ஏ சி ஆன் செய்தும் குளிர்ச்சி இல்லையா? உடனே இதைச் செய்யுங்கள்!

car-ac-maintenance-tips
car-ac-maintenance-tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கோடைக்காலத்தில் ஏசி குளிரை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமா? கடும் வெயிலிலும் உங்கள் கார் ஏசி சிறப்பாக வேலை செய்யவேண்டுமா? அதற்கு கார் ஏசியை பராமரிக்க சில உபயோகமான குறிப்புகள்

*கோடை காலத்தில் காரில் அதிகம் வேலை செய்யும் பாகம் ஏசி தான். ஏசியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் கோடைகாலத்தில் கார் இருந்தும் ஒரு பயனும் இல்லை. ஏசியை திறமையாக பராமரிக்க, காரை நிறுத்தியதும் ஜன்னல்களைச் சிறிது திறந்து வைத்து வெப்ப காற்றை வெளியேற்றலாம்.

*வெயிலில் நிறுத்திய காரில் ஏறியவுடன், ஏசியை ஆன் செய்து ஜன்னல்களை ஓரிரண்டு நிமிடங்கள் திறந்து வைக்கவும். இது சூடான காற்றை வெளியேற்றி விரைவாக குளிர்ச்சி அடைய உதவும்.

*முடிந்தவரை காரை மரத்தடியில் அல்லது நிழலில் நிறுத்த முயற்சி செய்யலாம். வெயிலில் நிறுத்தினால் உள்ளே இருக்கும் வெப்பமான காற்று வெளியேற கதவுகளை சிறிது நேரம் திறந்து வைப்பதே நல்லது.

*ஆரம்பத்தில் பிரெஷ் ஏர் மோடு (Fresh Air) பயன்படுத்தி, உள்ளே குளிர்ந்தவுடன் ரீசர்குலேஷன் (Recirculation) மோடுக்கு மாற்றினால் ஏசி கம்ப்ரஸர் (Compressor) மீதான அழுத்தம் குறையும். அத்துடன் கார் விரைவாகவும் குளிரும்.

*காரை ஸ்டார்ட் செய்த உடனே ஏசியை ஆன் செய்யாமல், என்ஜின் சிறிது சூடான பிறகு ஆன் செய்வது நல்லது. அதேபோல் காரை அணைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏசியை அணைத்துவிட்டு வெறும் ஃபேனை மட்டும் ஓடவிடுவது ஈரப்பதத்தை நீக்கி துர்நாற்றத்தை தவிர்க்கும்.

*பயணத்தை முடித்து இன்ஜினை அணைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏசியை அணைத்து, ஃபேன் மட்டும் இயங்கவிடுவது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும்.

*காரில் ஆட்டோமேட்டிக் ஏசி வசதி இருந்தால், அதை சரியான வெப்பநிலையில் செட் செய்து பயன்படுத்துவது எரிபொருள் சிக்கனத்திற்கும், ஏசியின் ஆயுளுக்கும் நல்லது.

இதையும் படியுங்கள்:
மடிக்கலாம்... நீட்டிக்கலாம்! சிறிய இடத்திலும் கச்சிதமாக பொருந்தும் நவீன டைனிங் டேபிள்கள்!
car-ac-maintenance-tips

*கார் ஏசியை பராமரிக்க முக்கியமாக ஏசி பில்டர் பராமரிப்பு அவசியம். ஏசி பில்டர்களில் தூசி படிந்தால் குளிர்ச்சி குறையும். 5,000-10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை பில்டரை சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும். இது காற்றோட்டத்தை அதிகரிக்கும்.

*பார்க்கிங் டிப்ஸ்: காரை வெயிலில் நிறுத்தும்பொழுது சன்ஷேட் (Sunshade) அல்லது விண்டோ விஸர்களை (Window Visors) பயன்படுத்தினால் கேபின் வெப்பமடைவது தடுக்கப்படும்.

*ஏசி Vent அதாவது ஏசி துவாரங்களை கூரை நோக்கி வைத்தால், குளிர்ந்த காற்று கார் முழுதும் பரவி விரைவாக குளிர்ச்சியடையச் செய்யும்.

*ஏசி குளிரூட்டி (Gas) குறைவாக உள்ளதா என சரிபார்த்து, தேவைப்பட்டால் ரீசார்ஜ் செய்யவும். வருடத்திற்கு ஒருமுறை ஏசி கம்ப்ரஸர் ஆயில், கேஸ் அளவு மற்றும் லீக் உள்ளதா என்பதை சர்வீஸ் செய்து சரி பார்க்கவும்.

இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கோடைக் காலத்திலும் காரில் குளுகுளு எஃபெக்ட் அதிகம் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com