இந்த 10 வேலைகளை AIயால் ஒருபோதும் பறிக்க முடியாது: மைக்ரோசாப்ட் அதிர்ச்சி தகவல்!

Jobs that AI can't do
Medical services
Published on

AI தொழில்நுட்பங்களின் வருகையால் கோடிங், ஹெச்.ஆர்., பிபிஓ வேலைகள் என அனைத்தும் படிப்படியாக ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்தெந்த வேலைகளை எல்லாம் ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களிடமிருந்து பறிக்க முடியாது என்பது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் AIயால் பாதிக்கப்படாத 10 வேலைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. Phlebotomists: மனிதர்களுடன் தொடர்பு கொண்டு மக்களிடம் இருந்து பாதுகாப்பாக ரத்த மாதிரிகளை எடுத்து அதனை முறையாகப் பராமரித்து ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்தும் Phlebotomistsகளின் வேலையை ஒருபோதும் AIயால் செய்ய முடியாது என்பதால் இதனை மனிதர்கள்தான் செய்ய முடியும்.

2. Nursing assistants: நோயாளிகளை கவனித்துக்கொள்வது அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து அன்புடனும் அர்ப்பணிப்புடனும் மனிதாபிமானத்துடனும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட செவிலியர் வேலையை AIயால் செய்ய முடியாது.

இதையும் படியுங்கள்:
சுதந்திர போராட்ட தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்!
Jobs that AI can't do

3. Ship engineers: சரக்கு போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கப்பல் போக்குவரத்தில் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளைக் கையாளும் திறன் கப்பல் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு மனிதர்களே முக்கியம் என்பதால் இதில்அவர்களைத் தவிர  AIயால் சிறப்பாக செயலாற்ற முடியாது.

4.Tire repairers: பணி அனுபவம் முக்கியமாகத் தேவைப்படும் சக்கரங்களை பழுது நீக்கும் பணிகளை மனிதர்களால் மட்டுமே திறம்பட செயலாற்ற முடியும் என்பதால் AIக்கு இங்கு வேலை இல்லை.

5. Fire fighters: ரோபோக்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் இதில் மிக முக்கியமானதாக இருப்பதால் இந்தத் துறையில் மனிதர்களுக்கே முன்னுரிமை.

6. Electricians: AI தொழில்நுட்பத்தால் முழுமையாக எலக்ட்ரீசியன் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் மனிதர்கள்தான் செய்ய முடியும் என மைக்ரோசாப்ட் அறிக்கை கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
திப்பு சுல்தானின் பட்டுக் கனவு: மைசூர் பட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?
Jobs that AI can't do

7. Occupational therapy assistants: Occupational therapy assistants வேலைகள் மனிதர்களோடு நேரடியாக தொடர்பு கொண்ட வேலையாக இருப்பதால் இந்த வேலையும் AIல் இருந்து பாதுகாக்கப்பட்ட வேலைகளில் இடம்பிடித்துள்ளது.

8. pipelayers: குழாய்கள் அமைப்பது, சீர் செய்வது போன்ற பணிகளில் pipelayers மட்டுமே ஈடுபட முடியும் என்பதால் ஏஐ இந்த துறையை தொட முடியாது.

9. Roofers: மேற்கூரை வேய்வது அவற்றை சீர் செய்வது போன்ற வேலைகளை roofers மட்டுமே செய்ய முடியும் என்பதால் AIக்கு இங்கு வேலை இல்லை.

10. Carpenters: மர வேலைப்பாடுகளை மனிதர்களே திறம்பட செயலாற்ற முடியும் என்பதால் AI வருகையில் இருந்து carpenters தப்பித்துள்ளனர்.

மேற்கூறிய 10 தொழில்களிலும் மனிதர்களே திறம்பட செயலாற்ற முடியும் என மைக்ரோசாப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com