

அலுமினியம் ஃபாயில் சமையலுக்கு மட்டுமல்ல, பல சாமர்த்தியமான பயன்பாடுகளுக்கும் ஏற்றது. மரச்சாமான்களின் காலுக்கடியில் வைப்பதால் எளிதில் இடமாற்றம் செய்யலாம். ரிமோட், பொம்மை பேட்டரியில் ஸ்ப்ரிங் லூசானால் இடைவெளியை நிரப்பி வேலை செய்யச் செய்யலாம். தீப்பெட்டி, மெழுகுவர்த்திகளை சுற்றி வைப்பதால் ஈரத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்; மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரியவும் உதவும்.
நீங்கள் உங்கள் சமயலறையில் வைத்திருக்கும் பளபளவென்ற லேசான அலுமினியம் ஃபாயிலில் பல நன்மைகள் இருக்கிறது. இந்த ஃபாயில் உங்களுக்குப் பல விஷயங்களில் உபயோகமாக இருக்கிறது. அந்த பயன்கள் என்னென்ன என்பதை இப்பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
1. துணிகளை இஸ்திரி செய்யும்போது
நாம் பயன்படுத்தும் இஸ்திரி போர்டில் துணிகளை சுருக்கம் இல்லாமல் இஸ்திரி போடுவது சிரமமான காரியமாக இருக்கிறது. உங்கள் இஸ்திரி போர்டின் மேல் அலுமினியம் ஃபாயில் வைத்து அதன்மேல் துணியை பரப்பி அதற்குப்பின் இஸ்திரி செய்ய இந்த ஃபாயில் துணிகளுக்கு வேண்டிய வெப்பத்தைத் தரும். துணிகளை அதிக வெப்பத்தோடு சுருக்கம் விழாமல் நீங்கள் உங்கள் வேலையை சுலபமாக முடிக்கலாம்.
2. வெள்ளிப் பொருட்கள் பளபளக்க
உங்கள் வெள்ளிப் பொருட்கள் பழையதாகி மங்கி உள்ளதா? கவலையே வேணாடாம். கொஞ்சம் அலுமினியம் ஃபாயிலுடன் சிறிது உப்பும் குளிர்ந்த தண்ணீரும் கலந்து ஒரு பாத்திரத்தில் இதை வைத்து அதில் அரைமணி நேரம் ஊறவைத்து விட்டுப் பின் கழுவ உங்கள் வெள்ளிப் பொருட்கள் பாலிஷ் போட்டது போன்று பளபளக்கும். இதற்குக் காரணம் அலுமினியம் ஃபாயிலில் உள்ள அயன்தான்.
3. கத்தரிக்கோலை கூர்மையாக்க
அலுமினியம் ஃபாயில் பேப்பர் உங்கள் வீட்டில் மழுங்கிய நிலையில் உள்ள கத்தரிக்கோலைக் கூர்மையாக்கக் கூடியதாகும். வீட்டில் உள்ள அலுமினியம் ஃபாயிலை கத்தியை வெட்டும் இடத்தில் நன்கு கெட்டியாகப் சுற்றி வைக்கவும். அப்படியே சில மணிநேரங்கள் வைத்தபின் நீங்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்த அவை நன்கு வெட்டும். இதை அடிக்கடி செய்வதால் கத்தரிக்கோல் நன்கு கூர்மையாகவும்.
4. உங்கள் செடிகளைப் பாதுகாக்க
பூச்சிகளிலிருந்து உங்கள் செடிகளைப் பாதுகாக்க அலுமினியம் ஃபாயில் போதும். அலுமினியம் ஃபாயிலை துண்டு துண்டாக்கி மண்ணோடு சேர்க்க அவை செடிகளுக்கும் பாதிப்பு உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கும். மேலும் இந்த அலுமினியம் ஃபாயிலில் உள்ள வெளிச்சம் போட்டோசைந்தேசிஸ் ஊக்குவித்து செடிகளின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும்.
5. பெயிண்ட் ப்ரஷ் ஈரமாக்க
உங்கள் பெயிண்ட் ப்ரஷ் காய்ந்துவிடாமல் ஈரப்பசையுடன் இருக்க, அதை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றி வைக்கவும். அது உபயோகப்படுத்தாமல் இருக்கும்போது காய்ந்து விறைப்பாகும். இதை அலுமினியம் ஃபாயில் தடுத்து ஈரப்பசையுடன் வைக்கும். இதனால் நீங்கள் மறுபடியும் பயன்படுத்தும்போது சுலபமாக இருக்கும்.
6. நீங்கள் உங்கள் வீட்டு மரச்சாமான்களை இடமாற்றம் செய்ய
உங்கள் வீட்டு மரச்சாமான்களை இடமாற்றம் செய்யப் போகிறீர்களா? அப்படியென்றால் உங்கள் மரச்சாமான்களின் காலுக்கடியில் அலுமினியம் ஃபாயிலை வையுங்கள். இதில் ஃபாயிலின் பளபளக்கும் மேலே இருக்கும்படி வைக்கவும். இதன் மூலம் உங்கள் மரச்சாமான்களை சுலபமாக வேறு இடங்களுக்கு மாற்ற முடியும்.
7. ரிமோட் கண்ட்ரோல் மற்றும் பொம்மைகள்
உங்கள் வீட்டில் ரிமோட் கண்ட்ரோல் அல்லது உங்கள் குழந்தையின் பொம்மை வேலை செய்யவில்லை என்றால் இதில் உங்கள் பாடில் (pad) ஸ்ப்ரிங் லூசாகியிருக்கும் ஒரு பாடில் அலுமினியம் ஃபாயில் சுற்றி ஸ்ப்ரிங் மற்றும் பாடுக்கு இடையில் வைக்க அவை வேலை செய்யும்.
8. தீப்பெட்டிப் பாதுகாப்பு
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் தீபபெட்டிகளைச் சுற்றி அலுமினியம் ஃபாயிலைவைக்க அவை ஈரமாவதைத் தடுக்கமுடியும். அலுமினியம் ஃபாயிலைக் கொண்டு மெழுகுவர்த்திகளை சுற்றிவைக்க அவை நன்கு பாதுகாக்கப்படும்.
9. மெழுகுவர்த்திகள் அதிக நேரம் எறிய
மெழுகுவர்த்தி உருகும்போது திரியின் பக்கங்களில் பட்டு அவை கெட்டியாக இருக்கும். இதனால் திரும்ப மெழுகுவர்த்தி ஏற்றுவது சிரமமாக இருக்கும். அலுமினியம் ஃபாயிலை மெழுகுவர்த்தியின் வெளிப்பக்கம் சுற்றிவைக்க இதனால் வெப்பம் அலுமினியம் ஃபாயில் மூலம் கீழ்நோக்கி பாயும். இதனால் மெழுகு உருகி கட்டியாவது தடுக்கப்படும். மேலும் இப்படிச் செய்வதன் மூலம் மெழுகுவர்த்தி அதிக நேரம் எரியும்.
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டின் அன்றாடச் சிரமங்களை நொடிப் பொழுதில் தீர்த்து, உங்கள் நேரத்தையும் பணத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்த முடியும்.