

1. முதலில் இரண்டு பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதன் தோலை நன்கு உரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கலவை இயற்கையாகவே பல்லிக்கு அலர்ஜி என்பதால் வெங்காயத்தை எடுத்துக் கொள்கிறோம்.
2. வீட்டில் இருக்கும் தீப்பெட்டியில் உள்ள 10 தீக்குச்சிகளை எடுத்துக்கொண்டு, அதன் முனையில் இருக்கும் மருந்துகளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தீக்குச்சியில் உள்ள Antimony Trisulfride என்ற சல்பர் கலவை பல்லிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
3. பிறகு ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி தீக்குச்சி மருந்தை போட்டு நன்கு கலக்கி கொண்டு, அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை இந்த சல்ஃபர் கலவை தண்ணீரில் நன்கு மூழ்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது வெங்காயத்தின் வெட்டிய பகுதியில் பற்பசையை(Toothpaste) நன்கு தடவிக் கொண்டு, அதன் பாதி பகுதியில் மிளகாய் தூளையும், மீதி பகுதியில் காபி தூளையும் தடவிக்கொள்ள வேண்டும் .இந்த கலவைகள் அனைத்தும் பல்லிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
5. இரவு வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகு பல்லிகள் அதிகம் காணப்படும், சமையலறை மேடை, சிங்கின் குழாய் பகுதி ,டைனிங் டேபிள் போன்ற இடங்களில் வைப்பதன் மூலம் இந்த வெங்காயம் கலந்து பொருட்களின் மணம் காரணமாக பல்லிகள் அவ்விடத்தை நெருங்கவே நெருங்காது. ஒரே இரவில் பல்லிகளை விரட்டி விடலாம். முக்கியமாக இந்த வெங்காயம் கலந்த கலவையை குழந்தைகள் கையில் கிடைக்காதவாறு வைக்க வேண்டும்.
மேற்கூறிய எளிய முறையை கையாள்வதன் மூலம் பல்லி தொலையிலிருந்து விடுபடலாம்.