
மீன்களை சிலர் அழகுக்காகவும், இன்னும் சிலர் வாஸ்துவிற்காகவும், மனநிம்மதிக்காகவும் வீட்டில் வளர்ப்பார்கள். அவ்வாறு குறிப்பிட்ட சில மீன்களை வீட்டில் வளர்ப்பதின் மூலம் நமக்கு செல்வம் அதிகரிக்கும். நம்மை நோக்கி வரும் பல்வேறு விதமான கண் திருஷ்டிகளைக் கூட மீன்களால் தடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்னைகளைக்கூட மீன்கள் சரிசெய்யும்.
நம் முன்னோர்கள் மீன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பாண்டிய மன்னனின் கொடிக்கு மீனை சின்னமாக வைத்திருந்தார். அந்த அளவிற்கு மீன்களில் இருந்து சக்தியும், நன்மையும் கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். பல கலாசாரத்திலும், மதத்திலும் மீன்கள் நேர்மறையான ஆற்றல் தரக்கூடியவையாகவும் என்றும் வீட்டிற்கு செல்வத்தை தரக்கூடிய உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது.
மீன்களை வீட்டில் வளர்ப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். மீன்களின் நிறங்ளை வைத்து சில பலன்கள் உண்டு. தங்க மீன்களை வீட்டில் வளர்ப்பதால், மிக பெரிய யோகத்தையும், செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும். பச்சை மீன்கள் வளர்ப்பதால், வீட்டில் வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் குழந்தைகள் அதிகமாக பிறக்கும், பிறந்த குழந்தைகள் கல்வியில் உயர்ந்த நிலை அடைவார்கள். செய்கின்ற தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
சிவப்பு நிற மீனை வளர்த்தால் வளமை ஏற்படும். வீட்டில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். மஞ்சள் நிற மீன் வளர்த்தால் செயல்திறன் அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் மனவலிமை கிடைக்கும். கருப்பு நிற மீனை வளர்த்தால் அது நம் வீட்டின் மீது இருக்கும் கண் திருஷ்டி, தீய சக்தியை அது எடுத்துக் கொள்ளும்.
மீன்களை வளர்க்கும் போது ஒற்றைப்படையில் வளர்க்க வேண்டும். நான்கு கலர் மீனும் ஒரு கருப்பு மீனையும் சேர்த்து வளர்க்க வேண்டும். வீட்டில் சமையலறை, பெட்ரூம் போன்ற அறைகளில் வாஸ்து பிரச்னைகள் இருக்கும். மீனை வீட்டில் வளர்ப்பதால் இதுப்போன்ற வாஸ்து பிரச்னைகள் சரியாகும். தொழில் செய்யும் இடத்தில் மீனை வளர்க்கும் போது வருமானம் அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் உள்ள பிரச்னைகள், போட்டி பொறாமைகள் தீரும்.
மீன்களை தெளிவாக பார்க்கக்கூடிய பொருளில் வைத்து தான் வளர்க்க வேண்டும். அதற்காக தான் மீன் தொட்டியை கண்ணாடியில் வைக்கிறோம். மீன் தொட்டியில் இயற்கை சம்மந்தமான பாசிகள், சங்குகள் இருப்பது சிறப்பு.
இரண்டு மீன்கள் இணைந்து நீந்தி செல்வது வீட்டில் ஒற்றுமை அதிகரிக்க போவதை சொல்லக்கூடியதற்கான அறிகுறியாகும். மீன் தொட்டியை வடக்கு, தென்கிழக்கு திசைகளில் வைக்கலாம். தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
வீட்டின் வாசல் அருகில் மீன் தொட்டியை வைப்பது சிறந்தது. படுக்கையறை, சமையல் அறை, படிக்கும் அறை போன்ற இடங்களில் வைக்காமல் இருப்பது நல்லது. அதிக இணப்பெருக்கம் செய்யும் மீன்களையும், தன் இனத்தையே சாப்பிடக்கூடிய மீன்களை வளர்க்கக்கூடாது. மீன்கள் இறந்துவிட்டால் உடனடியாக அதை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். மீன்கள் வளர்க்கும் போது இவை அனைத்தையும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.