வெண்ணெய் பற்றிய எளிய குறிப்புகள்!

Butter
ButterImage Credit: Freepik
  • வெண்ணையை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் குறையாமல் இருக்கும்.

  • வெண்ணையை நெய் காய்ச்சும் போது முருங்கை இலையை போட்டால் மனம் மனக்கும்.

  • வெண்ணையை காய்ச்சும் போது எலுமிச்சை இலைகளை போட்டால் நெய் சுத்தமாகவும் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

  • மோரில் வெண்ணெய் எடுக்க ஐஸ் கட்டிகளை மிக்ஸியில் சேர்த்து அடித்தால் வெண்ணெய் நன்கு திரண்டு வரும்.

  • வெண்ணையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின்பு சீவினால் எளிதாக சீவ முடியும்.

  • ஐஸ் வாட்டரில் மோரைக் கடைந்தால் வெண்ணை சீக்கிரம் திரண்டு வரும். கெட்டியாகவும் இருக்கும்.

  • வெண்ணெய் பொட்டலத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் போட்டு வைத்தால் மறுநாள் சுலபமாக பிரித்து எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அதிகமாகத் தூங்கினால் என்னாகும் தெரியுமா?
Butter
  • வெண்ணையை உருக்கும் போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் சிட்டிகை வெந்தய தூள் போட்டால் நெய் நல்ல மணமாக இருக்கும்.

  • வெண்ணெய் எடுக்கும் போது தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் கெட்டியாகி, வெண்ணெய் எளிதாக திரண்டு வரும்.

  • பிரெட்டில் வெண்ணை தடவி போஸ்ட் செய்தால் சுவையாக இருக்கும். அடை வார்த்த பின் அதன் மேல் வெண்ணை தடவி விட்டால் சுவை, மணம் கூடும்.

  • பலகாரம் செய்யும் மாவுகளை லெண்ணெய் சேர்த்து பிசைந்தால் சுவை, மணம் கூடும். மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

  • பூரி மாவு பிசையும் போது, மாவுக்கு பதிலாக வெண்ணெய் தொட்டுக்கொண்டு பூரி தேய்த்தால் பூரி எண்ணெய் குடிக்காது. சுவை, மணம் கூடும் எண்ணெயும் கசடு ஆகாது.

  • உதடு வெடிப்பு, உதட்டு புண் ஆகியவற்றிற்கு சிறிது வெண்ணை தடவினால் விரைவில் குணமடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com