

தமிழ்நாட்டில் அல்லது இந்தியா முழுவதிலும் உபயோகிக்கப்படும் மிக்சர் கிரைண்டர்கள், அவற்றின் ‘வடிவமைப்பு வசதிகள் திறனுக்கு அப்பாற்பட்டு’ மிகவும் தீவிரமாக அல்லது ஓவராக பயன்படுத்தப்படுகின்றன. (எ. கா) நாம் செய்யும் கெட்டியான மாவு அரைப்புகள், தேங்காய் சட்னிகள் மற்றும் கடினமான மசாலாக்களின் அரைப்பு, மிக்ஸியில் பெரும்பாலும் தினமும் இடைவெளி இல்லாமல் அரைக்கப்படுகின்றன. இப்படி மிக்ஸிக்கு நாம் கொடுக்கும் தொடர்ச்சியான அழுத்தம், அதில் சிறு விரிசல்கள், பிளேடின் அடிப்பகுதியின் அருகில் கசிவு ஏற்பட்டு அரைக்கும் பொருட்கள் வெளியேறலாம் மற்றும் ஜாடியின் அடிப்பகுதியில் உள்ள கப்ளர்(coupler) லூஸ் ஆகலாம். அரைத்து பின்பு உண்டாகும் தொடர்ச்சியான வெப்பம் மற்றும் அழுத்தங்களோடு மிக்ஸி ஜாடியை இன்னும் பயன்படுத்தினால், ஜாடியில் பயன்படுத்தியுள்ள ‘பாலிகார்பனேட்(polycarbonate), அதன் கைப்பிடி பொருட்களான ABS யை’ பலவீனப்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக மிக்ஸி ஜாடிக்கு ரெஸ்ட் கொடுக்காமல் ஈரமான பொருட்களையும், கனமான பொருட்களையும் மாறி மாறிப் பயன்படுத்தப்படும்போது இந்த பிரச்னை நிகழ்கிறது.
பயன்படுத்துபவர்கள் செய்யும் முக்கிய தவறுகள்:
ஜாடியின் ஆயுளைக் குறைக்கும் மிக முக்கியமான தவறுகளை சிலர் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.
ஜாடிகளில் அளவுக்கு அதிகமாக பொருட்களை நிரப்புவது, அதில் அதிகப்படியான அழுத்தத்தை உருவாக்கி, அடிப்பகுதியில் விரிசலை ஏற்படுத்துகிறது.
சூடான ஜாடிகளை குளிர் வைக்காமல் தொடர்ந்து இயக்குவது, அதன் சீல்கள் மற்றும் பிளேடுகளை அதிக வெப்பமாக்குகிறது.
காய்ந்த மசாலாப் பொருட்களை அரைத்து முடித்த கையுடன், உடனடியாக ஈரமான மாவு பொருட்களை அரைக்க தொடங்குவது, ஜாடியில் ‘வெப்ப வேறுபாடுகளை’ ஏற்படுத்தி; அதிலுள்ள ஸ்க்ரூ, நட் போன்ற இணைப்பு பொருட்களை பலவீனப்படுத்துகிறது.
ஜாடியில் உள்ள பிளேடின் அடிப்பகுதியில் இருக்கும் ‘ரப்பர் கேஸ்கெட்டுகளை’ சுத்தமாக வைக்கவும் அல்லது தேவைப்பட்டால் மாற்ற வேண்டும்; இது ஜாடிக்கு வெளியே கசிவை ஏற்படுத்துகிறது.
உங்கள் தேவைக்கேற்ற வகையில் அந்தந்த ஜாடிகளை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஜாடியில் தேவையற்ற கீறில்கள், பிளேடுகளை மழுங்கச் செய்கிறது.
அசால்ட்டாக ஜாடியை மூடுவது அல்லது கவனக்குறைவாக அதை கையாளுவது; அதிலுள்ள கப்ளர், பிற இணைப்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இறுதியாக, ஜாடிகளை ஈரமாகவோ அல்லது சுத்தம் செய்யாமலோ மூடி வைப்பது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் துருப்பிடிப்பை ஊக்குவிக்கிறது. இது ஜாடியை மெதுவாகச் சேதப்படுத்துகிறது.
ஒரு வேலை உற்பத்தியிலே பிரச்னை இருந்தால்?
நம் பழக்கவழக்கங்கள் இந்த பிரச்னைகளுக்கு முதன்மை காரணங்களாக இருந்தாலும், அதன் தயாரிப்பில் உண்டாகும் சில உற்பத்தி குறைபாடுகளும், இந்த பிரச்னையை பெரிதாகின்றன. பிளேடுக்கு அடியில் சரியாக பொருத்தப்படாத கேஸ்கெட்டுகள், தரம் குறைந்த பிளேடு அமைப்புகள் அல்லது பலவீனமான பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை முன்கூட்டியே கசிவு அல்லது விரிசல்களை ஏற்படுத்தலாம். ஆக அதை உன்னிப்பாக பார்த்து வாங்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான வீடுகளில் இந்தக் குறைபாடுகள் எழுந்தவுடன், உடனே ‘பிராண்டைதான் முதலில் குறை கூறுவர்’. ஆனால் உண்மையில்
மேலே கூறியதுபோல் நம் தவறுகள் மூலம் தான் அதிகம் பிரச்னை வருகின்றன.
ஜாடி சேதத்திற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மை:
வெப்ப மாற்றம் மற்றும் உராய்வினால் வரும் தேய்மானம் ஆகியவை ஜாடி பழுதடைவதற்கான முக்கிய காரணங்கள் என்பது பொருள் அறிவியல் ஆராய்ச்சி(Material science research) உறுதிப்படுத்துகிறது. மேலே கூறியதுபோல அரைத்த பின்பு இருக்கும் சூடு போவதற்குள், குளிர்ந்த திரவங்களை அரைக்க பயன்படுத்தப்படும்போது; ஜாடியில் உள்ள பிளாஸ்டிக், உலோகங்கள் வெவ்வேறு விகிதங்களில் விரிவடைந்து, பிளேடு இணைப்பைப் பலவீனப்படுத்துகின்றன.
இதேபோல் ஊற வைத்த பருப்பு வகைகள், பல சமயங்களில் உராய்வுப்(scratch) பொருளாகச் செயல்பட்டு, காலப்போக்கில் ஜாடியின் உட்பகுதிகளை கீறுகின்றன. எனவே தவறாக பயன்படுத்தினால் அது ‘உயர்தர ஜாடிகளாக’ இருந்தாலும் கூட சேதமாகும் என்பதை இது விளக்குகிறது.
சிலரின் வார்த்தைகள்:
தாமஸ் எடிசன் ஒருமுறை கூறினார், ‘ஒரு பொருளின் மேல் உள்ள மதிப்பு, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் உள்ளது.’ மிக்ஸர் கிரைண்டர்களைப் பொறுத்தவரை, நீடித்து உழைக்கும் ஜாடிகளின் தலையெழுத்து, அதை பயன்படுத்துவோர் அவற்றை சரியாகக் கையாண்டால் மட்டுமே உறுதியாகும். ஒரு தொழில்நுட்பத்தின் வலிமை, அதன் பயன்பாட்டிற்குப் பின்னால் நடக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அமைகிறது என்பதை அவரது வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
ஆக, பொருளின் ஆயுட்காலம் என்பது பிராண்ட் கொடுக்கும் தரத்தை விட பயன்படுத்துவோர் ஒழுக்கத்தையே அதிகம் சார்ந்துள்ளது. கவனத்துடன் கையாள்வதன் மூலம், ஜாடிகள் சராசரியாக 2-3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து, உங்களின் நம்பகமான சமையலறைத் தோழர்களாக மாறும்.
சமையலறையில் தினமும் பயன்படுத்தும் மிக்ஸியை சரியாகக் கையாள்வதன் மூலம் ஜாடிகளின் விரிசல் மற்றும் கசிவைத் தவிர்த்து, அதன் ஆயுளை 2-3 ஆண்டுகள் வரை அதிகரிக்கலாம்.