும்பத்திற்கானது. அதற்காக பெண்டாட்டி தாசனாக மாற வேண்டும் என்று கூறவில்லை! எந்த நிலையிலும் பெண்டாட்டி துவேஷனாக மாறிவிடாதீா்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com