பணம் கையில் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயங்கள் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும்!

Don't have money?
Increase your savings
Published on

க்காலத்திற்கு செலவு செய்வது என்பது, தேவைக்கு செலவு செய்வது. தேவைக்கு அதிகமாய் செலவு செய்வது என இருவகை படுத்தலாம். ஒருவர் வருமானத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தேவைகளை பூர்த்தி செய்து அதே நேரம் தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்வது சிக்கனம். தேவைக்கு கூட செலவு செய்யாமல் இருப்பது நப்பித்தனம். கருமிதனம் என்றும் கூறலாம்.

சிக்கனத்தையும், நப்பித்தனத்தையும் சிலர் குழப்பி கொள்கிறார்கள்.  தேவைக்கு செலவு செய்யாத ஒருவரை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். அதுபோன்றே தேவைக்கு அதிகமாய் செலவு செய்பவரையும்.

வீட்டின் வரவு செலவு கணக்கு எழுதும் பழக்கம் எங்கள் வீட்டில் என் அம்மா, மாமியார் போன்றவர்களுக்கே உண்டு. அதனால் விலைவாசி எந்த மாதத்தில், எந்த பொருள் விலை கூடுகிறது என்பதை எல்லாம் தெளிவாக புள்ளி விவரம் வைத்திருப்பார்கள்.. புளி, மிளகாய் வற்றல் இதெல்லாம் மலிவாய் இருக்கும் நேரத்தில்  வாங்கி பக்குவப்படுத்தி  பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். மிளகாய் வற்றல் 80 ரூபாய்க்கு விற்கும் போது அவர்கள் 30 ரூபாய்க்கு வாங்கிய வற்றலை உபயோகிப்பர்.

மூடை நிறைய அரிசி இருந்தாலும் பானையில் அளவாகத்தான் போடனும் என்பாள் என் ஆச்சி.  எனக்குத் தெரிந்து எதையும் வீணாக்கி தரையில் கொட்டிய நினைவு இல்லவே இல்லை. அப்போது குளிர்சாதன பெட்டி இல்லாத நிலையில் வீணாக்காமல் செய்வது பெரிய காரியம்.

இப்போது உள்ள காலத்தில் நமக்கே தெரியும் எவ்வளவு உணவுப் பொருள்கள் பாக்கெட்டில் ஊற்றி குப்பையில் கொட்டப்படுகிறது என்பது அது வீடுகளிலும், சரி ஹோட்டல் மெஸ்களிலும் சரி. தண்ணி சிக்கனத்தை வலியுறுத்தும் கலத்தில் கல்யாண வீட்டில் வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களை மீதி தண்ணீரோடு வைத்துவிட்டு வருவது சரியா என்று யோசிங்கள். நான் வெட்கப்பட மாட்டேன் கையோடு கொண்டு எடுத்து வந்து விடுவேன். பிறகு தண்ணீர் குடித்த பிறகே  தூர போடுவேன்.

என் வீட்டில் எனக்கு உதவியாக வேலை செய்ய வரும் பெண்கள் என்னிடம் கற்றுக் கொள்வது இந்த சிக்கனம்தான். அதை அவர்களே சொல்லுவார்கள். காய்கறி நறுக்க சொன்னால் கூட டிவி ஷோவில் செப்கள் நறுக்குவதுபோல தலை பாகம் 1/4 inch.. அடிபாகம் 1/4 இன்சும் நறுக்கி தூர போட்டுவிட்டு மீதிக்காயை நறுக்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
என்னது? தங்கத்தில் புதிய கூட்டணியா? 9 காரட் தங்கமா?
Don't have money?

அந்தக் காலத்தில் காய் வெட்டுவதும் வெங்காயம் நறுக்குவதும் என்பது துளி கூட காய் வீணாகாமல் நறுக்குவார்கள். வெங்காயத்தின் தோலை மட்டும் தான் உரிப்பார்கள். இப்போது  கலர் வெள்ளையாக தெரியும் வரை கத்தியால் வெட்டி தூக்கி போட்டு விடுகிறார்கள் காய்கறிகளின் தோலையும் பீலரை வைத்து வெள்ளையாக தெரியும் வரை சீவி போடுகிறார்கள்.காய்கறி விற்கும் விலையில் சிக்கனம் என்பது யார் மனதிலும் இல்லை.

என் வீட்டிற்கு என் உதவிக்கு வரும் பெண் கூறுவாள் தட்டில் சாதம் குழம்பு போட்டு காய்கறியை வைத்து பிள்ளைகளுக்கு  கொடுத்து விடுவேன். சாப்பிட முடியவில்லை என்றால் பிள்ளைகள்  வெளியே கொண்டுபோய் கொட்டுவார்கள் என்பாள். இப்படிப்பட்டவள் எவ்வளவு சம்பாதித்தாலும் எப்படி பணம் நிற்கும். இன்று பொருட்கள் விற்கும் விலையில் தூர கொட்டுவது சரி கிடையாது.

சிறுவயதில் என் பிள்ளைகள்  சாப்பிட முடியவில்லை என்று கூறினால், "ஒரு பருக்கை சாதம் வீணாக்கினால் ஒன்பது நாள் பட்டினி" என்று ஆச்சி சொல்லுவதை சொல்லி அவர்களை பயமுறுத்துவேன். அதையும் மீறி வீணாக்கினால் "நீங்களே கொண்டுபோய் காம்பவுண்ட் சுவரில் பூனைக்கு வைத்துவிட்டு வாங்க சாதத்தை வீணாக்குற பாவத்தை நான் செய்யமாட்டேன்" என்று கூறிவிடுவேன். அப்படியே அவர்கள் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு,  அதற்குப் பிறகு உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள். இன்றுவரை உணவை எங்கள் வீட்டில் யாரும் வீணாக்குவதில்லை.

நாங்கள் இப்படி இருப்பதை பார்த்து கேலி செய்த வேலை பார்க்கும் பெண் இப்போது தாங்களும் அதை கடைப்பிடிப்பதாக கூறும்போது ஒரு சிறு சந்தோஷம். ஒன்று புரிந்துகொள்ள வேண்டும் சிக்கனம் என்பது சிறு சிறு செயல்களில் இருந்தாலே பெரிய அளவில் பலன் கிட்டும். முதலில் எந்த பொருளையும் வீணாக்க கூடாது. 

இதையும் படியுங்கள்:
நல்வாழ்க்கை உயர்வுக்கான நான்கு வகை நிலைப்பாடுகள் எவை தெரியுமா?
Don't have money?

எவ்வளவு சம்பாதித்தாலும், திட்டமிட்டு செலவழிக்காவிட்டால் பணம் கையில் நிற்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானதற்கு சிக்கனமாக செலவு செய்தாலே வரவிற்குள் செலவை அடக்கிவிடலாம்.

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும். இந்த நிலையில் சிக்கனமாக இருப்பது ஒன்றே நம் கண் முன் தெரியும் எளிதான வழி. எந்த நேரத்தில் எப்போது அவசர செலவுகள் வரும் என்று சொல்ல முடியாது. அதை சமாளிக்க எப்போதும் சேமிப்பு அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com