கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை நொடியில் மிளிர வைக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள்!

ரசாயனம் இன்றி வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு வெள்ளியைப் புதியது போல பளபளக்க வைக்கும் ரகசியங்கள்.
வெள்ளி பாத்திரங்கள் - Silver Maintenance
வெள்ளி பாத்திரங்கள் - Silver MaintenanceImage credit - Gemini
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

தமிழர்களின் கலாச்சாரத்திலும் பாரம்பரியத்திலும் வெள்ளிப் பொருட்களுக்கு என்றும் தனிச் சிறப்பு உண்டு. இந்த வெள்ளிப் பாத்திரங்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலோ அல்லது காற்றில் உள்ள சல்ஃபர் (Sulfur) வாயுவுடன் வினைபுரிந்தாலோ அவை நாளடைவில் கறுத்துப்போவது இயல்பு. இவ்வாறு கறுத்த வெள்ளி பாத்திரங்கள் நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக்கொண்டு மீண்டும் புதியது போல பளபளப்பாக மாற்றும் வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

அலுமினியம் ஃபாயில் மற்றும் பேக்கிங் சோடா முறை:

வெள்ளி பாத்திரங்களின் கருமையைப் போக்க இதுவே அறிவியல் பூர்வமான மற்றும் வேதிவினையற்ற பாதுகாப்பான முறையாகும்.

தேவையான பொருட்கள்: அலுமினியம் ஃபாயில் தாள், பேக்கிங் சோடா (சமையல் சோடா), கல் உப்பு மற்றும் கொதிக்கும் நீர்.

செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஃபாயில் தாளைச் சுற்றி விரித்துக் கொள்ளவும். அதனுள் கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை வைக்கவும். பாத்திரத்தின் மேல் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 ஸ்பூன் உப்பு தூவவும். இப்போது பாத்திரங்கள் மூழ்கும் அளவுக்கு கொதிக்கும் சுடுநீரை ஊற்ற வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடவும்.

இதையும் படியுங்கள்:
அலுமினியம் ஃபாயில் தாள்: சமையலறைக்கு மட்டுமல்ல... வாழ்க்கையை சுலபமாக்கும் 9 அற்புத வழிகள்!
வெள்ளி பாத்திரங்கள் - Silver Maintenance

பலன்: வெள்ளியில் உள்ள சல்ஃபைடு (Silver Sulfide) அலுமினியத்துடன் வினைபுரிந்து கருமை அனைத்தும் ஃபாயில் தாளுக்கு மாறிவிடும். பிறகு பாத்திரங்களை எடுத்துச் சுத்தமான நீரால் கழுவி துடைத்தால் வெள்ளி புதிதுபோல மின்னும்.

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா பேஸ்ட்:

எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையிலேயே கறைகளையும் அழுக்குகளையும் நீக்கும் திறன்கொண்டது.

செய்முறை: 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். இந்த பேஸ்ட்டை கறுத்த வெள்ளிப் பாத்திரத்தின் மீது தடவி 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு லேசாக தேய்க்க வேண்டும். இறுதியாக வெதுவெதுப்பான நீரால் கழுவி உலர்ந்த துணியால் துடைத்தால் கருமை நீங்கிவிடும்.

டூத் பேஸ்ட் பயன்படுத்தும் முறை:

வீட்டில் அவசரமாக வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்த வேண்டிய சூழலில் இம்முறை பயனுள்ளதாக இருக்கும்.

செய்முறை: சாதாரண வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை (Gel type வேண்டாம்) வெள்ளிப் பாத்திரத்தின் மீது தடவ வேண்டும். 5 நிமிடங்கள் ஊறிய பின், ஒரு பழைய மென்மையான டூத் பிரஷ் அல்லது பருத்தி துணியால் லேசாக அழுத்தாமல் தேய்க்கவேண்டும்.

பலன்: பாத்திரத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் இடுக்குகளில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

வெள்ளி பாத்திரங்கள் - Silver Maintenance
வெள்ளி பாத்திரங்கள் - Silver MaintenanceImage credit - Gemini

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா முறை:

அடர்ந்த கருமை படிந்த பழைய வெள்ளிப் பாத்திரங்களுக்கு இம்முறை சிறந்த தீர்வாகும்.

செய்முறை: அரை கப் வெள்ளை வினிகருடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலக்கவும் (கலக்கும்போது நுரைத்து வரும்). இந்த கலவையில் கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை போட்டு 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பின் பாத்திரங்களை நல்ல தண்ணீரில் கழுவித் துடைத்தால் படிந்திருந்த அடர் கருமை அகன்று பளபளப்பு கிடைக்கும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

1.வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்த எஃகு கம்பிகளையோ அல்லது கரடுமுரடான நாரையோ பயன்படுத்தக் கூடாது. அவை வெள்ளியின் மேற்பரப்பில் கீறல்களை உண்டாக்கிவிடும்.

2. கழுவிய வெள்ளிப் பாத்திரங்களைக் காற்றில் உலர விடக்கூடாது. கழுவிய உடனேயே ஈரம் போக மெல்லிய பருத்தித் துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும்.

3.வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தாத போது, அவற்றை பிளாஸ்டிக் கவரில் அல்லது Air-tight பெட்டியில் சுற்றி வைத்தால் காற்று படாமல் நீண்ட நாட்கள் கறுக்காமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கறுத்த பித்தளை விளக்கு 5 நிமிடத்தில் தங்கம் போல் மின்னும்! சிரமமில்லாத 2 எளிய வீட்டு முறைகள்!
வெள்ளி பாத்திரங்கள் - Silver Maintenance

கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் புதியதுபோல பளபளக்கச் செய்ய சரியான பராமரிப்பும் அவ்வப்போது செய்யும் இந்த எளிய சுத்திகரிப்பும் நமது வெள்ளிப் பொருட்களை தலைமுறை கடந்து பொலிவோடு வைத்திருக்க உதவும்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் கடைகளுக்குச் சென்று கூடுதல் பணம் செலவழிக்காமல், உங்கள் வீட்டு வெள்ளிப் பொருட்களைச் சேதமடையாமல் பாதுகாப்பாகச் சுத்தப்படுத்தலாம். பாரம்பரியமிக்க வெள்ளிப் பொருட்கள் எப்போதும் புதிய பொலிவுடன் மிளிர்வதோடு, தலைமுறை கடந்து அவற்றின் மதிப்பைத் தக்கவைக்கவும் முடியும்.

logo
Kalki Online
kalkionline.com