வீட்டை அரண்மனை போல மாற்ற இந்த ஒரு டேபிள் போதும்.. இதன் சீக்ரெட் பயன்களை தெரிஞ்சுக்கோங்க!

Console Table
Console Table
Published on

வீட்டை அழகாக அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் கடைகளுக்குச் சென்று மரச்சாமான்களை வாங்கும்போது, எந்த டேபிளை எங்கு வைப்பது என்ற குழப்பம் வருவது ரொம்பவே சகஜம். அப்படிப்பட்ட ஒரு தனித்துவமான, பலருக்கும் அதிக அறிமுகம் இல்லாத ஒரு பர்னிச்சர் தான் கன்சோல் டேபிள் (Console Table). 

பார்ப்பதற்கு ரொம்பவே ஸ்டைலாக இருக்கும் இந்த மேசைகள், நமது வீட்டில் இருக்கும் குறுகலான இடங்களை கூட மிக நேர்த்தியாக பயன்படுத்த உதவுகின்றன. இந்த கன்சோல் மேசைகள் என்பது என்ன, அவை வழக்கமான சைட் டேபிள்களில் இருந்து எப்படி மாறுபடுகின்றன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்சோல் டேபிளின் தனித்துவம்!

பொதுவாக ஒரு மேசை என்றால் அது அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும் என்று நாம் நினைப்போம். ஆனால் கன்சோல் டேபிளின் டிசைனே ரொம்பவும் வித்தியாசமானது. இவை சுவற்றோடு ஒட்டி வைப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை.

தரையில் இருந்து சுமார் 30-36 அங்குல உயரத்தில் இருக்கும் இந்த மேசைகள், ரொம்பவே குறைவான அகலத்தை கொண்டவை. அதாவது பன்னிரண்டு முதல் பதினெட்டு அங்குல அகலம் மட்டுமே இருக்கும். இதனால் வீட்டில் நடமாடும் போது இது எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தாது.

சைட் டேபிள் Vs கன்சோல் டேபிள்!

நம்மில் பலர் இந்த இரண்டு மேசைகளையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வதுண்டு. ஆனால் இரண்டும் முற்றிலும் வேறானவை. சைட் டேபிள் என்பது சோபாவில் அமர்ந்திருப்பவர்கள் காபி கப்பை வைப்பதற்கு வசதியாக, வெறும் பதினெட்டு முதல் இருபத்து நான்கு அங்குல உயரத்தில் குட்டையாக இருக்கும். மேலும் இது சதுரம் அல்லது வட்ட வடிவில் குறைவான அகலம் கொண்டிருக்கும். 

ஆனால் கன்சோல் மேசையோ அதிக நீளமும் குறைவான அகலமும் கொண்டு உயரமாக காட்சியளிக்கும். சைட் டேபிளை சோபாவிற்கு அருகிலும், கன்சோல் டேபிளை ஒரு பெரிய காலி சுவற்றை ஒட்டியும் வைப்பதுதான் பார்ப்பதற்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். இடத்தை மாற்றி வைத்தால் அது அந்த அறையின் அழகையே கெடுத்துவிடும்.

வீட்டில் வைக்க ஏற்ற இடங்கள்!

இந்த டேபிளை வீட்டின் நுழைவாயிலுக்கு உள்ளே வைப்பது ரொம்பவே ஸ்மார்ட்டான ஒரு ஐடியா. வீட்டின் உள்ளே நுழைந்ததும் கார் சாவி, கடிதங்கள் அல்லது குடைகளை வைப்பதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும். இதன் நேர் மேலே ஒரு அழகான கண்ணாடியை மாட்டி வைத்தால், வெளியே கிளம்பும் போது முகத்தை பார்த்துக்கொள்ள ரொம்பவே உதவியாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வீட்டினுடைய ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்!
Console Table

அதேபோல, ஹாலில் இருக்கும் பெரிய சோபாவின் பின்புறம் காலியாக இருந்தால், அங்கு இந்த மேசையை வைக்கலாம். இதன் மேல் அழகான மின்விளக்குகளை வைக்கும்போது அறைக்கு ஒரு பிரம்மாண்டமான தோற்றம் கிடைக்கும். ஆனால், இதன் உயரம் சோபாவின் பின்புறத்தை விட சற்று குறைவாகவே இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், கன்சோல் டேபிள், உங்கள் வீட்டின் குறுகலான தாழ்வாரங்கள், காலியான சுவர்களை அலங்கரிக்க வந்த ஒரு மாபெரும் வரப்பிரசாதம். இது அதிக இடத்தை அடைக்காமல், அதே சமயம் தேவையான பொருட்களை வைத்துக்கொள்ளும் ஒரு நடைமுறை பயன்பாட்டையும் கொடுக்கிறது. 

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது..!
Console Table

சரியான அளவுகளில் உங்களின் வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு ஒரு கன்சோல் மேசையை தேர்ந்தெடுத்து வைத்தால், அது உங்கள் வீட்டின் இன்டீரியர் டிசைனை வேற லெவலுக்கு கொண்டு செல்லும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com