

விஞ்ஞானம் வெகுவேகமாய் வளர்ந்துவிட்டது. அபரிதமான வளர்ச்சி என்றுகூட சொல்லலாம். எல்லாம் அவசர உலகின் மாயை என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு நபரும் ஒருவித தேடலோடு அவசர அவசரமாய் பயணிக்கிறாா்கள். எல்லாம் ஆன்லைன் மோகம்,
சமுக வலைதளம், அலையாமல் வீடு தேடிவரும் ஆன்லைன் ஆடம்பரம் படாடோபம் இவையெல்லாம் தவிா்ப்பதே நல்லது.
மேலும் இந்த நிலைபாட்டினை ஆரோக்கியம் நாடாத செயல் என்றே சொல்லலாம். பலரது மனதில் வஞ்சக எண்ணம், பணம், பணம் என்ற நாட்டம், இப்படிப்பட்ட சூழலில் பல குடும்பங்கள் உலா வருகின்றன. இதேபோல ஆடம்பரம் எனும் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிபோல வாழவேண்டிய நிலைவேறு ஒருபக்கம்.
இப்படிப்பட்ட சூழலில் மனித மனங்களில் ஆடம்பரம், வயதுக்கு மீறிய பேச்சு, வஞ்சக எண்ணம் வளர்ந்து வருவது இப்படி பல்வேறு வகையான எதிா்மறை சிந்தனைகள் அதிகமாகிவிட்டது வேதனையே.
நம் குடும்ப விஷயத்தை பாா்ப்பதை விடுத்து அடுத்த குடும்பத்தைப் பற்றி பேசுவது, அவர்கள் குடும்ப விஷயங்களை பலரிடம் சொல்லி அவர்களின் இயலாமை ,அவர்களின் பொருளாதார பின்னடைவு, போன்ற விஷயங்களைப்பேசுவது, இவை அதிகமாகிவிட்டது.
இந்த நிலை மாறவேண்டும் வாழ்க்கையில் நொடித்துப் போனவர்களைப்பற்றி எந்த நேரத்திலும், எந்த தருணத்திலும், யாாிடமும் இழிவுபடுத்திப்பேசாதீா்கள். கீழே விழுந்தவர்களை கைகொடுத்து தூக்கிவிடாமல் கூட இருக்கலாம், அதற்காக அவர்கள் மீது கல்லை எடுத்து எறியாதீா்கள்.
அதேநேரம் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவி செய்தீா்களே ஆனால் அதை பலரிடமும் சொல்லாதீா்கள். வெளியில் தொியப்படுத்தி நொடித்தவர்களை மேலும் நோகடிக்க வேண்டாம்.
ஆண்டவன் அத்தனை செயல்களையும் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறான். ஆக ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் பாா்க்காமல் சகோதரத்துவத்துடன் பாருங்கள், பழகுங்கள், அவர்களை எந்த நேரத்திலும் ஏளனம் செய்யவேண்டாம். அந்த மனப்பக்குவம் பலருக்கு வருவதில்லை.
அந்த நிலை மாறவேண்டும், நமது நெருங்கிய சொந்தமே வாழ்க்கையில் நொடித்துப் போய்விட்டால் நாம் ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய மாட்டோமா! அதேபோல அனைவரையும் சமநிலையில் வைத்திருக்கவேண்டும்.
அன்புதான் இவ்வுலகில் விலை மதிக்க முடியாத சொத்து,அதை கடைபிடியுங்கள். நேற்றைய விஷயங்களை அலசி ஆராய்வதைவிட இன்றைய மற்றும் நாளைய வாழ்விற்கான திட்டமிடலில் இறங்குவதே அனைவருக்கும் நல்லது. பிற உயிா்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.
அன்புக்கு அழிவே கிடையாது. ஆக வஞ்சக எண்ணம் தவிா்த்து நம்மால் நமது சக்திக்கு ஏற்ப பிறருக்கு உதவி செய்யும் மனிதநேய பண்பாட்டினை தவறாமல் கடைபிடிப்பதே அனைவருக்கும் நல்லதாகும்.