

நீங்கள் வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்கும் போது தரை டைல்ஸ்களில் பெயிண்ட் மற்றும் சிமெண்ட் கறைகள் ஏற்பட்டால் மிகவும் கடினமான விலையுயர்ந்த கெமிகல்களை கொண்டு அதை சுத்தப்படுத்துதவதற்குப் பதிலாக சில எளிய அதிக செலவில்லாத வழிகளை மேற்கொண்டு கறையை நீக்கலாம். அப்படிப்பட்ட பத்து குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
பெயிண்ட் கறைபட்டிருந்தால் ஈரத்துணியைக் கொண்டு உடனடியாகத் துடைக்கவும். சுவர்களில் இருந்தாலும் இப்படிச் செய்யுங்கள். அது தண்ணீர் கலந்த பெயிண்டாக இருந்தால், வெது வெதுப்பான நீரில் வாஷிங் லிக்விட் சேர்த்து முதலில் துடைத்த பிறகு, ஒரு சுத்தமான துணியால் நல்ல தண்ணீரை விட்டுத் துடைக்கவும்.
பெயிண்ட் காய்ந்திருந்தால் அதை நீக்குவது சிறிது கஷ்டமாக இருக்கும். முதலில் வெதுப்பான நீரில் துணியை நனைத்து பெயிண்ட் கறை மீது சில நிமிடங்கள் வைக்கவும். வாஷிங் சோப்பையும் அதில் சேர்க்கலாம். பிறகு ஒரு ப்ளாஸ்டிக் கரண்டியால் மெதுவாக பெயிண்டை சுரண்ட வேண்டும். கறை போகும் வரை இப்படிச் செய்யவும். இந்த முறையை செராமிக் மற்றும் போர் செலின் டைல்களுக்குப் பயன்படுத்தலாம்.
மிகவும் அழுத்தமான பெயிண்ட் கறை இருந்தால் ப்ளாஸ்டிக் ஸ்க்ரப்பரால் சுரண்டி எடுக்கவும். கத்தி மற்றும் ஸ்டீல் நார்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவைகளால் டைல்களில் கீறல் ஏற்பட வாய்ப்புண்டு. நைலான் ப்ரஷ் பயன்படுத்தலாம் மிகப் பொறுமையாக இதைச் செய்ய வேண்டும்.
ஆயில் மற்றும் இனாமல் கலந்த பெயிண்டுகளாக இருந்தால் அகற்றுவது கடினமாகும். இதற்கு பெயிண்ட் ரிமூவர் பயன்படுத்தவும். சிறிது கறை மீது தடவி ப்ளாஸ்டிக் ஸ்க்ரப்பரால் சுரண்டி எடுக்கவும். நீங்கள் இப்படிச் செய்யும்போது கையுறை அணிவது. நல்லது வேறு க்ளீனிங் லிக்விட் பயன்படுத்த வேண்டாம். அவை டைல்களை மோசமாகக்கும்.
சிமெண்ட் கறையைப் போக்க அவை கெட்டியாவதற்கு முன் துடைத்தால் சுலபமாக இருக்கும். ப்ளாஸ்டிக் ஸ்க்ரப்பர் கொண்டு சுரண்டி எடுக்கவும். ஒரு ஈரமான ஸ்பான்ஜால் பிறகு துடைக்கவும். துணியை அடிக்கடி நனைத்துத் துடைக்கவும். தரை மற்றும் சுவர் இரண்டிற்கும் இப்படி சுத்தம் செய்யலாம். கோடுகள் இருந்தால் கவனித்து செய்யவும்.
சிமெண்ட் கறை மீது வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். ஒரு துணியால் மூடிவைக்கலாம். சிறிது நேரத்திற்குப் பிறகு மென்மையான ப்ரஷ் அல்லது ப்ளாஸ்டிக் கரண்டியால் சுரண்டி எடுக்கவும். இதை பலமுறை செய்ய வேண்டியிருக்கும்.
சிமெண்ட் ரிமூவரை பயன்படுத்தலாம். அதில் உள்ள குறிப்புகளின்படி பயன்படுத்தவும். சில சிமெண்ட் ரிமூவரில் அமிலம் இருக்கும். எனவே உங்கள் டைல்ஸ்களுக்கு ஏற்றதான ரிமூவரை பயன்படுத்தவும்.
சிமெண்ட் கறையை நீக்க சிமெண்ட் ஹேஸ் பயன்படுத்தலாம். இதை துடைத்து எடுப்பது சிரமமாக இருக்கும். இதை உபயோகித்து கறை போகவில்லை என்றால் டைல்ஸ் போடுபவரை அழைத்து யோசனை கேட்கவும். எந்தச் சூழலிலும் அமிலம் கலந்த கெமிகல் பயன்படுத்த வேண்டாம்.
பெயிண்ட் மற்றும் சிமெண்ட் கறைகள் டைல்களில் உள்ள கோடுகளில் ஏற்படலாம். இதை நைலான் ப்ரஷ் கொண்டு பொறுமையாக சுத்தம் செய்யவும். எந்த டைல்களையும் நன்றாக துடைத்து காயவைக்கவும்.
பெயிண்ட் மற்றும் சிமெண்ட் கறைகள் கோடுகளில் படாமல் இருக்க வேண்டும். அப்படி கறை ஏற்பட்டால் அதை நைலான்டூத் ப்ரஷ்ஷால் லேசாக சுரண்டி எடுக்கவும். உங்கள் டைல்ஸ்களை மைக்ரோ ஃபைபர் துணியால் சுத்தம் செய்து காய வைக்கவும். நீங்கள் சுத்தம் செய்யும்போது மற்ற இடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நியூஸ் பேப்பரை பிரித்து வைக்கவும்.
வெதுவெதுப்பான நீர், வாஷிங் லிக்விட், பிளாஸ்டிக் ஸ்கிராப்பர் போன்ற வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டு, பெயிண்ட் அடிப்பதால் ஏற்படும் டைல்ஸ் கறைகளைப் பாதுகாப்பாக அகற்ற இது வீட்டு உரிமையாளர்களுக்கு உதவுகிறது.