நம்முடைய வாகனத்தை நாமே சர்வீஸ் செய்வதனால் பலன் உண்டா?

Bike service
Bike service
Published on

இன்றைய காலகட்டத்தில் ஒரு வாகனத்தைப் புதிதாக வாங்குவது என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. ஆனால், அதைப் பராமரிக்கத் தேவையான ‘சர்வீஸ்’ என்று வரும்போதுதான் ஒருவித கலக்கம் சிலருக்கு ஏற்படும். காரணம், சில நேரங்களில் நாம் நினைத்ததைவிட சர்வீஸ் பில் அதிகமாகிவிடும். இதை ஈடுகட்ட நாம் என்ன செய்யலாம்? வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

நம் வாகனங்களை நாமே பராமரிக்கலாம்:

1. முதலாவதாக, வழக்கமான ஆயில் மாற்றம் செய்ய வேண்டும். இன்ஜின் ஆயிலை சரிபார்த்து மாற்றுவது இன்ஜினை நன்றாகப் பராமரிக்க உதவுகிறது. இயந்திர தேய்மானத்தைத் தடுக்கிறது. எனவே, வாகனத்தின் கையேடு வழிமுறைகளைப்(User manual) பின்பற்றி பொருத்தமான ஆயிலை வாங்குவதன் மூலம் இதைக் கச்சிதமாக செய்யலாம்.

2. இரண்டாவதாக, டயர் பராமரிப்பு முக்கியமானது. டயர் அழுத்தத்தைத் தவறாமல் சரிபார்த்து, பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்வது எரிபொருள் திறன்(Fuel Efficiency) மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

3. பிரேக்(Brake) பராமரிப்பு மற்றொரு முக்கியமான அம்சம். பிரேக் பேட்ஸ்(Brake pads) தேய்ந்துள்ளதா எனச் சரிபார்ப்பதும், தேவைப்படும்போது அவற்றை மாற்றுவதும் பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்று. இந்தப் பணிக்கு சில இயந்திரம் சம்மந்தப்பட்ட அறிவு தேவை. அதனால் அருகில் இருக்கும் மெக்கானிக் மூலம் இந்த வேலையைச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியின் சூப்பர் ஹீரோக்கள்... யார்?
Bike service

4. பேட்டரி பராமரிப்பு என்பது டெர்மினல்களை(terminals) சுத்தமாக வைத்திருப்பது மற்றும் பேட்டரியின் சார்ஜைத் தொடர்ந்து சரிபார்ப்பது போன்ற பணிகளை உள்ளடக்கியது. பேட்டரி பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டினால், அதற்கு தகுந்த நிபுணரை நீங்கள் அணுகலாம்.

5. பைக் மற்றும் கார்களில் கூலன்ட்ஸ் (coolants) மற்றும் சில திரவ(Fluids) சோதனைகளும் முக்கியம். கூலன்ட்ஸ் , பிரேக் திரவம்(Brake Fluids) மற்றும் டிரான்ஸ்மிஷன் திரவ(Transmission fluids) அளவுகள் போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும், இதனால் இதில் உண்டாகும் அதிக வெப்பம் மற்றும் இயந்திர தேய்மானங்கள் தடுக்கப்படுகின்றன.

6. பைக் மற்றும் காரில் ஏர் பில்டர்ஸ்(Air filters) மாற்றுவது என்பது இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய பணியாகும். சுத்தமான ஏர் பில்டர்ஸ் இன்ஜினுக்குத் தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது.

7. பைக்கில் இன்ஜினின் செயல்திறனைப் பராமரிக்க ஸ்பார்க் பிளக் (spark plug) ஆய்வு மற்றும் தேவைப்பட்டால் அதை மாற்றுவது மிகவும் அவசியம். காரணம் தேய்ந்து போன ஸ்பார்க் பிளக்குகள் இன்ஜினை செயலிழக்கச் செய்து, எரிபொருள் செயல்திறனை முற்றிலும் குறைக்கும்.

8. பைக்கில், செயின் லூப்ரிகன்ட்(Chain lubricant) தகுந்த கிலோமீட்டருக்கு பின் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் பைக்கின் ஓட்டத்தை மென்மையாக(smooth) வைத்திருக்கும்

9. உதிரி பாகங்கள்(Spare parts) தேவைப்படும்போது, அதை நல்ல தரத்தோடு வாங்க நம்பகமான கடைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை அணுகுவது நல்லது. அல்லது நம்பகமான இணைய தளங்களில் இருந்தும் பாகங்களை ஆன்லைனில் வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
சமூக வலைதளங்களிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க 5 யோசனைகள்!
Bike service

தேவையான முன்னெச்சரிக்கை: உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்யத் தொடங்கும் முன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். கையுறைகள் மற்றும் தற்காப்புக் கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு விஷயங்களை (Safety gears) அணியுங்கள். பின் உங்களிடம் சரியான கருவிகள் இருப்பதை உறுதிசெய்து, தொடக்கம்முதல் இறுதிவரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உங்கள் பயனர் கையேட்டைப் (user manual) பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com