மடிக்கலாம்... நீட்டிக்கலாம்! சிறிய இடத்திலும் கச்சிதமாக பொருந்தும் நவீன டைனிங் டேபிள்கள்!

Modern dining tables
Modern dining tables
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிறிய வீடுகளுக்கு இடத்தை மிச்சப்படுத்தும் (space saving) ஸ்மார்ட் பர்னிச்சர்கள் தேவை. இடத்தை மிச்சப்படுத்தும் சிறிய டைனிங் டேபிள் குறைவான தரை இடத்தை எடுத்துக்கொள்ளும். இடத்தை மிச்சப்படுத்தும் வகையில் டைனிங் டேபிள் மற்றும் நாற்காலிகளின் வடிவம் கிடைக்கக்கூடிய இடத்தை அதிகமாக பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

சிறிய வீடுகளுக்கான முக்கிய டைனிங் டேபிள் யோசனைகள்:

மடிக்கக் கூடிய டைனிங் டேபிள்(Foldable Tables):

பயன்பாட்டில் இல்லாத பொழுது சுவரில் மடித்து வைக்கும் வகையில் உள்ள டைனிங் டேபிள் சிறிய அறைகளுக்கு மிகவும் ஏற்றது. இதனை சமையலறை அல்லது ஜன்னல் அருகே ஹாலில் பயன்படுத்தலாம். இது தரை இடத்தை முழுமையாக மிச்சப்படுத்துகிறது.

நீட்டிக்க கூடிய டேபிள்கள்(Extendable Tables):

தேவைப்படும்போது மட்டும் விரிவுபடுத்தி, மற்ற நேரங்களில் சிறியதாக வைத்துக் கொள்ளலாம். தினசரி பயன்பாட்டிற்கு சிறியதாகவும், விருந்தினர்கள் வரும்போது பெரியதாகவும் மாற்றிக் கொள்ளலாம். 6 பேர் உட்காரக்கூடிய வகையில் நீட்டிக்கக்கூடிய, விரிவாக்கக்கூடிய டைனிங் டேபிள்கள் ட்ரெண்டில் உள்ளன. பின்பு அதே டைனிங் டேபிள் மடித்து ஒரு டிராயரை உருவாக்கலாம்.

பெஞ்ச் கொண்ட செட் (Bench Dining Set):

நாற்காலிகளுக்கு பதிலாக பெஞ்சுகளை டேபிளுக்கு அடியில் தள்ளி வைக்கலாம். மேஜைக்கு கீழ் தள்ளக்கூடிய பெஞ்ச் இருக்கைகளை பயன்படுத்துவதன் மூலம் இடத்தை வெகுவாக மிச்சப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம்... தங்கம்... தங்கம்! எளியவர்களின் எட்டாக்கனியாகிறதா? ஒரு அலசல்!
Modern dining tables

வட்ட வடிவ டேபிள்கள் (Round Table):

வட்ட மேசைகள் அழகியல் மிக்கவை. தனித்துவமான தோற்றத்துடன் அனைவரையும் கவரும். கூர்மையான முனைகள் இல்லாததால் சிறிய இடங்களில் நடமாடுவதற்கு எளிதாக இருக்கும். வீட்டின் இட வசதியை அதிகரிக்கவும், 2-4 பேர் உட்காரவும் வசதியாக இருக்கும் இந்த நவீன வட்ட வடிவ டேபிள்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

சுவரொட்டிய மேஜை (Wall Mounted/Console Table):

சுவரோடு இணைக்கப்பட்ட மேஜைகள் இடத்தை மிச்சப்படுத்தி நவீன தோற்றத்தைத் தரும். இவற்றை வேலை செய்யும் அல்லது படிக்கும் டேபிள்களாக பயன்படுத்தலாம்.

மேலும் சில உபயோகமான குறிப்புகள்:

உலோகம் மற்றும் மரத்தால் ஆன கலவை உறுதியாகவும், குறைந்த இடத்தையும் ஆக்கிரமிக்க கூடியவை. கண்ணாடியால் ஆன மேற்பரப்பு சிறிய அறையை பெரியதாக காட்ட உதவும். ஆறு பேர் அமரக்கூடிய வகையில் நீட்டிக்க கூடிய விரிவாக்கக்கூடிய டைனிங் டேபிள்.

டைனிங் டேபிளை அறையின் நடுவில் போடாமல் சுவரோரம் வைப்பது இடத்தை பெரியதாக காட்டும். இடத்தை மிச்சப்படுத்தும் டைனிங் டேபிள்களுக்கு குறைந்த இடம் தேவைப்பட்டாலும் அதிக பயன்பாட்டை வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com