சமையல் எரிவாயு பயன்பாடு - அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகள்!

Gas cylinder
Gas cylinder
Published on

விழிப்புணர்வு தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருள்களில் கேஸ் முதலிடம் பெறுகிறது. விபத்துக்கள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க சமையல் எரிவாயு பாதுகாப்பு முக்கியமானது. நாம் எச்சரிக்கையாக பின்பற்ற வேண்டிய சில அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகள் பற்றி காண்போம்.

உங்கள் சமையல் எரிவாயு அமைப்பு ஒரு தகுதி வாய்ந்த நிபுணரால் அல்லது அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரால் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வழக்கமான பராமரிப்பு சோதனைகளை தவறாமல் செய்வது நல்லது.

ஏதேனும் சாத்தியமான கசிவுகள் இருந்தால் எச்சரிக்க ஒரு வாயு கசிவைக் கண்டறியும் கருவியை நிறுவவும். இதைப்பற்றி அறிய எரிவாயு நிறுவனத்தின் உதவியைப் பெறலாம். கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் சரியாக பொருந்தாவிடில் தொடர்ந்து முயற்சி செய்யாமல் எச்சரிக்கையுடன் மூடி வைத்து புகார் அளிக்கவும்.

பாதுகாப்பான சமையல் நடைமுறைகளை பின்பற்றி விபத்துகளைத் தடுக்கலாம். உங்கள் எரிவாயு அடுப்பை பாதிக்காத பொருத்தமான சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.

தீக்காயங்கள் மற்றும் தீச்சிதறல்களைத் தடுக்க சமையல் செய்யும் மேடையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளி பாதுகாப்பான தூரத்தை கடைபிடியுங்கள்.

இதையும் படியுங்கள்:
ரூ.35 லட்ச பட்ஜெட் தான்; ஆனால் வசூலோ ரூ.5 கோடி! சாதனை படைத்த சூப்பர் ஹிட் படம் இதுதான்...
Gas cylinder

சமையல் அறையில் செல்போன் பேசியபடி சமையலைக் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். விபத்துகளைத் தடுக்க சமையல் செய்யும் போது எப்போதும் சமையலறையில் மட்டுமே கவனமாக இருக்கவும். குறிப்பாக குழந்தைகளை சமையல் செய்யும் இடத்திலிருந்து விலக்கி வைக்கவும்.

சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இதோ:

எரிவாயு சிலிண்டர்களை இருப்பு வைக்கும் போது வெப்ப மூலங்கள் மற்றும் எரியக்கூடிய பொருட்கள் இல்லாத இடத்தில் நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்கவும்.

கசிவு சந்தேகம் இருந்தால் இணைப்புகளுக்கு சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தி குமிழ்களைத் தேடுவதன் மூலமும் கசிவுகளை கண்டறிந்து எச்சரிக்கை பெறலாம்.

எரிவாயு அழுத்தம் பாதுகாப்பான வரம்பிற்குள் இருப்பதை உறுதிசெய்ய, எரிவாயு சீராக்கியை அல்லது ரெகுலேட்டரை பயன்படுத்தவும்.

எப்போதும் உங்கள் கண்களில் படுமாறு தீயணைப்புத் துறை மற்றும் எரிவாயு நிறுவனம் போன்ற அவசரகால எண்களை எழுதி வைக்கவும்.

எதிர்பாராமல் திடீரென கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். வாயு கசிவு ஏற்பட்டால், எரிவாயு விநியோகத்தை சட்டென அணைத்து அந்தப் பகுதியை காற்றோட்டம் செய்து, அவசர உதவிக்கு நிபுணரை அழைக்கவும்.

இதையும் படியுங்கள்:
உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்க! 
Gas cylinder

அதேபோல் தீ விபத்து ஏற்பட்டால், எரிவாயு விநியோகத்தை அணைத்து அந்த இடத்திலிருந்து வெளியேறி காலி செய்து, தீயணைப்பு துறையை அழைக்கவும். குறிப்பாக இது போன்ற அவசரநிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை குடும்பத்தினர் அனைவரும் அறிந்திருப்பதை உறுதிசெய்ய குடும்பத்தினருடன் அவசரகால பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இவைகளுடன் கேஸ் சிலிண்டர் பெறும் போது சிலிண்டர் சீலை அகற்றி வாஷர் சரியாக இருக்கிறதா கேஸ் கசிவு இருக்கிறதா என சிலிண்டரை விநியோகிக்கும் ஊழியர் உறுதி செய்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யும் போது இது போன்ற விதிகளை பின்பற்றுவதில்லை என்பதால் இதில் நிச்சயம் எச்சரிக்கை தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com