
பொதுவாக எல்லா மனிதர்களுமே அவ்வப்போது தம் மனதிற்குள் அவ்வப்போது பேசிக்கொள்வது வழக்கம்தான். ஆனால் சிலர் தனியாக கார் ஓட்டிச் செல்லும்போது தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வழக்கமுடை யவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் ஆளுமையின் ஆழமான அம்சங்களை பிரதிபலிக்கின்றன என்று உளவியல் கூறுகின்றது.
1. எளிதாக பிரச்னைகளை தீர்ப்பவர்கள்;
வாகனம் ஓட்டும்போது தனக்குள் பேசிக்கொள்ளும் நபர் எளிதில் பிரச்னைகளை தீர்க்கக் கூடியவராக இருப்பார். வாகனம் ஓட்டுவதிலும் கவனம் செலுத்தி, அதே சமயத்தில் தனது பிரச்னைகளை பற்றி சமாளிக்க திட்டங்கள் அல்லது யோசனைகளை பற்றியும் சிந்திக்கிறார்கள். இது செல்ஃப் டாக் எனப்படும் சுயபேச்சின் ஒரு வடிவமாகும். சுயபேச்சு என்பது மக்கள் தங்கள் எண்ணங்களை ஒழுங்காக அமைக்கவும், கருத்துக்களை தெளிவுபடுத்தவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். மன அழுத்தத்தை நிர்வாகிப்பதற்கும், சவாலான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் இது ஒரு நல்ல வழிமுறையாகும்.
2. ஒரே நேரத்தில் பல வேலைகள் (மல்டிடாஸ்கிங்);
பெரும்பாலும் வண்டி ஓட்டுபவரின் கண்கள் சாலையில் கவனம் செலுத்தினாலும், பக்கவாட்டுக் கண்ணாடியைப் பார்த்து பின்னால் வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறதா என கவனமாக ஆராயவும் செய்யும்.
அவரது கைகள் காருக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை மாற்றுவது, போன் வந்தால் அதைக் கட் செய்வது என பல வேலைகளை செய்யும். ஆனால் தங்களுக்குள் பேசிக் கொள்பவர்கள் மேற்கண்ட அனைத்தையும் செய்துகொண்டே தனக்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்னைகளைப் பற்றி உரக்கப்பேசவும் செய்கிறார்கள்.
3. திட்டமிடுவதில் திறமைசாலிகள்;
வாகனம் ஓட்டும்போது தனக்குள்ளே பேசிக்கொள்வதன் மூலம் அந்த நேரத்தை முக்கியமான திட்டமிடலுக்கு பயன்படுத்துகிறார்கள். எண்ணங்களை ஒழுங்கமைக்கிறார்கள். வரவிருக்கும் நிகழ்வுகள் அல்லது பணிகளுக்கு மனதளவில் தயாராகிறார்கள். திட்டங்களை வாய்மொழியாக சொல்வதன் மூலம் தங்கள் இலக்குகளை இன்னும் தெளிவாக காட்சிப்படுத்தவும் அவற்றை அடைய தாம் எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றி சிந்திக்கவும் செய்கிறார்கள். இதனால் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வாழ்க்கையில் அதிக உற்பத்திதிறன் மற்றும் சிறந்த செயல் திறனுக்கு வித்திடும்.
4. தனிமை உணர்வுக்கு இடமில்லை;
நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது சிலர் தனிமையாக உணர்வார்கள். ஆனால் தம்முடன் அரட்டை அடிப்பவர் களுக்கு தனிமை உணர்வு வராது. போர் அடிக்காது. விடுதலை உணர்வளிப்பதாகக் கூடத்தோன்றும். தங்கள் சொந்த எண்ணங்களில் ஆறுதலையும் தோழமையையும் காண்கிறார்கள்.
5. சுயபரிசோதனை;
வாகனம் ஓட்டும்போது தமக்குள் பேசிக்கொள்பவர்கள் அதிக அளவிலான சுயபரிசோதனையை மேற்கொள் கிறார்கள். தங்கள் புரிதலுக்கும் தனிப்பட்ட வளர்ச்சிகளுக்கும் வழி’காட்டும் தங்கள் உணர்வுகளை பகுப்பாய்வு செய்கின்றனர். தமது பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி சிந்தித்து நல்ல ஆழமான சுயபரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
6. படைப்பாற்றல் மிக்கவர்கள்
வாகனம் ஓட்டும்போது தனக்குத்தானே பேசிக்கொள்வது பிரச்னை தீர்ப்பதற்கான அறிகுறி மட்டும் அல்ல, படைப்பாற்றலின் அறிகுறியும் கூட. இவர்கள் பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து தங்கள் கருத்துக்களை தனித்துவமான வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். வாகனம் ஓட்டும்போது மனம் சுதந்திரமாக அலைந்து திரிந்து பல்வேறு யோசனைகளை ஆராயும். இது படைப்பாற்றலைத்தூண்டி புதுமையான எண்ணங்கள் அல்லது தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.