Do you know about lazy girl jobs?
Do you know about lazy girl jobs?https://www.icscareergps.com

சோம்பேறி பெண் வேலைகள் பற்றித் தெரியுமா?

‘சோம்பேறி பெண் வேலைகள்' (Lazy girl jobs) என்ற வார்த்தை சில காலமாக சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. ‘சோம்பேறி பெண் வேலைகள்’ என்பது பொதுவாக எளிதான அல்லது குறைந்த முயற்சி தேவைப்படும் வேலைகளைக் குறிக்கும். அதிக உடல் அல்லது மன உழைப்பு தேவைப்படாத வேலைகள் இவை.

டிக் டாக் பிரபலம் கேப்ரியல் ஜட்ஜ் கேரியர் இன்ஃப்ளூயன்ஸர் என்பவர் இந்தப் பதத்தைக் கண்டுபிடித்தார். தற்போது இருக்கும் இளம் பெண்களுக்கு பத்து மணி நேர அல்லது எட்டு மணி நேர வேலை ஒத்து வருவதில்லை. நாள் முழுக்க அலுவலகப் பணி செய்வது சோர்வையும் மன அலுப்பையும் தருகிறது என்கிறார்கள். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தன்னுடைய தோழிகளுடன் அல்லது காதலனுடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் சோம்பேறி பெண் வேலைகளைத் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்.

சோம்பேறி பெண் வேலைகள் பொதுவாக விரைவான மற்றும் எளிமையான பணிகளாகும். இதற்கு அதிக ஆற்றல் அல்லது மூளை சக்தி தேவைப்படாது. இவற்றை செய்வதற்கு அதிகமான உடல் உழைப்பு அல்லது மூளையின் சக்தியும் தேவைப்படாது. மன அழுத்தம் அல்லது சோர்வு இல்லாமல் இவற்றைச் செய்யலாம்.

சோம்பேறி பெண் வேலைகள் என்னென்ன?

1. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்: சோம்பேறி பெண் வேலைக்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர். அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எழுதலாம். எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்தலாம். லாபகரமான ஒரு வேலை இது.

2. சமூக ஊடக மேலாளர்: சமூக ஊடக நிறுவனங்களின் கணக்குகளை நிர்ணயிப்பது. இதற்கும் அலுவலகம் செல்லத் தேவையில்லை. வீட்டிலிருந்தோ அல்லது தொலை தூரத்திலிருந்தோ வேலை செய்யலாம். அதிக நேரம் செய்யத் தேவையில்லை. இந்தப் பணி ஆற்றல் மிக்கதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கிறது. இதற்கு பலதரப்பட்ட புதிய யோசனைகள் தேவை. பார்வையாளர்களை திறம்பட ஈடுபடுத்த உத்திகளை இவர்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.

3. மெய்நிகர் உதவியாளர்: ஆன்லைன் வணிகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெய்நிகர் உதவியாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. மெய்நிகர் உதவியாளர்கள் மின்னஞ்சல் கடிதப் பரிமாற்றம், அட்டவணை மேலாண்மை மற்றும் தரவு உள்ளீடு போன்ற நிர்வாகப் பணிகளை தங்கள் வீட்டில் இருந்தபடியே கையாளுகின்றனர்.

4. கிராஃபிக் டிசைனர்: நல்ல இணைய இணைப்புடன் எங்கிருந்தும் எளிதாகச் செய்யக்கூடிய வேலை இது. சுய -நிர்வகிக்கப்பட்ட பணிச்சுமையை அனுமதிக்கிறது. கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் லோகோக்கள், விளம்பரங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிற காட்சிப் பொருட்களை வடிவமைக்க தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துகின்றனர்.

5. மார்க்கெட்டிங் அசோசியேட்: மார்க்கெட்டிங் கூட்டாளிகள் பெரும்பாலும் சந்தைப்படுத்துதல், பிரச்சாரங்களுக்கு உதவுதல் மற்றும் சந்தை ஆராய்ச்சியை நடத்துகிறார்கள். நிறுவனங்கள் தங்கள் இலக்கு பார்வையாளர்களை திறம்பட அடைய உதவும் தரவை பகுப்பாய்வு செய்கின்றனர்.

6. ஆன்லைன் பயிற்சியாளர்: குறிப்பிட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற பெண்கள் ஆன்லைனில் பாடம் கற்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!
Do you know about lazy girl jobs?

7. டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்: டிரான்ஸ்கிரிப்ஷன் என்பது ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளை எழுதப்பட்ட உரையாக மாற்றுவதை உள்ளடக்கியது. இந்த வேலையை தொலைதூரத்தில் இருந்தும் செய்ய முடியும்.

8. மொழிபெயர்ப்பாளர்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் நிபுணத்துவம் பெற்ற பெண்கள் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யலாம். இவை தவிர, கைவினைப் பொருட்களை உருவாக்கி ஆன்லைனில் விற்பதும் கூட சோம்பேறி பெண் வேலைகளாக கருதப்படுகின்றன.

தற்காலப் பெண்கள், சோம்பேறி பெண் வேலைகளை பயனற்றதாக நினைப்பதில்லை. தங்கள் வருமானம் அல்லது தொழில் வளர்ச்சியை தியாகம் செய்யாமல் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒரு சிறந்த சமநிலையை தேடும் முயற்சியாக இதை கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com