

நாம் நகவெட்டியை வைத்து நகத்தை நறுக்க பயன்படுத்துவோம். அதிகபட்சம் அதில் உள்ள கத்தி போன்ற ஒன்றை வைத்து பழங்களை நறுக்குவோம். ஆனால் , இதை எல்லாம் தாண்டி இன்னும் வேறு விதங்களில் நாம் நகவெட்டியை பயன்படுத்த முடியும். இதற்கு பல விதமான உபயோகங்கள் இருந்தாலும் எப்போதும் நகவெட்டியை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
நகவெட்டியின் நடுவில் உள்ள வளைவான கூரிய முனை கொண்ட ஒரு சிறு கருவி இருக்கும். இது பயன்படுத்தி சோடா பாட்டில் மூடிகளை எளிதில் திறக்க முடியும்.
சட்டை மற்றும் உடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நூலை நகவெட்டியின் மூலம் நறுக்கி கொள்ளலாம். இது கத்திரிக் கோலை விட மிகத் துல்லியமாக சரியான அளவில் வெட்டும்.
நகவெட்டியின் நடுவில் உள்ள கத்தி போன்ற ஒன்றை பயன்படுத்தி , சில சாதனங்களில் வெளிப்புறமாக திருகப்பட்டிருக்கும் ஸ்குருவை மேலும் இறுக்கமாக திருகவும் அல்லது கழட்டவும் முடியும்.
நக வெட்டியின் முக்கிய நெம்புகோல் பகுதியை பயன்படுத்தி, கடிதங்கள் அல்லது ஆவணங்களில் உள்ள ஸ்டேப்ளர் பின்களை வெளியே எடுக்கலாம்.
சோடாபாட்டில் முடியை திறப்பானாக பயன்படுத்தும் வளைந்த கத்தி போன்ற அமைப்பை பயன்படுத்தி , உணவுப் பொருட்கள் வைக்கப் பட்டுள்ள டின்கள் மற்றும் கேன்களின் முடியின் ஓரமாக நெம்பிக் கொண்டே வந்து இறுதியில் திறந்து விடலாம். இந்த முறையில் இறுக்கமாக பெயிண்ட் டின்களையும் திறக்க முடியும்.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களில் சிக்கிக் கொள்ளும் முள் , ஆணி , கம்பி போன்ற கூர்மையான பொருட்களின் வெளிப்புற முனைகள் உடைந்து விட்டால் அதை பிடுங்குவது கடினமான வேலையாக இருக்கும். இந்த நேரத்தில் நக வெட்டியின் நகம் வெட்டும் முனைப் பகுதியை பயன்படுத்தி உடைந்து போன முள் , ஆணி , ஊசி போன்ற போன்றவை களை நகவெட்டியால் இறுக்கி பிடித்து வெளியே எடுக்க முடியும்.
நகவெட்டியின் இறுதியில் ஒரு துளை ஒன்று இருக்கும் இதில் , சாவி வளையத்தை சேர்த்து சாவி கொத்தாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில சமயம் வயர்களில் உள்ள குறிப்பிட்ட இன்சுலேஷன் பகுதியை மட்டும் நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் கம்பி பகுதியை சிறிது வெளியில் தெரியும் வண்ணம் எடுக்க வேண்டி இருக்கும். இதற்கும் நகவெட்டி யின் நகம் நறுக்கும் முனையை பயன்படுத்தி வெளிப்புற ரப்பர் போன்ற பகுதியை நறுக்கி நீக்க முடியும்.
சில நேரங்களில் சுத்தமான நக வெட்டியால் பூண்டின் அடிப்பகுதி மற்றும் மேல் பகுதியின் முனையை மட்டும், நகம் வெட்டும் பகுதியை பயன்படுத்தி வெட்ட முடியும். இவ்வாறு செய்து பூண்டு உரிக்கும் வேலையை எளிதாக்கலாம்.
மீசை மற்றும் புருவ முடியை சிறிது கவனத்துடன் நகவெட்டியை பயன்படுத்தி திருத்தம் செய்யலாம்.
மூடிய பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் திறக்க மூடிய பிளாஸ்டிக் பைகள் அல்லது கடினமான பேக்கேஜிங்கை நகக் கத்தரியால் வெட்டி திறக்கலாம்.
இறால்களை சுத்தம் செய்யவும் தோல்களை உரிக்கவும் நகவெட்டியை பயன்படுத்தலாம். நகவெட்டியின் நறுக்கும் பகுதியை பயன்படுத்தி இரு முனைகளையும் வெட்டி, மேலே உள்ள தோலை வளைந்த கம்பியை பயன்படுத்தி உரிக்கலாம். இம்முறையில் விரைவாக சுத்தம் செய்ய முடியும்.