
வார்த்தைகளுக்கு இருக்கும் பவரைப்போல் எழுத்துக்களுக்கும் 'பவர்' இருப்பது உண்மையே. சிலருக்கு வார்த்தையால் பேசுவதை விட எழுத்தால் பேசுவது எளிதாக இருக்கும். அதேபோல் எழுத்தால் பேசுவதைவிட வார்த்தையால் எளிமையாக பேசுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் இவற்றில் எது சிறந்தது?
வார்த்தையால் நாம் பேசும்போது நம்மை அறியாமல் வார்த்தைகளை கொட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கொட்டிய வார்த்தைகளை அள்ளக் கூட முடியாது. ஆனால் வார்த்தைகளை எழுதும்போது அதை திருத்திக் கொள்ள இயலும். அந்த வகையில், நம்மில் பலருக்கு 'டைரி' எழுதும் பழக்கம் இருக்கும். 'பர்சனல் டைரி' இருப்பது நம்முடைய உணர்ச்சிகளான, கோபம், கவலை, சந்தோசம் போன்ற அனைத்திலும் நாம் வெளிப்படையாக, 'நாம் நாமாக இருக்க' உதவியாக இருக்கும்.
டைரி எழுதும் பழக்கம் உண்மையாகவே மிக சிறந்த மருந்து என்றுக் கூறலாம். ஏனெனில், தொடர்ச்சியாக டைரி எழுதுபவர்களுக்கு,
மன அழுத்தம் குறைந்து மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
நினைவாற்றல் அதிகரிக்கிறது.
படைப்பாற்றல் ஊக்குவிக்கப்டுகிறது.
கையெழுத்து மேம்படுகிறது.
எழுத்துதிறன் வளர்கிறது.
இது போன்று பல நன்மைகள் கிடைக்கிறது. முக்கியமாக குழந்தைகள் இதை கடைபிடிக்கும் போது நல்ல பலனை பெற முடியும். மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்கள் என அனைவருமே டைரி எழுதவதால் சிறந்த நபராக மாறலாம். ஒரு சிலர் எனக்கு எழுதுவதே பிடிக்காது என்பார்கள். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், நீங்கள் ஒரு பேப்பர் மற்றும் பேனாவை எழுதும் நோக்கில் எடுத்து தனிமையாக ஒரு இடத்தில் அமர்ந்து பாருங்கள். அப்போதுதான் உங்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை நீங்களே உணர முடியும்.
அனைவருக்குள்ளும், ஒரு கவிஞர், ஒரு எழுத்தாளர், பேச்சாளர் போன்ற அனைத்து திறன்களும் ஒளிந்து இருக்கின்றன. சிலவற்றை நாம் வெளிப்படுத்தியிருக்கலாம். பலவற்றை நாம் கண்டுபிடிக்காமலே இருக்கலாம். அதனால் இதுபோன்ற நன்மையான செயல்களை ஒரு முறையேனும் முயற்சிப்பது நல்லது.
முன்பெல்லாம், டைரியை நண்பன் என்றுதான் கூறுவார்கள். தற்போது டைரி புழக்கம் குறைந்து விட்டது என்றாலும், எழுதுவது குறையவில்லை. ஆனால் அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. உலகமே டிஜிட்டலுக்கு மாறிவிட்ட நிலையில், எழுத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது என்பதுதான் அந்த உண்மை. அதாவது பலபேர் 'நோட்ஸ்' என்ற செயலியை தங்கள் கைபேசியில் டைரியாக பயன்படுத்துகின்றனர். இதில் தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை டைப் செய்து வைத்துக் கொள்வர். இதைதான் டிஜிட்டல் டைரி என்கின்றனர். இதையுமே 'பர்சனல் டிஜிட்டல் டைரி' என்று சொல்லலாம். ஏனெனில், இதில் நாம் எழுதுவதை கடவுச்சொல் பயன்படுத்தி மறைத்து கூட வைத்துக்கொள்ள முடியும்.
ஏதோ ஒன்று அவரவருக்கு எது சவுகரியமானதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வருடங்கள் கடந்து நாம் எழுதி வைத்ததை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவம் சுவாரசியமானதாக இருக்கும். தவறாமல் அதை அனுபவித்து பாருங்கள்...................
நீங்கள் பயன்படுத்துவது டிஜிட்டல் டைரியா? அல்லது டைரியா? இதில் எது சிறந்தது ? என்றும் கமெண்டில் பதிவிடுங்கள்.....