வீட்டுக்குள்ள எலித் தொல்லையா? பொறி வைக்காமலே ஓட ஓட விரட்ட 5 எளிய இயற்கை வழிகள்!

விஷம் வைக்காமல், பொறி பிடிக்காமல் வீட்டிலுள்ள எலிகளை இயற்கையாக விரட்டும் சூப்பர் டிப்ஸ்.
Rat in the house | எலி
Rat in the house | எலி
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

வீட்டிற்குள் ஓடும் எலியும், காருக்குள் புகுந்து கம்பிகளை கடித்து வைக்கும் எலியும் உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிட்டதா? பொறி வைப்பது, விஷம் வைப்பது போன்ற கடினமான வேலைகளில் உடன்பாடில்லையா? கவலை வேண்டாம்! விஷப் பொறிகள் வைக்காமலேயே, உங்கள் சமையலறையில் இருக்கும் சில எளிய இயற்கை பொருட்களைப் கொண்டே எலிகளை விரட்ட முடியும். அது எப்படிப்பட்ட எளிய வழிகள்? வாருங்கள் இந்த பதிவில் படித்துத் தெரிந்து கொள்வோம்!

எலிகளை விரட்ட டிப்ஸ் | Rat
எலிகளை விரட்ட டிப்ஸ் | RatAI Image

எலி என்னதான் பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தாலும், கார் பிரச்னை முதல் விட்டு பிரச்னை வரை, அது செய்யும் காரியம் நம்மை நீண்ட நாட்களுக்கு புலம்ப வைத்துவிடும். அதை தடுக்க என்ன தான் ‘பொறி வைத்தாலும்’ அதை கையாளவே பலர் சிரமமாக பார்க்கிறார்கள். அதை உங்கள் ‘திசை பக்கமே வராமல் தடுத்தால்’ எப்படி இருக்கும்? தெரிந்து கொள்வோம். எப்படி எலியை இயற்கையாக விரட்டலாம்?:

எலிகள் உணவைக் கண்டறியவும், இடங்களை கண்டறியவும் அதன் மோப்ப சக்தியைதான் அதிகம் சார்ந்துள்ளன.

புதினா, கிராம்பு, பூண்டு அல்லது அம்மோனியா போன்ற அவற்றுக்குப் பிடிக்காத வாசனைகளை சுற்றி பரப்புவதன் மூலம், அவை உலா விரும்பும் வசதியான சூழலை நீங்கள் தடுக்கலாம்.

உதாரணமாக, வீட்டின் நுழைவாயில்களின் அருகில் ‘புதினா எண்ணெய் தடவிய ‘பஞ்சு உருண்டைகளை’ (காட்டன் balls) வைப்பது எலிகளைப் பின்வாங்கச் செய்கிறது. அதே போல் வீட்டினுள் நுழைவதை தடுக்க சமையலுக்கு பயன்படும் ‘பிரியாணி இலைகள்’, ஒரு தடுப்பாகச் செயல்படுகின்றன.

எலிகளை விரட்ட டிப்ஸ் | Rat
எலிகளை விரட்ட டிப்ஸ் | RatAI Image

இதோடு பயன்படுத்தப்பட்ட ‘காபித்தூள்’ கூட எலிகளுக்கு பிடிக்காத ஒரு வலுவான வாசனையை வெளியிடுகிறது. இதனால் அவை அந்தப் பகுதிகளில் நுழைவதை தவிர்க்கின்றன. இவை அனைத்தும் மனிதர்களுக்கு பிரச்னையை விளைவிக்கும் அபாயம் உள்ள இரசாயன விஷங்களைப் போலல்லாமல், இந்த முறைகள் முற்றிலும் ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் கூட பாதுகாப்பானவையாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஒட்டடை அடிக்கிறதே வேலையா போச்சா? இனி வீட்டுப் பக்கம் சிலந்தி வராது!
Rat in the house | எலி
இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
Rat in the house | எலி

எலிகளை விரட்ட நாம் செய்யவேண்டிய வெளிப்புற மற்றும் உட்புற பராமரிப்புகள்:

வீடுகள் அல்லது பொதுவான கட்டிடங்களில், எலிகள் பெரும்பாலும் சிறிய விரிசல்கள், காற்றோட்டத்திற்காக விட்ட வழிகள் அல்லது குழாய் பைப்களை சுற்றியுள்ள இடைவெளிகள் வழியாக நுழைகின்றன. இவற்றை ஸ்டீல் கம்பளி (steel wool) மற்றும் ஓட்டைகளை அடைக்கும் கார்க் (caulk) கொண்டு அடைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இருட்டை கிழித்து பார்க்கும் பூனையின் சக்தி... நீங்களும் தெரிஞ்சுக்க இதை படிங்க!
Rat in the house | எலி
இதையும் படியுங்கள்:
மாதக் கடைசியில் கடன் வாங்காம வாழணுமா? இந்த 7 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!
Rat in the house | எலி

வெளிப்புறங்களில், நீங்கள் ‘உரம் தயாரிக்கும் தொட்டிகளை’ வைத்திருந்தால் அதை மூடி வைக்க வேண்டும், கீழே விழுந்த பழங்களை அகற்ற வேண்டும் மற்றும் மரத்திலிருந்து விழுந்த கிளைகளை அகற்றுவது போன்ற விஷயங்களை செய்வது உங்கள் இடத்தில் எலிகள் ஒளிந்துகொள்ளும் இடங்களைக் குறைக்கின்றன.

எலிகளை விரட்ட டிப்ஸ் | Rat
எலிகளை விரட்ட டிப்ஸ் | RatAI Image

வீடு அல்லது கட்டிடங்களின் உள்ளே தானியங்கள், பருப்பு வகைகளை காற்றுப் புகாதவாறு சேமித்து வைக்க வேண்டும்; இது எலிகளை ஈர்க்கும் வாசனைகளை தடுக்கிறது. உங்கள் இடத்தின் நுழைவாயில்களின் அருகில் சிறிய டப்பாவில் ‘அம்மோனியா கலந்த திரவியத்தை’ வைப்பது, ஒரு தனித்துவமான தடுப்பு முறையாகும். காரணம் அதன் வாசனை ‘வேட்டையாடும் விலங்குகளின் சிறுநீர் போல இருப்பதால்’, அது எலிகளுக்கு உள்ளே நுழைய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலிருந்தே வேலை செய்பவரா? முதுகு வலியை நிரந்தரமாக விரட்ட 6 எளிய வழிகள்!
Rat in the house | எலி
இதையும் படியுங்கள்:
வேலைக்குப்போகும் பெண்களுக்கு 5 நிமிட காலை நேர சருமப் பராமரிப்பு ரகசியங்கள்!
Rat in the house | எலி

தூய்மையே பெரும் சக்தி:

மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார், “சுதந்திரத்தை விட சுகாதாரம் முக்கியமானது. நீங்கள் துடைப்பத்தையும், வாளியையும் உங்கள் கைகளில் எடுக்காத வரை; உங்கள் நகரங்களையும், மாநகரங்களையும் உங்களால் தூய்மையாக்க முடியாது.” இந்த சொற்கள் கொஞ்சம் இந்த கட்டுரைக்கும் பொருந்தும்.

காரணம் நம் ஆரோக்கியத்தில் தூய்மையே முதல் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். சுகாதாரமான சுற்றுப்புறங்களைப் பராமரிப்பதன் மூலம், நாம் எலிகளை உள்ளே வருவதை தடுப்பது மட்டுமல்லாமல்; அதனால் உண்டாகும் சீர்கேடுகளையும் தடுக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
அந்த சின்ன பாக்கெட் எதற்கு? 99 சதவீத பேருக்கு தெரியாத ஜீன்ஸ் பேண்ட் ரகசியம்!
Rat in the house | எலி

ஆக, எலிகளுக்குப் பிடிக்காத வாசனைகள், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் அவை வரக்கூடிய வழிகளை அடைப்பது மூலம் இயற்கையாகவே எலிகளை விரட்ட முடியும். இந்த அணுகுமுறை மனிதாபிமானமானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் தூய்மை என்ற ஒரு வாசகத்தை ஆழமாகப் பொருந்தி வருகிறது. எனவே இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, எந்த வித பொறி வைக்காமல் அல்லது துன்புறுத்தல் செய்யாமல் அவற்றை உங்கள் இடத்தின் திசை பக்கமே வராத படி செய்துவிடும்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சமையல் முடிக்கும் மேஜிக் இன்ஸ்டன்ட் மசாலா விழுதும் பொடியும்!
Rat in the house | எலி
logo
Kalki Online
kalkionline.com