சுடோகு புதிரை தீர்ப்பதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

செப்டம்பர் 9, உலக சுடோகு தினம்
Sudoku Puzzle game
Sudoku
Published on

சுடோகு என்பது 9x9 கட்டத்தை 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு நிரப்பும் ஒரு புதிர். இதில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒன்று முதல் 9 வரையிலான அனைத்து எண்களும் மீண்டும் மீண்டும் வராமல் இருக்க வேண்டும்.

‘சுடோகு’ என்ற ஜப்பானிய வார்த்தைக்கு, ‘இலக்கங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்’ என்று பொருள். இதன்படி விளையாட்டில், ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு வரிசை, நெடுவரிசை மற்றும் 3x3 பெட்டியில் ஒரு முறை மட்டுமே தோன்ற வேண்டும்.

சுடோகு 1979ல் ஹோவர்ட் கார்ன்ஸ் என்ற அமெரிக்க கட்டடக் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதை ‘நம்பர் பிளேஸ்’ என்ற பெயரில் உருவாக்கினார். பின்னர் அது ஜப்பானில் பிரபலமடைந்து, சுடோகு என மறுபெயரிடப்பட்டது. இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இல்லாமல் இது அறிவு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

சுடோகுப் புதிரை தீர்ப்பதன் நன்மைகள்:

கவனச் செறிவு: சுடோகுப் புதிர் விளையாட்டில் ஈடுபடும்போது அதில் முழு கவனமும் செலுத்த வேண்டும். அப்போதுதான் புதிரை சரியாக விடுவிக்க முடியும். இந்த பிராக்டீஸ் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதற்கு உதவுகிறது. கவனச் செறிவை மேம்படுத்துகிறது.

சிக்கல் தீர்க்கும் திறன்: சுடோகுவுக்கு தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் வடிவங்களை பார்க்கும் திறன் தேவை. புதிரை படிப்படியாக விடுவிக்கும்போது அது சிக்கல் தீர்க்கும் திறன்களை கூர்மைப்படுத்த உதவுகிறது. இது வாழ்வியலில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

நினைவாற்றல் மேம்பாடு: சுடோகு புதிரை தீர்க்கும்போது எண்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான இடங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். முந்தைய முடிவுகள் மற்றும் உத்திகளை நினைவில் கொள்ளும்போது அந்தப் பயிற்சி குறுகிய கால நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது மற்ற பணிகளில் நினைவாற்றல் மேம்பாட்டை அதிகரிக்க செய்கிறது.

தர்க்க சிந்தனை ஊக்குவிப்பு: தர்க்க ரீதியாகவும் சிந்தனைத்திறனையும் ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு அசைவிற்கும் பின் விளைவுகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு அசைவையும் மேற்கொள்ளும் முன்பு முன்கூட்டியே சிந்திக்கவும், சாத்தியமான தீர்வுகளை யோசிக்கவும் கற்றுக்கொள்ள முடியும்.

மன அழுத்தம் குறைதல்: சுடோக்கு விளையாடுவது அமைதியான மனநிலையை உண்டாக்கும். இந்த புதிர் ஒரு மன ரீதியான சவாலை வழங்குகிறது. தினசரி அழுத்தங்கள் மற்றும் கவலைகளில் இருந்து மறந்து இந்த விளையாட்டை விளையாட வைக்கிறது. இது மனதிற்கு அமைதியையும் ஆற்றலையும் தருகிறது.

இதையும் படியுங்கள்:
நடுராத்திரியில் பசிக்குதா? அப்போ இந்தப் பதிவை மிஸ் பண்ணிடாதீங்க! 
Sudoku Puzzle game

அறிவாற்றல் சரிவை தாமதப்படுத்துகிறது: சுடோகு போன்ற மூளையை தூண்டும் செயல்களில் ஈடுபடுவது வயதாகும்போது அறிவாற்றல் செயல்பாட்டை பராமரிக்க உதவும். வழக்கமான மனநல சவால்கள் இருக்காது. மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. டிமென்ஷியா அல்லது அறிவாற்றல் வீழ்ச்சியின் தொடக்கத்தை தாமதப்படுத்த உதவுகிறது.

பொறுமை: சுடோகு விளையாடுவதற்கு மிகவும் பொறுமை தேவை. ஆனால், கடினமான இந்த புதிர்கள் சிக்கலான பிரச்னைகளை தீர்க்க உதவும். பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்றுத் தருகிறது. வேலை, படிப்பு மற்றும் பொதுவான சிக்கலை தீர்ப்பது உட்பட அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை பொறுமையாக எதிர்கொள்ள சுடோகு உதவுகிறது.

சுடோகு என்பது வேடிக்கையான ஆனால், அதேசமயம் மூளையை தூண்டும் ஒரு செயலாகும். இது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் மனத்தெளிவை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மூளையை சுறுசுறுப்பாக கூர்மையாக வைத்திருப்பதோடு அல்லாமல் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com