கறுத்த பித்தளை விளக்கு 5 நிமிடத்தில் தங்கம் போல் மின்னும்! சிரமமில்லாத 2 எளிய வீட்டு முறைகள்!

சிரமப்பட்டு தேய்க்க தேவையில்லை; சமையலறை பொருட்களை கொண்டே பித்தளை விளக்கை புதிது போல மாற்றலாம்.
பித்தளை விளக்கு
பித்தளை விளக்குGemini image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

பாரம்பரியமிக்க நமது இந்தியக் வீடுகளில் தினசரி வழிபாட்டின் போதும், விசேஷ நாட்களிலும் பித்தளை விளக்கேற்றுவது நம் வழக்கம். இருப்பினும், தொடர்ச்சியாக விளக்கேற்றுவதாலும், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் பித்தளை உலோகம் வினைபுரிவதாலும், விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் கரியமிலத்தால் அது நாளடைவில் கறுத்துப் போகிறது. கறுத்துப் போன பித்தளை விளக்கை அதிக சிரமமின்றி, வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களைக் கொண்டு மிகக் குறைந்த நேரத்தில் மீண்டும் பளிச்சென்று புதிது போல மாற்றுவது எப்படி என்பதை 2 முறைகளில் இக்கட்டுரையில் காண்போம்.

1. முதல் முறை

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த புளி -சிறிதளவு

எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு அல்லது தூள் உப்பு -1 டீஸ்பூன்

பாத்திரம் கழுவும் திரவம் / சோப்

மென்மையான பாத்திரம் தேய்க்கும் நார் (Scrubber) மற்றும் பழைய பல் துலக்கும் பிரஷ்

துடைப்பதற்கு உலர்வான பருத்தித் துணி

செய்முறை: முதலில் விளக்கில் உள்ள பழைய எண்ணெய் மற்றும் திரியை முழுமையாக அகற்றிவிட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தைச் சேர்த்து, விளக்கின் மீதுள்ள எண்ணெய் பசையை நன்றாகக் கழுவி எடுக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொண்டு, அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். புளி மற்றும் எலுமிச்சையில் உள்ள இயற்கை அமிலத்தன்மை (Citric & Tartaric Acid) பித்தளையின் கறையைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

தயாரித்த கலவையை விளக்கு முழுவதும், குறிப்பாக இடுக்குகள் மற்றும் வேலைப்பாடுகள் உள்ள இடங்களில் நன்றாகப் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மென்மையான நார் கொண்டு லேசாக அழுத்தித் தேய்த்தால் கருமை சுலபமாகக் கழன்று வரும். விளக்கில் உள்ள நுட்பமான வேலைப்பாடுகள் மற்றும் இடுக்குகளில் படிந்துள்ள கறைகளை அகற்ற பழைய பல் துலக்கும் பிரஷைப் பயன்படுத்தலாம்.

பித்தளை விளக்கு
பித்தளை விளக்குGemini image

கறைகள் நீங்கியதும் விளக்கைத் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். கழுவிய உடனடியாக ஒரு காய்ந்த பருத்தித் துணியால் விளக்கை நன்றாகத் துடைக்க வேண்டும். விளக்கில் நீர் துளிகள் அப்படியே காய்ந்தால் தண்ணீர்த் திட்டுக்கள் விழுந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள்ள எலித் தொல்லையா? பொறி வைக்காமலே ஓட ஓட விரட்ட 5 எளிய இயற்கை வழிகள்!
பித்தளை விளக்கு

முக்கியமாக பித்தளை விளக்கை முழுமையாகத் துடைத்த பிறகு, அதன் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது விபூதியை லேசாகத் தடவி வைத்தால், காற்று மற்றும் ஈரப்பதத்தால் விளக்கு சீக்கிரமாக மீண்டும் கறுத்துப் போகாமல் நீண்ட நாட்களுக்குப் பளபளப்பாக இருக்கும்.

2. இரண்டாம் முறை

அரிசி கழுவிய தண்ணீருடன் சில பொருட்களைச் சேர்த்து ஊறவைக்கும் ஒரு சிறப்பு.

செய்முறை: சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, தடிமனான அரிசி கழுவிய தண்ணீரில் (கஞ்சித் தண்ணீர் அல்லது அரிசி ஊறவைத்த தண்ணீர்) புளியை ஊறவைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். எண்ணெய் பசை நீக்கப்பட்ட பித்தளை விளக்கை பாகங்களாக கழற்றி இந்த அரிசித் தண்ணீர் + புளிக் கரைசலில் 15-20 நிமிடங்கள் முழுமையாக மூழ்கி இருக்குமாறு ஊறவைக்கவும். ஊறிய பிறகு, நார் அல்லது பழைய பிரஷ் கொண்டு தேய்த்தால், அரிசி தண்ணீரில் உள்ள பிசுபிசுப்புத் தன்மை (Starch), புளி மற்றும் எலுமிச்சையின் அமிலத் தன்மையை விளக்கின் மீது நீண்ட நேரம் ஒட்டியிருக்கச் செய்யவதால் கறைகள் மிக சுலபமாக நீங்கி விளக்கு பளபளப்பாகும்.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்டியடிக்க இந்த 5 இயற்கை வழிகள் போதும்!
பித்தளை விளக்கு

பித்தளை விளக்குகளைச் சுத்தம் செய்ய நமது சமையலறையில் உள்ள அரிசி கழுவிய தண்ணீர், புளி, எலுமிச்சை மற்றும் உப்பு போன்ற இயற்கைச் சாதனங்களைக் கொண்டே அவற்றின் பழமையையும் பொலிவையும் மீட்டெடுக்க முடியும். மேற்கண்ட எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் பித்தளை விளக்குகளை எப்போதும் புதிது போல மின்ன வைக்கலாம்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், கைகள் வலிக்காமல் மிகக் குறைந்த நேரத்தில் உங்கள் வீட்டுப் பூஜை அறை பித்தளை விளக்குகளைப் புதிது போல மின்னச் செய்ய முடியும். மேலும், விளக்குகள் சீக்கிரத்தில் மீண்டும் கறுத்துப் போகாமல் நீண்ட நாட்களுக்குப் பொலிவுடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்:

கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை நொடியில் மிளிர வைக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள்!

logo
Kalki Online
kalkionline.com