நீங்கள் செல்லப்பிராணி வளர்க்காதவரென்றால் என்னென்ன மிஸ் பண்றீங்க தெரியுமா?

Benefits of owning a pet
Benefits of owning a pet

செல்லப்பிராணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பிடிக்காத சிலருக்கும் கூட அவை பாசமாக வாலாட்டிக்கொண்டு வந்தால் அதை ரசிக்கத் தொடங்கி விடுவர். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. சிலர் காவலுக்காக வளர்ப்பார்கள், சிலர் பாசத்திற்காக வளர்ப்பார்கள். இப்படிப் பல காரணங்கள் இருந்தாலும் கூட, வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பலன்களை அளிக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மன அழுத்தம் குறையும்: ஒருவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார் என நினைத்தாலே மனசு லேசாகிவிடும். எந்த ஒரு கள்ளங்கபடமில்லாமல் அன்பை மட்டுமே அள்ளித்தரக்கூடிய செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்ததைக் குறைத்து மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அவை காட்டும் அளவில்லாத அன்பு நாம் இருக்கும் சுற்றுச் சூழலையும் அழகாக்கும்.

சுறுசுறுப்பாக இருப்பீர்கள்: நாம் வாக்கிங் போக சில சமயங்களில் சோம்பேரித்தனப்பட்டாலும் நாம் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினாலேயே வெளியே சென்று நடக்க ஆரம்பித்து விடுவீர்கள். வாக்கிங் போகும்பொழுதும் கூட அவை போகும் போக்கில் நாம் செல்வதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

மனநிலை மேம்படும்: சோம்பலான நாளாக இருந்தாலும் கூட வீட்டிற்குள் நுழையும்பொழுது ஆசையாக வாலாட்டிக்கொண்டு வரும் ஜீவனைக் கண்டு மகிழாத மனித மனமே கிடையாது. செல்லப்பிராணியுடன் உரையாடுவது, விளையாடுவது போன்றவை மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மனநிலை மேம்படுத்துகிறது.

தனிமை உணர்வை போக்கும்: தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கிவிட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள். அதன் நிலையான அன்பும், துறுதுறு விளையாட்டும் தனிமையை முற்றிலுமாகப் போக்க பெரிதளவில் உதவும்.

இரத்த அழுத்ததைக் குறைக்கும்: செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள் ரிலாக்சேஷனை அதிகரிப்பதால் அவை இரத்த அழுத்ததைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
உடலை முடக்கும் சர்கோபீனியா பற்றித் தெரிந்து கொள்வோம்!
Benefits of owning a pet

சமூகத் தொடர்பு: செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்லும்பொழுது பூங்கா போன்ற இடங்களில் பிற செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் பேசும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும். அதன் மூலம் உங்களுக்கு நண்பர்கள் கூட கிடைப்பார்கள்.

குழந்தைகளுக்கு நல்லது: செல்லப்பிராணியுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை: செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தவிர்த்திட கால்நடை மருத்துவரிடம் அதற்கு ஏற்ற தடுப்பூசிகளையும் சிகிச்சைகளையும் பெற வேண்டும். மேலும், அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும். மேலும், அவற்றிற்கு ஏற்ற உணவு, குளியல் பராமரிப்பு பொருட்களிலும் கவனம் தேவை. வீட்டின் சூழ்நிலையை பொறுத்து நாம் செல்ல பிராணிகளை வளர்த்து நலம் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com