சம்மர் ஸ்பெஷல்: உங்கள் வீட்டு மட்கா வாட்டர் சுத்தமாக இருக்க இதைப் பின்பற்றுங்கள்!

drinking-matka-water
drinking-matka-water
Published on

கோடை உஷ்ணத்தைத் தணிக்க நீங்கள் அருந்தும் மட்கா வாட்டர் (Matka Water) சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய வழி முறைகள் தெரியுமா?

கடந்த சில வருடங்களாக சம்மரில் நம் உடல் சூட்டைத் தணிக்க, நாம் ஃபிரிட்ஜிலிருந்து, பாட்டிலில் நிரப்பி வைத்திருக்கும் ஐஸ் வாட்டரை எடுத்துக் குடிப்பதைத் தவிர்த்து வருகிறோம். அதற்குப் பதிலாக மண்பானைகளில் தண்ணீரை நிரப்பி வைத்து, இயற்கை முறையில் குளிர்ச்சியடையும் ஜில் தண்ணீரை நாம் அனுபவித்துப் பருகி வருகிறோம்.

மண் பானையில் நிரப்பப்படும் வாட்டர், மின்சாரத்தின் உதவியின்றி இயற்கை முறையில் குளிர்ச்சியடைந்து, மண்வாசனையுடன் கூடிய ஓர் இனிய அனுபவத்தை நமக்குத் தருகிறது. மட்கா வாட்டர் சுத்தமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க மண்பானையை நாம் தினமும் நன்கு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம்.

சம்மர் முழுக்க மண்பானைத் தண்ணீர் கலப்படமின்றி சுகாதாரமானதாக இருக்க மூன்று எளிய வழி முறைகளை நாம் பின்பற்றலாம். அவை:

புதிதாக மண்பானையை வாங்கி வந்தவுடன், அதை தண்ணீரில் முழுக்க மூழ்குமாறு 24 மணி நேரம் வைத்திருப்பது அவசியம். இதனால் பானை முழுவதிலும் உள்ள நுண் துளைகள் மூடப்பட்டு, நீர் கசிவு தடுக்கப்பட்டுவிடும். பின் பானையை நன்றாக கழுவி சூரிய ஒளியில் காயவைத்து எடுக்கவேண்டும். அப்போது பானை சிறிது கூடுதல் பலம் பெற்று, தண்ணீர் நிரப்பி வைக்கத் தயாராகிவிடும்.

பானைத் தண்ணீர் பல நாட்கள் அதிலேயே தங்கிவிட அனுமதித்தல் தவறு. அப்படிச் செய்தால் அது பாக்ட்டீரியாக்கள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யுமிடமாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஆடம்பர மோகம் மற்றும் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது எப்படி?
drinking-matka-water

மேலும் பானையின் அடிப்பகுதியில் பாசி, தூசி படியவும், சிறு சிறு புழுக்கள் உற்பத்தியாகவும் வாய்ப்புண்டாகிவிடும். பின் நம் உடல் ஆரோக்கியம் கெட்டு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகிவிடும். எனவே மீதமிருக்கும் நீரை கொட்டிவிட்டு தினசரி பானையை சுடுநீரில் கழுவவேண்டும். அப்போது பாக்ட்டீரியாக்கள்

கொல்லப்பட்டுவிடும். மீண்டும் நிரப்பப்படும் தண்ணீர் சுத்தமாகவும் சுவை குன்றாமலும் இருக்கும்.

மண் பாத்திரத்தில் உள்ள நுண் துளைகள் சோப்பு மற்றும் டிட்டர்ஜன்ட்களில் உள்ள இரசாயனங்களை உறிஞ்சிகொள்ளும் என்பதால், சுத்தப்படுத்துவதற்கு இவற்றைத் தவிர்த்துவிட்டு, உப்பு அல்லது பேக்கிங் சோடாவினால் பானையை நன்கு தேய்த்துக் கழுவிவிடலாம். பானையில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்திருக்குமானால் மாதம் ஒருமுறை வினிகர் உபயோகித்து பானையை நன்றாக தேய்த்துக் கழுவலாம். அப்போது துர் வாசனை மற்றும் பாக்ட்டீரியாக்கள் நீங்கி பானை புத்தம் புதிதுபோல் ஆகிவிடும்.

சிறிது கூடுதல் கவனம் கொண்டு தினமும் இந்த சாதாரண மண் பானைகளை சுத்தப்படுத்திவிட்டால், கோடை காலம் முழுவதும் உடலை நீரேற்றத்துடனும் புத்துணர்ச்சி யோடும் வைத்துப் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com