கம்பீரமான அப்பாவை உருக வைக்க இதோ சில 'சர்ப்ரைஸ்' ஐடியாக்கள்!

அம்மாவைத் தாண்டி அப்பாவின் மனதை வெல்ல சில அசத்தல் ஐடியாக்கள்!
அப்பாவிற்கு பரிசுகள்
அப்பாவிற்கு பரிசுகள்AI image
Updated on

ம்மா தன்னுடைய மகளிடமோ அல்லது மகனிடமோ எப்பொழுதும் அன்பை வெளிப்படுத்தி தன்னுடைய வளையத்திற்குள் வைத்திருப்பார். அப்பாவோ பாசம் அதிகம் இருந்தாலும் எப்போதாவதுதான் தன்னுடைய மகளிடமும், மகனிடமும் அன்பை வெளிப்படுத்துவார். அதனால் அம்மாவின் வளையத்திற்கு வெளியில்தான் பெரும்பாலான வீடுகளில் அப்பா நிற்கிறார்.

அம்மாவிற்கு பிடித்தவற்றை எளிதாக கண்டறிந்து பரிசுகளை குழந்தைகள் வழங்கி விடுகிறார்கள். ஆனால் அப்பாவிற்கு பிடித்த பரிசுகளை வழங்குவதில் சற்று தடுமாற்றம் ஏற்படும். அந்த வகையில் அப்பாவை அசத்த என்னென்ன பரிசுகள் அளிக்கலாம் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

அப்பாவிற்கு பரிசுகள் கொடுக்கும் முன் நாம் செய்ய வேண்டியவை

வழக்கமான வேலை, போன், whatsapp இமெயில், ஆபீஸ் டென்ஷன் போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு ஒரு நாள் முழுவதும் அப்பாவுடன் அமர்ந்து அவருக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க விட்டு பேசி மகிழலாம்.

அப்பாவிற்கு பரிசுகள்
அப்பாவிற்கு பரிசுகள்AI image

அவருடைய பழைய கதைகளை கேட்டுக்கொண்டே ருசிக்கும் சிற்றுண்டியாகட்டும், காபி, தேநீராகட்டும் புதுவிதமான அசத்தல் சுவையில் உங்களுக்கும் உங்களுடைய அப்பாவிற்கும் அந்த நேரத்தில் தெரியவரும். அப்பாவுடைய உலகத்திற்கு நீங்கள் செல்லும் போது அவருடைய நண்பராக நீங்கள் உணர்வீர்கள்.

நினைவலைகளில் மிதக்க வைக்க அப்பாவிற்கு பரிசுகள் வழங்கும் ரகசியம்

1. ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! போட்டோக்கள்:

உங்களுடைய அப்பா சிறுவயதில் இருந்த போட்டோக்களை சேகரித்து ஆல்பமாக்குங்கள். பள்ளி மாணவராக இருந்த போட்டோக்கள், டீன் ஏஜ் வயது கல்லூரி கால நினைவுகளை கண் முன் கொண்டு வரும் போட்டோக்கள், அம்மா, அப்பா இணைந்து இருக்கும் போட்டோக்கள், குழந்தைகளாக நீங்கள் அவருடன் கொஞ்சி விளையாடிய போட்டோக்கள் போன்ற 'மெமரி புக்' போட்டோக்களை தயார் செய்தால் அப்பாவுடைய முகத்தின் ஆச்சரியங்களை அளவிட முடியாது.

2. மறைக்கப்பட்ட திறனை வெளிக்கொணருதல்:

உங்கள் அப்பாவிற்கு சிறு வயதில் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களையும் அல்லது செயல்களையோ திரும்பவும் ஞாபகப்படுத்தும் விதமாக அதற்கு தேவையான பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம். உதாரணமாக படம் வரைவது, பாடல் கேட்பது, தோட்டக்கலை, சமையல் செய்வது போன்ற ஹாபி வைத்திருந்தால் அதற்கேற்ற டூல் கிட் (tool kit) வாங்கி பரிசளித்தால் பரிசுக்கே பெருமை ஏற்பட்டுவிடும்.

3. கிங் ட்ரீட்மென்ட்' பெஸ்ட்:

அப்பாவுக்கு பிடித்த உணவை அம்மாவை சமைக்க சொல்லாமல், ஹோட்டலிலும் வாங்காமல் அவருக்கு பிடித்த பக்குவமான பதத்தில் நீங்களே தயார் செய்து 'சர்ப்ரைஸாக' உணவருந்த சொன்னால் அப்பாவின் உள்ளம் பூரிப்படைவதை அவருடைய கண்களின் வழியாக நீங்கள் காணலாம்.

4. 'நோஸ்டால்ஜியா' டூர்:

உங்கள் அப்பா பிறந்து வளர்ந்த கிராமம், அவர் இன்று வரை மனதில் குருவாக நினைப்பவர் உயிரோடு இருந்தால் சந்திக்க வைப்பது. இல்லை என்றால் அவரது குடும்பத்தினருடன் உரையாட வைப்பது, பேசி விளையாடி சண்டை போட்டு ஊர் சுற்றி மகிழ்ந்த நண்பர்கள், அப்பா முதல் முதலில் சென்ற பள்ளி, இளவயதில் மிடுக்காக சேஷ்டைகள் செய்த கல்லூரி போன்றவற்றிற்கு டூர் அழைத்துச்சென்றால் அப்பாவின் சந்தோசத்தை அளவிடவே முடியாது.

இதையும் படியுங்கள்:
பழைய பிரிட்ஜை தூக்கிப் போடுங்க! ₹20,000-க்குள் அட்டகாசமான 5 மாடல்கள்!
அப்பாவிற்கு பரிசுகள்

நம்மை உலகிற்கு கொண்டு வந்த அப்பாவிற்கு அவ்வப்போது மேற்கூறிய பரிசுகளை வழங்கி அசத்தினால் அப்பாவிற்கு மட்டுமல்ல அதனை வழங்கிய மகளுடைய மகிழ்ச்சியையும் மகனுடைய மகிழ்ச்சியையும் அளவிட முடியாது. இதனால் குடும்ப ஒற்றுமை மேம்பட்டு குடும்பத்தில் உள்ளவர்களின் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

இந்தப் பதிவின் மூலம், எப்போதும் குடும்பத்திற்காகவே உழைத்து தன் ஆசைகளை மறைத்துக் கொள்ளும் தந்தையின் உண்மையான மகிழ்ச்சிப் பக்கத்தை உங்களால் எளிதாகக் கண்டறிய முடியும். வெறும் கடைகளில் வாங்கும் பொருட்களையும் தாண்டி, அப்பாவின் மனதிற்கு நெருக்கமான தருணங்களை அவருக்குப் பரிசாக அளித்து, வாழ்நாள் முழுவதும் அவர் பெருமையோடு நினைத்துப் பார்க்கும் ஒரு உன்னதமான உறவுப் பாலத்தை உங்கள் குடும்பத்தில் உங்களால் உருவாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com