சமையலறையில் நடக்கும் பெரிய விபத்தைத் தவிர்க்க... குக்கர் விசிலை ஈஸியாக சுத்தம் செய்யும் சீக்ரெட் டிப்ஸ்!

Cooker Cleaning Tips
Cooker Cleaning Tips
Updated on

ன்றைய காலத்தில் அவசரமாக சமைக்க உதவும் பிரஷர் குக்கர், சில நேரங்களில் பெரிய ஆபத்தாக மாறுகிறது. இதற்கான முக்கிய காரணமே அதன் மூடியில் இருக்கும் சிறிய விசிலை நாம் முறையாகப் பராமரிக்காததுதான். உள்ளே இருக்கும் அடைப்புகளை நீக்காமல் அப்படியே பயன்படுத்துவதால் தான் பெரிய அளவிலான விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த அடைப்புகளை எப்படி எளிதாக நீக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விசில்!

குக்கர் சீக்கிரமாக உணவை வேகவைக்க உதவுவதில் 80 சதவீத பங்கு அந்த சிறிய விசிலுக்குத்தான் உண்டு. உள்ளே கொதிக்கும் நீரால் ஏற்படும் அதிகப்படியான காற்று அழுத்தத்தை, சீரான முறையில் வெளியேற்றும் வால்வாக இது செயல்படுகிறது. ஒருவேளை இதில் உணவுத்துணுக்குகள் மாட்டி அடைப்பு ஏற்பட்டால், அந்த அழுத்தம் வெளியேற முடியாமல் உள்ளேயே தேங்கி குக்கர் வெடித்துச் சிதறும் நிலை உருவாகிறது. மேலும், சாப்பாடு எந்த அளவுக்கு வெந்திருக்கிறது என்ற பக்குவத்தை நமக்கு உணர்த்துவதும் இந்த அலாரம் போன்ற விசில்தான்.

சுத்தம் செய்யும் முறை! 

முதலில் விசிலில் இருக்கும் பிளாஸ்டிக் கைப்பிடியையும், இரும்புப் பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, அதனுடன் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான சருமம்... நீளமான கூந்தல்... அரிசித் தண்ணீர் தரும் 5 மேஜிக் பயன்கள்!
Cooker Cleaning Tips

தண்ணீர் ஆறிய பிறகு, வீட்டில் பயன்படுத்தாத பழைய டூத் பிரஷ்ஷில் சிறிது பேக்கிங் சோடாவைத் தொட்டு, விசிலின் துளைகளில் நன்றாகத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்யும்போது உள்ளே பல நாட்களாக இறுகிப்போய் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் முழுமையாக வெளியேறிவிடும். பிறகு நல்ல தண்ணீரில் அலசிவிட்டு வெயிலில் காயவைக்கலாம்.

கஞ்சித் தண்ணீர், டிடர்ஜென்ட்!

வினிகர் இல்லாதவர்கள் நமது வீடுகளில் சாதம் வடித்த சுடச்சுட இருக்கும் கஞ்சித் தண்ணீரைக்கூட பயன்படுத்தலாம். சூடான கஞ்சியில் இந்த அழுக்கான விசிலை சிறிது நேரம் ஊறப்போட்டு, பின்பு பிரஷ்ஷால் தேய்த்தால் அடைப்புகள் ஈஸியாக நீங்கிவிடும். அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் தண்ணீர், துணி துவைக்கும் டிடர்ஜென்ட் தூள் மற்றும் சிறிது பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொதிக்க வைத்து, அதில் விசிலைப் போட்டு சுத்தம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: தினமும் பால் காய்ச்சுகிறீர்கள்தானே?! ஜாக்கிரதை... இந்தத் தப்பை மட்டும் பண்ணாதீங்க...
Cooker Cleaning Tips

தினமும் குக்கரை சோப்பு போட்டுக் கழுவும் நாம், அதிலிருக்கும் மிக முக்கியமான பாகமான விசிலைக் கண்டுகொள்வதே இல்லை. பாத்திரத்தைக் கழுவும்போதே விசிலையும் கழற்றி தினமும் லேசாகச் சுத்தம் செய்வது மிகவும் பாதுகாப்பானது. அப்படி முடியாவிட்டாலும், வாரம் ஒரு முறையாவது இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி ஆழமாகச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com