உடலில் ஓடும் இரத்தம்... அதை எப்படி செய்வது சுத்தம்?

blood purification
blood purification tips
Published on

ரோக்கியம் என்பது ஒருவர் உடலில் ஓடும் இரத்தம் சுத்தமாக இருப்பதைப் பொறுத்தே அமைகிறது. நம் உடலில் ஓடும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில ஆலோசனைகளை (blood purification tips) இந்தப் பதிவில் காண்போம்.

* பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருப்பது உடல் நலனை சீர் செய்யும்.

* தினமும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதேபோல், உணவு உண்டு ஒரு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

* மதுவை அறவே தவிர்ப்பது இரத்த சுத்தத்துக்கு மிகவும் அவசியம்.

* தினசரி உடலுக்குப் போதுமான தண்ணீர் அருந்துவது சீரான இரத்த ஓட்டத்துக்குத் துணை புரிகிறது.

* இரத்த சுத்திகரிப்புக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தினசரி உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்வது அவசியம்.

* தினமும் நான்கு வேப்ப இலைகளை பச்சையாக, வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வருவது, இரத்த சுத்திகரிப்புக்கு நன்கு உதவும்.

* மாதத்துக்கு ஐந்து முறை, பத்து வேப்ப இலைகளை ஒரு பாட்டில் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, பின்பு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிப்பது இரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
நீங்க சாப்பிடறது இப்படி இருந்தால்... சுகர் ஏறவே ஏறாது!
blood purification

* செம்பருத்திப் பூவில் பாலிபினால்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிகம் உள்ளதால், செம்பருத்தி பூ டீ அருந்துவது இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

* கேரட், பீட்ரூட், சுரைக்காய் மற்றும் மாதுளை, மாம்பழம், நாவற்பழம், நெல்லிக்காய், ஆப்பிள், துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com