
நம்மில் பலருக்கும் பட்டு என்றதும் சட்டென நினைவுக்கு வருவது பனாரஸ் பட்டு, காஞ்சி பட்டு, பாலுச்சாரி பட்டு, படோலா பட்டு, மைசூர் பட்டு என்று பலவிதமான பட்டுகள்தான். பட்டு என்பது பட்டுபூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவதுதான் என்றாலும் அதை நெய்யும் முறைகளை வைத்து அதில் பல ரகங்கள் உருவாகின்றன. சிக்கலான வடிவமைப்புகளுக்கும் துடிப்பான வண்ணங்களுக்கும் பெயர் பெற்ற மைசூர் பட்டு திப்பு சுல்தானுடன் தொடர்புடையது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கர்நாடகாவில் பட்டு வளர்ப்பை நிறுவுவதில் திப்பு சுல்தான் முக்கியப் பங்கு வகித்தார். பட்டுப்புழு வளர்ப்பு என்பது பட்டு உற்பத்திக்காக வளர்ப்பது ஆகும். இது பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது, ஆனால், திப்பு சுல்தான் ஆட்சியின்போது இது ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது. அதுதான் மிசோரி பட்டைத் தேடி உலகளாவிய மக்களை ஈர்த்து வருகிறது.
திப்பு சுல்தான் தனது ராஜ்ஜியத்தின் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு தொலைநோக்கு ஆட்சியாளராக விளங்கினார். குறிப்பாக, விவசாயம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதில் அவர் அதீத ஆர்வம் காட்டினார். பட்டு உற்பத்திக்கு முக்கியமான கரும்பு, பருத்தி, மல்பெரி போன்ற பயிர்களைப் பயிரிட ஊக்குவித்ததோடு, திப்பு சுல்தான் கர்நாடகாவில் பல பட்டு பண்ணைகளை நிறுவினார்.
அங்கும் மல்பெரி மரங்கள் வளர்க்கப்பட்டு பட்டுப்புழுக்கள் ஜவுளி உற்பத்தியில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி உள்ளூர் மக்களுக்குக் கற்பிக்க ஐரோப்பாவிலிருந்து நிபுணர்களை திப்பு சுல்தான் வரவழைத்தார். இது கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளின் தரத்தை மேம்படுத்த உதவியதோடு, சர்வதேச சந்தையில் அதிக போட்டித்தன்மையை உருவாக்கியது. அதனால் அவரது ஆட்சியில் கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு உயர் தரம் வாய்ந்ததாக மாறியதோடு, ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளில் பலராலும் அதிகம் விரும்பப்பட்டது.
பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிப்பதில் திப்பு சுல்தானின் முயற்சிகள் கர்நாடகாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதியதால் இந்த மாநிலம் இன்றும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. திப்பு சுல்தானின் பாரம்பரியம் இன்றும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள சன்னபட்னா என்ற சிறிய நகரம் பட்டுப்புழு வளர்ப்பு பாரம்பரியத்திற்கு பல தசாப்தங்களாகப் பெயர் பெற்று விளங்குகிறது. சன்னபட்னாவில் உள்ள பட்டு வளர்ப்புத் தொழில் முதன்மையாக மல்பெரி பட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவதற்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்பெரி மரங்கள் பெரிய அளவில் வளர்க்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது.
மேலும், இம்மர இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நகரத்தில் ஏராளமான கைத்தறிப் பட்டு நெசவாளர்கள் உள்ளதற்கும், கர்நாடகாவின் மைசூர் பட்டு புகழ் பெற்று விளங்குவதற்கும் அன்றைய திப்பு சுல்தானின் ஐடியாக்கள் இன்று வரை உதவிகரமாக இருக்கின்றன.