இந்த உணவுகளில் இவ்வளவு கார்போஹைட்ரேட் இருக்கா?

Are these foods high in carbohydrates?
Are these foods high in carbohydrates?https://tamil.hindustantimes.com
Published on

கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து அடங்கிய பொருளானது, நம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடிய முக்கியமானதொன்று. எனினும் மாவுச்சத்து உடலில் அதிகளவு சேரும்போது எதிர்மறை விளைவுகளாக நீரிழிவு நோய் வரவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்ந்து இதய நோய்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். மாவுச்சத்து அதிகமுள்ள காரணத்திற்காக நாம் தவிர்க்க வேண்டிய பன்னிரண்டு வகை உணவுகளின் பட்டியலை இங்கே பார்ப்போம்.

குறைந்த கலோரி கொண்ட சால்ட்டைன் அல்லது சோடா கிராக்கர்கள் (saltine or soda crackers). இவற்றின் எடையில் 67 சதவிகிதம் மாவுச் சத்து உள்ளது. வைட்டமின் மற்றும் மினரல்களின் அளவும் குறைவு.

அதிகளவில் உண்ணப்படும் மக்காச்சோள செரியலில் (Cereal), ஒரு கப் அளவில் 25.7 கிராம் ஸ்டார்ச் உள்ளது.

அரிசிச் சோற்றில் 63.6 சதவிகிதம் ஸ்டார்ச் உள்ளது.

விலை குறைவாகவும், அதி விரைவில் தயாரிக்க உதவுவதுமான நூடுல்ஸ்களில் அதன் எடையில் 56 சதவிகிதம் ஸ்டார்ச் இருக்கிறது.

ஓட்ஸ் ஓர் ஆரோக்கியம் நிறைந்த  உணவாகக் கருதப்பட்டபோதும், ஒரு கப் ஓட்ஸில் 46.9 கிராம் ஸ்டார்ச் உள்ளது.

முழு கோதுமையின் உள் பகுதியில் இருக்கும் வித்தகவிழையம் (endosperm) என்னும் மாவுப்பொருளே (மைதா) ரொட்டி, பரோட்டா, பூரி போன்ற சுவையான  உணவுகளைத் தயாரிக்க உதவுகிறது. இதில் அதன் எடையில் 68 சதவிகிதம் ஸ்டார்ச் உள்ளது.

இதையும் படியுங்கள்:
போர் அடிக்கும் மனநிலையை மாற்றி ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுவது எப்படி?
Are these foods high in carbohydrates?

உலகளவில் அதிகமாக உண்ணப்படும் பிரட், டார்டில்லாஸ், மஃபின், பேகல் (bagel) போன்ற உணவு வகைகளில் நாற்பதிலிருந்து நாற்பத்தி நான்கு சதவிகிதம் வரை ஸ்டார்ச் உள்ளது.

மக்கரோனி, ஸ்பெகெட்டி, ஃபெட்டுஸைன் (fettuccine) என்ற பெயர்களில் வரும் நூடுல்ஸ் வகைகளில் ஒன்றான பாஸ்தாவில் 62.5  சதவிகிதம் ஸ்டார்ச் உள்ளது.

உருளைக் கிழங்கில் அதன் எடையில் 18 சதவிகிதம் மாவுச் சத்து உள்ளது.

சிறு தானியங்களில் சிறந்ததாகக் கருதப்படும் கம்பு (Pearl millet) மாவில், ஒரு கப் மாவு 83 கிராம் ஸ்டார்ச் கொண்டுள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற பிரெட்ஸெல் (Pretzel) என்ற ஸ்நாக்ஸில் அதன் எடையில் 71.3 சதவிகிதம் ஸ்டார்ச் உள்ளது.

கார்ன்மீல் (cornmeal) என்ற பொருள் மக்காச்சோளத்தின் கர்னெல் (kernel) என்ற பகுதியை கொர கொரப்பாக அரைத்தெடுக்கப்படும் மாவாகும். இதில் 74 சதவிகிதம் ஸ்டார்ச் உள்ளது.

அவரவர் உடம்பின் தேவைக்கேற்ப மேற்கண்ட உணவுகளில் தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தும் அல்லது குறைவாக உட்கொண்டும் ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com