சிறிய படுக்கை அறையை சிறப்பாகப் பயன்படுத்த சில குறிப்புகள்!

bedroom hacks for small rooms
bedroom hacks for small rooms
Published on

bedroom hacks for small rooms: ஒரு அறையில் இடத்தை சேமிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. சிறிய படுக்கையறையை விசாலமான இடமாக ஆக்குவதற்கு அதாவது வரையறுக்கப்பட்ட இடத்தை அதிகப்படுத்த சில உபயோகமான ஹேக்குகளை இப்பதிவில் காணலாம்.

1) சின்ன படுக்கை அறையில் தரை இடத்தை மிச்சப்படுத்த சுவர்களில் அலமாரிகளை அமைக்கலாம். படுக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் அலமாரிகளை அமைக்கலாம்.

2) பயன்படுத்தப்படும் தரை இடத்தை குறைப்பதற்கும், படுக்கை அறையில் குறைவான இடத்தை பயன்படுத்துவதற்கும் கீழே டிராயர்கள் கொண்ட கட்டில் படுக்கை ஒரு பயனுள்ள வழியாகும்.

3) கீழே சேமிப்பு பெட்டிகள் கொண்ட படுக்கையை பயன்படுத்த அதில் தினசரி தேவைப்படாத பொருட்களை அங்கே வைக்கலாம்.

4) அடிக்கடி பயன்படுத்த தேவையில்லாத பொருட்களை சேமிக்க படுக்கைக்கு மேலே அலமாரிகள், சுவரில் பொருத்தப்பட்ட அலமாரிகளை வைக்க இடத்தை சேமிக்கலாம்.

5) ட்ரெஸ்ஸிங் டேபிள் இடத்தை அடைக்கும். எனவே அதற்கு பதிலாக மிதக்கும் அலமாரியை பயன்படுத்தலாம்.

6) துணிகளை தொங்க விடவும், அலங்காரப் பொருட்களை தொங்க விடவும் தரையிலிருந்து கூரை வரையிலான அலமாரிகளை பயன்படுத்தலாம்.

7) தொங்கும் அலமாரிகள் மட்டுமல்லாமல் அதற்குள் அதிகமாக ஷெல்ப்களை பொருத்தவும், அதன் முழு இடத்தையும் பயன்படுத்தும் வகையில் அலமாரியில் ஒரு டிரஸ்ஸரை வைப்பது கூட அதிகமான தரை இடத்தை அனுமதிக்கும்.

8) சுவர் படுக்கையும் ஒரு நல்ல யோசனை தான். (Wall bed)

9) படுக்கை அறையில் மூலைகள் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை. எனவே மூலையில் அலமாரிகளை அமைக்க இடத்தை சேமிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு ரூபாய் கூட ஒரு கோடி: சிறிய சேமிப்பு கூட பெரிய தொகையாக மாறலாம்!
bedroom hacks for small rooms

10) தொங்கும் சேமிப்பு அலமாரிகள், தலையில் படாத உயரத்தில் சேமிக்க வேண்டிய பொருட்களுக்கு ஏற்ப அவற்றின் உள் அமைப்பை வடிவமைக்கலாம்.

11) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோக்கங்களைக் கொண்ட பல தளவாடங்கள் இப்போது நிறைய வந்துள்ளன. அதாவது காபி டேபிளில் கீழ் சேமிப்பு பகுதி மற்றும் மேல்புறம் தூக்கக் கூடிய வகையில் உள்ளது. இதை வேலை செய்யும் டேபிளாகவும் பயன்படுத்தலாம்.

12) சுவரில் மடித்து மாட்ட கூடிய மேசைகளை வாங்கினால் டைனிங் டேபிளாகவும் பயன்படுத்தலாம்; வேலை செய்வதற்கு ஏற்ற மேஜையாகவும் பயன்படுத்தலாம்.

13) டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன்னுக்கு பதிலாக சீலிங் பேனை பொறுத்த இடத்தை சேமிக்கலாம். டி.வியை சுவர்களில் பொருத்த இட வசதி கிடைக்கும்.

14) அறையில் உள்ள ஜன்னலுக்கு மேலேயும், சுற்றிலும் கூட அலமாரிகளை அமைக்கலாம். துணிமணிகள், புத்தகங்கள், நினைவுப் பொருட்கள், கோப்பைகளை வைக்கவும் அந்த இடத்தை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கலைநயத்துடன் காட்சியளிக்கும் 'பட்டாச் சித்ரா' துணி ஓவியங்கள்
bedroom hacks for small rooms

15) கதவின் பின்புறத்தில் கொக்கிகளை வைத்து துணிகளை தொங்க விடலாம். முக்கியமாக நம் உடமைகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பொருட்களை அடைத்து வைக்காமல் அவ்வப்பொழுது வெளியேற்றி விடுவது நல்லது.

16) ஜன்னல் மற்றும் கதவுகளை சுற்றி கூரை வரை அலமாரிகள், கொக்கிகள் அல்லது பெக்போர்டுகளை வைக்கலாம். இதன் மூலம் நிறைய பொருட்களை அங்கு வைக்கவும் முடியும்; அறையை விசாலமானதாக ஆக்கவும் முடியும்.

17) அறை நெரிசலாக தோன்றாமல் இருக்க பெரிய டிரஸ்ஸர்கள் மற்றும் தேவையற்ற நைட் ஸ்டாண்டுகளை போன்ற தேவையற்ற விஷயங்களை அகற்றி அதற்கு பதிலாக சுவர் ஸ்கோன்ஸ் அல்லது ஸ்டூலை பயன்படுத்தலாம். அத்துடன் சிறிய அறையை பெரிதாக காட்ட ஒரு கண்ணாடி மிகவும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com