நடுராத்திரியில் பசிக்குதா? அப்போ இந்தப் பதிவை மிஸ் பண்ணிடாதீங்க! 

Midnight Hunger
5 Reasons for Midnight Hunger!
Published on

நடுராத்திரியில் திடீரென அதிகமாக பசி எடுப்பதை உங்களில் பல அனுபவித்து இருப்பீர்கள். இது மிகவும் சாதாரணமானதுதான் என்றாலும், அதற்கான காரணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சிலர் இரவில் அதிகமாக பசிக்கும் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படி இந்த பசியை கட்டுப்படுத்தலாம்? என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பதிவில் நடுராத்திரியில் பசி ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

நடுராத்திரியில் பசி எடுப்பதற்கான 5 காரணங்கள்: 

  1. மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பது நடுராத்திரி பசி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால், இரவு தூங்குவதற்கு முன் அதிகமாக பசி எடுக்கும். சிலருக்கு நடுராத்திரியில் திடீரென விழிப்பு ஏற்பட்டு பசி உணர்வை உண்டாக்கும். 

  2. பகலில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் போனால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் இரவில் அதிகமாக பசி உணரப்படுகிறது. 

  3. சில நேரங்களில் பசி என்று நாம் நினைக்கும் உணர்வு உண்மையில் உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் போவதால் ஏற்படலாம். எனவே, தினசரி உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள். 

  4. நீங்கள் முறையாகத் தூங்காமல் உரக்க சுழற்சி குழப்பம் அடைதல் காரணமாகவும் பசி எடுக்கும். இன்றைய காலத்தில் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக, பலரது தூக்க முறைகள் முற்றிலும் மாறிவிட்டது. இது இரவில் அதிகமாக உணவு உட்கொள்வதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. 

  5. மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகள் காரணமாகவும் நடுராத்திரி பசி ஏற்படும். சிலர் மன அழுத்தத்தை சமாளிக்க உணவை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர். 

இதையும் படியுங்கள்:
விரதம் மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஜவ்வரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
Midnight Hunger

முடிந்தவரை பகலில் சீரான இடைவெளியில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, தூங்குவதற்கு, 2-3 மணி நேரத்திற்கு முன்பு உணவு உண்ண வேண்டும். இரவில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை உண்பதால் நடுராத்திரியில் பசி எடுக்காது. படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து தூங்கச் செல்லவும். தினசரி ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

உங்களுக்கு இரவில் அதிகமாக பசி எடுக்கிறது என்றால் மேலே குறிப்பிட்ட 5 விஷயங்கள்தான் காரணமாக இருக்கும். எனவே, அதை முறையாகப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com