படிக்கும்போது தூக்கம் வருகிறதா? அப்போ இவற்றை செய்யுங்கள்!

sleeping while sleeping
sleeping while sleeping
Published on

புத்தகத்தை திறந்தாலே சிலருக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், இனி இப்படி செய்தால் படிக்கும்போது தூக்கமே வராது.

பொதுவாக போன் பார்த்தால் தூக்கமே வராது. எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் போன் பார்ப்போம். ஆனால், புத்தகத்தை திறந்தாலே தூக்கம் வந்துவிடும். மேலும் சிலர் முதலில் உட்கார்ந்து படிப்பர், பின்னர் சாய்ந்துப் படிப்பர், பின்னர் படுத்துப் படிப்பர், இறுதியாக தூங்கியே விடுவர். அடுத்தநாள் பரீட்சையில் அவ்வளவுதான். கோவிந்தா!

இந்தப் பழக்கத்தை எப்படி மாற்ற நினைத்தாலும், சிலரால் மாற்றவே முடியாது. இதனால் பெரிதும் சிரமத்துக்குள்ளாவர் . ஆனால், இனி அந்த வருத்தம் வேண்டாம். இந்த டிப்ஸைப் பின்பற்றினாலே இனி படிக்கும்போது தூக்கம் வராது.

வெளிச்சத்தில் படியுங்கள்:

அதாவது டேபிள் லைட் மட்டும் வைத்து சிலர்  இரவில் படிப்பார்கள். அப்படியில்லாமல் அறை முழுவதும் வெளிச்சம் வைத்து முழு வெளிச்சத்தில் படிக்கவும். நீங்கள் படிக்கும்போது முழு வெளிச்சம் மற்றும் நல்ல காற்றோட்டத்துடன் படிக்க வேண்டும்.

சாப்பிட்டவுடன் படிக்காதீர்கள்:

சிலர் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு உடனே படிக்கத் தொடங்குவர். இதனால் சோர்வும் தூக்கமும்தான் மிஞ்சும். சாப்பிட்டுவிட்டு படிக்க வேண்டும் என்று நினைத்தால், அரை வயிற்றில் சாப்பிடுங்கள். ஒருவேளை வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியுங்கள்.

ஒரே இடத்தில் படிக்காதீர்கள்:

சிலர் நீண்ட நேரமாக ஒரே நேரத்தில் படிப்பார்கள். அதனால் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினால் தூக்கம்தான் வரும். ஆகையால், முடிந்த அளவு கை கால்களை அசைத்துக் கொடுங்கள். அல்லது அவ்வப்போது எழுந்து நடங்கள்.

இரவு நேரத்தில் படிக்கலாமா?

இரவில் படித்தால்தான் சிலருக்கு வசதியாக இருக்கும். மற்றவர்கள் இரவு நேரங்களில் கடினமான பாடங்கள் படிப்பதைத் தவிர்க்கவும். அந்தப் பாடங்களை காலையில் படிக்கலாம்.

தூக்கம் முக்கியம்:

சரியான நேரத்தில் தூங்கி எழுந்தால், படிக்கும்போது உற்சாகமாக இருக்கும். தூக்கம் வராது. ஆகையால் நீண்ட நேரம் தூங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
கனவில் எந்த விலங்கு வந்தால் என்ன பலன் தெரியுமா?
sleeping while sleeping

தண்ணீர் குடியுங்கள்:

உடல் உழைப்பைவிட, மூளைக்கு கொடுக்கும் உழைப்பே அதிக சோர்வை ஏற்படுத்தும். ஆகையால் தூக்கம் அதிகம் தேவை. அதேபோல், அதிக தண்ணீர் குடிப்பதன்மூலம் சோர்வைப் போக்கலாம்.

சேரில் அமர்ந்து படிக்கவும்:

பொதுவாக படிக்கும்போது பலர் மெத்தையில் அமர்ந்து, தரையில் படுத்துப் படிப்பார்கள். அப்படி படிக்கக்கூடாது. சேரில் அமர்ந்து படிக்கலாம். அல்லது தரையில் சம்மணம் போட்டு படிக்கலாம்.

இவற்றைப் பின்பற்றி படியுங்கள்... சிறப்பாக சோர்வின்றிப் படிக்கலாம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com