கனவில் எந்த விலங்கு வந்தால் என்ன பலன் தெரியுமா?

Dream benefits
Dream benefits
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நாம் தூங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் நம் நினைவில் இருப்பதில்லை. எனினும், சில நேரங்களில் நமக்கு வரும் கனவுகள் தெளிவாக ஞாபகத்தில் இருக்கும். அப்படி வரும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? என்று நாம் யோசிப்பதுண்டு. கனவில் சில சமயங்களில் பாம்பு, காகம், கழுகு, யானை போன்ற விலங்குகள் வருவதுண்டு. அப்படி கனவில் விலங்குகளைக் கண்டால், ஜோதிடத்தின்படி அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. யானை: யானை துரத்துவதுப் போல கனவுக் கண்டால், உங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படப் போவதாக ஜோதிடம் கூறுகிறது. வாழ்க்கையில் தீர்க்கப்படாத பிரச்னையே இதற்கு காரணம். அதை எதிர்கொள்ளவே உங்கள் மனம் தயாராகிறது என்று கூறுகிறது.

2. காகம்: காகங்களை கனவில் கண்டால், உங்கள் முன்னோர்கள் உங்களை எச்சரிக்கிறார்கள் அல்லது முக்கியமான செய்திகளை தெரிவிக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு முக்கியமான நபரின் நினைவால் வாடுகிறீர்கள் என்று இது குறிக்கிறது.

3. பாம்பு: பாம்புகளைப் பற்றிய கனவு துரோகம், ஏமாற்றத்தைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் மோதல்கள் அல்லது அச்சுறுத்தல்களை குறிப்பதாக இது இருக்கலாம்.

4. பசு: பசுவை கனவில் பார்ப்பது பொதுவாக வாழ்வில் செழிப்பைக் குறிக்கிறது.

5. கழுகு: கழுகு உங்களை நோக்கி பறந்து வருவது போல கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் வெற்றியும், உயர்வும் வரப்போவதாக ஜோதிடம் கூறுகிறது. கருடனின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கப்போவதாகவும், தடைகளைத் தாண்டி நீங்கள் உயரப்போவதாகவும் அர்த்தம்.

6. புலி: கனவில் புலிகளைக் கண்டால், உங்களுக்குள் ஒரு தைரியமும், வலிமையும் உண்டாகப்போவதாக ஜோதிடம் சொல்கிறது. துர்கா தேவியின் வாகனமான புலி உங்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் தரப்போகிறது. சபரிமலைக்குச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையும் இது குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் முதன் முதலில் முடி காணிக்கை செய்தது யார் தெரியுமா?
Dream benefits

7. மயில்: மயிலைப் பற்றிய கனவு வந்தால், உங்கள் வாழ்வில் அழகும், இனிமையும் நிறையப் போவதாக ஜோதிடம் சொல்கிறது. முருகப்பெருமானின் வாகனமான மயில் ஞானத்தையும், அழகியலையும் உங்கள் வாழ்வில் கொண்டு வரும். உங்களின் படைப்பாற்றல் மற்றும் சுயவெளிப்பாடு மேம்படப் போவதையும் இது காட்டுகிறது.

8. சிங்கம்: சிங்கத்தை கனவில் காண்பதன் மூலம் அதிகாரம் மற்றும் தலைமைத்துவம் கிடைக்கப்போவதாக ஜோதிடம் குறிக்கிறது. துர்கா தேவியின் மற்றொரு வாகனமான சிங்கம் உங்களுக்கு வீரத்தையும், நீதியையும் வழங்கும். இதில் உங்களுக்கு கனவில் எந்த விலங்கு வந்தது என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com