பெற்றோரின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் மகள்கள்: சிறந்த மகளுக்கான 8 குணங்கள்!

8 qualities of great daughter
Daughter with mother
Published on

ரு குடும்பத்தில் பெண் பிறந்தால் மகாலட்சுமி பிறந்திருக்கிறாள் என்று சொல்வதுண்டு. நல்ல மகளுக்கான அடையாளங்களாக 8 விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல்: ஒரு நல்ல மகள் வீட்டுப் பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொள்கிறாள். கேட்காமலேயே அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவுவது, உடன்பிறப்புகளை கவனித்துக் கொள்ளுதல், அப்பாவிற்குத் தேவையான உதவிகளை செய்வது என்று மிகவும் பொறுப்புள்ள பெண்ணாகத் திகழ்வாள். நல்ல மகள் தனக்கான பொறுப்புகளை தட்டிக்கழிக்க மாட்டாள். அவற்றை அன்போடு ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவாள். இந்த குணம் அவளது மனமுதிர்ச்சியையும் குடும்பத்தின் நல்வாழ்வில் அவளுடைய அக்கறையான பங்கையும் நிரூபிக்கிறது.

2. மரியாதை: ஒரு நல்ல மகள் தனது பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பாள். அவர்களின் கருத்துக்களை மதிப்பாள். பெற்றோர் சொல்லும் எல்லாவற்றிற்கும் உடன்படாவிட்டாலும் கூட தனது மறுப்பை மிகவும் நாகரிகமாக கண்ணியமாக தெரிவிப்பாள். மரியாதைக்குரிய முறையில் அவர்களுடன் உரையாடுவாள். பெற்றோரின் வழிகாட்டுதலை மதித்து நடப்பாள்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியோடு என்றும் வாழ வைக்கும் கருப்பு கொள்ளு உணவு!
8 qualities of great daughter

3. ஆதரவு: தனது பெற்றோரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வாள். கடினமான காலகட்டங்களில் பெற்றோருக்கு அவள் தனது மனப்பூர்வமான ஆதரவை வழங்குவாள். அவர்கள் மனச்சோர்வடையும்போது தைரியம் தந்து மனரீதியான ஆதரவளிப்பாள். இது பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே ஒரு ஆழமான பாசப்பிணைப்பை உருவாக்குகிறது. தம்முடைய கஷ்ட, நஷ்டங்களில் மகள் பங்கேற்கிறாள், ஆதரவு தருகிறாள் என்கிற உணர்வு பெற்றோருக்கு பெரிய மனோபலத்தைத் தரும்.

4. அங்கீகரித்தல்: ஒரு நல்ல மகள் தனது பெற்றோர், குடும்பத்திற்காக செய்த தியாகத்தை அங்கீகரித்து பாராட்டுவாள். குடும்பத்தை பராமரிக்க பெற்றோர் மேற்கொண்ட கடின உழைப்பு, அர்ப்பணிப்புணர்வு, நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதம், பிள்ளைகளை வளர்ப்பதற்காக அவர்கள் செய்து கொண்ட சமரசங்கள் போன்றவற்றை அங்கீகரிப்பாள். மனதார நன்றி சொல்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்டுவாள். இது குடும்பத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும்.

5. இணக்கமான வீட்டுச்சூழல்: ஒரு நல்ல மகளின் அடையாளம் குடும்பத்தில் மோதல்கள் ஏற்படாமல் தடுத்து, இணக்கமான வீட்டுச்சூழலை ஏற்படுத்துவதாகும். தம்பியோ, தங்கையோ ஏதாவது குறும்போ, தவறோ செய்து விட்டால் பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை அடிக்கும்போது அவர்களை சமாதானப்படுத்துவதோடு, உடன் பிறந்தாரையும் அவள் மென்மையாக கண்டிக்கிறாள். இதனால் ஒரு இணக்கமான சூழ்நிலையை வீட்டில் அவள் உருவாக்குகிறாள்.

இதையும் படியுங்கள்:
அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கைவைத்தியக் குறிப்புகள்!
8 qualities of great daughter

6. நேர்மை மற்றும் நம்பிக்கை: ஒரு நல்ல மகள் நேர்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறாள். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள், சிக்கல்கள் பற்றி பெற்றோரிடம் திறந்த மனதுடன் தெரிவிக்கிறாள். அவர்கள் தன்னுடைய வாழ்வின் முக்கிய அங்கம் என்பதை உணர்ந்து செயல்படுவதால் அவளுடைய நேர்மையும் நம்பிக்கையும் பெற்றோர்களால் நன்றாக உணரப்படும்.

7. மன்னிப்பு: பெற்றோர் தமக்குத் தெரிந்த வகையில் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அவற்றில் சில தவறுகள் நேரலாம். ஒரு நல்ல மகள் பெற்றோர்களின் குறைபாடுகளை மன்னித்து, அவர்களின் அன்பை புரிந்துகொள்வாள். அவர்கள் தம்மை சரியாக நடத்தவில்லை என்ற காரணத்திற்காக அவர்களை வெறுக்காமல் மன்னித்து அவர்கள் மேல் அன்பு செலுத்துவாள். இதனால் பெற்றோர் மகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.

8. நேரம் ஒதுக்குதல்: ஒரு நல்ல மகள் பெற்றோருடன் தரமான நேரத்தை செலவிடுவாள். தினமும் சில நிமிடங்கள் அவர்களுடன் மனம் விட்டுப் பேசி, அவர்கள் பேசுவதையும் பொறுமையுடன் கேட்பாள். தொலைவில் இருந்தாலும் வழக்கமாக சில நிமிடங்கள் தொலைபேசியில் விசாரித்து அறிந்து கொள்வது, விடுமுறை நாட்களில் பெற்றோருடன் பொழுதைக் கழிப்பது போன்றவற்றை அவள் தவறாமல் செய்வாள். இந்த எட்டுப் பண்புகளும் ஒரு சிறந்த மகளின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com