காலில் கருப்பு கயிறு டிரெண்டிங்: அவசியம் அறிய வேண்டிய உண்மைகள்!

Black rope on the leg trending
Black rope in leg
Published on

ற்காலத்திய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது இப்போது பேஷனாகி வருகிறது. வெறும் கருப்பு கயிறு மட்டுமல்லாமல், அத்துடன் கிறிஸ்டைன் அல்லது யானை, இதயம், முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுகிறார்கள். தற்போது இது ட்ரெண்ட் ஆகி வந்தாலும் இப்பழக்கம் பழங்காலத்திலிருந்து நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஒரு நடைமுறைதான் இது.

பெரும்பாலான பெண்கள் காலில் திருஷ்டிக்காக கருப்பு கயிறு கட்டுகிறார்கள். திருஷ்டி கழிப்பது, சுத்தி போடுவது போலவே காலில் கருப்பு கயிறு கட்டுவதையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்துதான் வந்திருக்கிறார்கள். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்புக் கயிறு கட்டிக் கொள்கிறார்கள். இதற்கு ஆன்மிக ரீதியான காரணமும் சொல்லப்படுகிறது. காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். ராகு, கேது பாதிப்புகள் உண்டாகாது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மந்திர அரிசி: சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்...
Black rope on the leg trending

முன்பெல்லாம் நம் பாட்டிகள், வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்து வந்தாலோ அல்லது விபத்துக்கள் எதுவும் ஏற்பட்டாலோ காலில் கருப்பு கயிறைக் கட்டுவார்கள். யானையின் முடி கொண்டு மோதிரம் போல் வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்யச் சொல்லி, கைகளில் அணிவிப்பார்கள். இவை கண் திருஷ்டியை நீக்கிவிடும் என்ற நம்பிக்கையில் செய்யப்படுகிறது. ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று கூறுவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவரின் பார்வைக்கு சக்தி அதிகம் உண்டு எனக் கூறப்படுகிறது. கண் படாமல் இருக்க குழந்தைகளாக இருந்தால் கன்னத்தில் கருப்பு மை கொண்டு புள்ளி வைப்பதும், காலில் கருப்பு கயிறு கட்டுவதும் உண்டு. இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறு கூட கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடி இன்றி இருக்கவுமே கட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிக யோசனையால் வரும் உடல்நலப் பிரச்னைகள்: வெளியே வர சுலபமான வழிகள்!
Black rope on the leg trending

கருப்பு கயிறு நம் மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கக்கூடியது. சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. கருப்பு கயிறு கட்டுவதால் உடல்நலக் கோளாறுகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. நமது எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடுகள் அமைகின்றன. எனவே, கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினால் நாடியின் இயக்கம் சீராவதுடன், நம் எண்ணங்களும் மனமும் அலைபாயாமல் சீராக இருக்கும்.

ஜோதிடப்படி கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலைமையை பலப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களைத்தான் பற்றுவாராம். எனவே, கருப்பு கயிறு கட்டும் முன் சனி பகவானை வணங்கி கருப்பு கயிறு ஒன்பது முடிச்சுகள் போட்டு பிறகு காலில் அணியலாம். இதனால் பண வரவு அதிகரிக்கும் என்றும், ஆபத்துகள் எதுவும் ஏற்படாமல் காக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

பெண்கள் காலில் கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு சனிக்கிழமைகளில் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கட்டிக்கொள்வது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com