🤯 என்னது! வீட்டை இப்படி சுத்தம் செஞ்சா போதும்... மாமியார் கூட உங்ககிட்ட டிப்ஸ் கேட்பாங்க!

daily home hacks
daily home hacks
Published on

வீட்டை சுத்தமாக வைத்திருக்க சிறந்த 5 தினசரி வீட்டு குறிப்புகள் (Top 5 daily home hacks for a clean house):

1. முதலில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இதில் பிள்ளைகள் முதல் பெரியவர் வரை அவரவருக்கு முடிந்ததை செய்வதை தினசரி கடமையாக்க வேண்டும்.

2. காலை எழுந்ததும் கலைந்திருக்கும் விரிப்பை சரி செய்து தலையணைகளை சீராக வைத்து பெட் சீட்டுகளை மடித்து அதன் இடத்தில் வைக்க வேண்டும். வரவேற்பறையில் போடப்படும் நாளிதழ்களை அழகாக மடித்து வைப்பது, கார்பெட் இருந்தால் அதை கருவி கொண்டு தூசின்றி தூய்மையாக வைப்பது ஆகியவைகள் அன்றாடம் கவனிக்கப்பட வேண்டும்.

3. குளியலறை கடமைகள் முடிந்த பின்னர் சோப்பு படிந்திருக்கும் தரைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது கறை படியாமல் தடுப்பதுடன் பூச்சிகளைத் தடுத்து ஆரோக்கியம் தரும்.

4.சமைத்த பிறகு சமையலறையை சுத்தம் செய்தல் என்பது மிக முக்கியமானது. காய்கறி வெட்டும் கத்தி முதல் உபயோகித்த பாத்திரம் வரை கழுவி நீரின்றி கவிழ்த்து சமையல் மேடையை சிறிது உப்பு கலந்த நீரினால் துடைக்க வேண்டும். சிங்க்கை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றுங்கள்.

5. தோட்டங்கள் செடி கொடிகள் உள்ள தொட்டிகள் இருந்தால் அதற்கு தினம் நீரூற்றி பராமரிக்க வேண்டும். வேலை பளு என்றால் அதற்கென பணியாளர் நியமித்து அவற்றை வளர்ப்பது நல்லது.

எளிய மற்றும் பயனுள்ள தினசரி வீட்டு குறிப்புகள் (Simple and effective daily home hacks)

1.தினசரி செய்ய வேண்டிய வேலைப் பட்டியல்களை உருவாக்குவதுடன் அதை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு போடும் திட்டம் உங்கள் தினசரி வீட்டு வேலைகளையும், பணிகளையும் திறம்படவும் எளிதாகவும் நிர்வகிக்க உதவும்.

2.பொதுவாக குப்பைகள் ஆங்காங்கே சிதறும் உணவுத் துணுக்குகள் இல்லாமல் இருந்தாலே பல்லி போன்ற பூச்சிகள்கள் வராது. பல்லிகளைத் தடுக்க சாக்பீஸ்களைப் பொடி செய்து ட்யூப் லைட் அருகே தடவலாம். மஞ்சள் மற்றும் முட்டை ஓடுகளும் பல்லிகள் வராமல் தடுக்கும்.

3. எண்ணெய் ஊற்றி அன்றாடம் பயன்படுத்தும் கிண்ணங்களை வாரம் ஒரு முறை சோடா உப்பு , கல் உப்பு கலந்த கொதிக்கும் நீரில் மூழ்கி வைத்து எண்ணெய் பிசுக்கு அகற்றினால் உபயோகிக்க உற்சாகமாக இருக்கும்.

4.விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டால் சிரமம் குறையும். சமையலையும் ஆண் பெண் பாகுபாடின்றி செய்யப் பழகுவது பணி செல்வோருக்கு பயனுள்ளதாக மாறும். இதனால் ஏற்படும் டென்ஷனும் குறையும்.

5.குழந்தைகள் இருந்தால் அவரவர் சாப்பிடும் தட்டங்களை கழுவுதல் முதல் அவரவர் பொருள்களை அதற்குரிய இடத்தில் (உதாரணமாக சாக்ஸ், ஷூ ) வைக்கப் பழக்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான பால் உருண்டைகளும், உளுந்து ஜாமூனும்!
daily home hacks

சமையலறை ஒழுங்கமைப்பிற்கான தினசரி வீட்டு குறிப்புகள் (Daily home hacks for kitchen organization)

1. சமையலுக்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை அழகாக பிரித்து அடுக்கிக் கொள்வது சிரமம் குறைக்கும். உதாரணமாக அஞ்சறைப் பெட்டி பொருள்கள் ( மஞ்சள், கடுகு, போன்றவை), கிள்ளி வைக்கப்பட்ட கொத்தமல்லி, பொதினா , காம்பு கிள்ளிய மிளகாய் போன்றவைகள்..

2.சமையலறை உபயோகப் பொருட்களை (உதாரணமாக அடிக்கடி எடுக்கும் கத்தி மரப்பலகை போன்றவைகள்) அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் எளிதாக எடுக்கும் வகையில் தனித்தனியாகப் பிரித்து வைக்கலாம்.

3.தினசரி பயன்படுத்தும் பொருட்களை, அவை பயன்படுத்தப்படும் இடங்களுக்கு அருகிலேயே வைத்திருப்ப்பது நல்லது. உதாரணமாக, சமையலுக்குத் தேவையான பொருட்களை சமையல் அடுப்பருகே அடுக்கில் வைப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.

4.தினசரி சமையல் தேவைகளுக்கு ஏற்றவாறு சமையலறை மாடங்கள், அடுக்குகளை அமைப்பது சமையலறையை ஒழுங்காகவும், பயன்படுத்த எளிதாகவும் மாற்றும்.

5.சமையலறையில் அதிக பயன்பாட்டில் உள்ள சிங்குக்கு அருகில் அடைக்கும் குப்பைகளை போட ஏதுவாக பொருளும், தினசரி மிதமான சுடுநீரில் உப்பு அல்லது எலுமிச்சை கலந்து சுத்தம் செய்வதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
மகள் திருமணத்தன்று கிரைண்டர் விபத்தில் அம்மா மரணம்! அதிர வைத்த உண்மைச் சம்பவம்!
daily home hacks

இந்த தினசரி வீட்டு குறிப்புகள் மூலம் நேரத்தை சேமிக்கவும் (Save time with these daily home hacks)

1.மிக்சி கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை மாதம் ஓரு முறையாவது சரியாக இருக்கிறதா என பரிசோதனை செய்து கொண்டால் பழுது ஏற்படாமல் காக்கலாம்.

2.அடுத்த நாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை தனிக்கவரில் எடுத்து வைத்துக் கொள்வதும், அதற்கான பொருள்களை சரிபார்த்துக் கொள்வதும் சமையலை எளிதாக்கும்.

3.தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர வாரியாக வீட்டை சுத்தப்படுத்தும் பணிகளை உங்கள் காலெண்டரில் குறித்துக்கொள்ளுங்கள், இதனால் பணிகளை திட்டமிட்டு தவறாமல் பணிகளை செய்ய முடியும்.

4.தினசரி அதிக நேரம் செலவிடும் இடங்களான சமையலறை, ஹால், படிப்பறை , படுக்கை அறை போன்ற இடங்களில் உள்ள பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாலே அவற்றை பயன்படுத்தும் போது சிரமம் வராது.

5. அன்றாடம் துவைக்கும் துணிகளை அப்படியே போடாமல் அன்றன்றே மடித்து வைப்பது போன்றவற்றை கடைபிடித்து ஒழுங்கீனத்தை குறைத்தாலே நமது வீட்டை நேர்த்தியாகவும் மனதுக்கு அமைதியானதாகவும் மாற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com