பொங்கல் அன்று வீட்டு முகப்பை அலங்கரிக்கும் கூரைப்பூ  கொத்து பற்றி தெரியுமா?

koorai poo
Koorai poo
Published on

பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்ட பொங்கல் பண்டிகையில் கூரை பூ கொத்து என்பது மிகவும் பிரசித்தம். பொங்கல் திருநாள் அன்று கிராமங்களில் வீடு தோறும் கூரையில் அதாவது தலைவாசலில் கூரை பூ கொத்து சொருகி வைப்பார்கள். கூரைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, மாவிலை, தும்பை செடி, பிரண்டை செடி ஆகியவற்றின் தொகுப்பு தான் கூரை பூ கொத்து. இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் முன்னோர்களின் அறிவார்ந்த செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் இயற்கை சார்ந்த வாழ்வியலை பின்பற்றியே வந்துள்ளோம். மருத்துவம் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் இயற்கை மூலிகைகள் மூலமாகத்தான் நமக்கு ஏற்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டுள்ளோம்.

அந்த வகையில் கூரைப்பூ சிறுநீரக கல்லடைப்புக்கு சிறந்த நிவாரணி வேப்பிலை ஒப்பற்ற கிருமிநாசினி மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜனை அதிகரித்து காற்றை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது. தோல் வியாதி, சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்பூ அற்புதமான மருந்து. ஆவாரம் பூ சரும பிரச்சனைகளை குணப்படுத்துவது முதல் இரத்த சுத்திகரிப்பு வரை பல குணங்கள் கொண்டுள்ளன. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க வல்லது தும்பை செடி.

இதையும் படியுங்கள்:
இந்த 6 பேரின் சாபம் கண்டிப்பாக பலிக்கும்!
koorai poo

வேப்பிலையும் மாவிலையும் கிருமி நாசினிகள் தலைபாரம் நீர் கோவை சளி என குளிர்காலம் தொடர்பான பிரச்சனைகளை பெருந்தும்பை சரி செய்யும் வயிற்றுப் புண் செரிமானக் கோளாறுக்கு தீர்வு தருவது பிரண்டை. எனவேதான் இவை அனைத்தும் சேர்ந்த கூரை பூக்கொத்தை வீட்டின் தலைவாசலில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

மழைக்காலம் துவங்கி விட்டாலே நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்து விடும் சிறுநீரகத்தில் உருவாகும் சிறு சிறு கற்களை கரைக்கும் தன்மை சிறுபீளைக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
உங்கள் உணர்வுகளை மதிக்காத நபர்களை எதிர்கொள்ளும் விதங்கள்!
koorai poo

இதை மட்டுமா பொங்கலன்று நாம் சேர்க்கும் உணவிலும் பல சத்துக்கள் உள்ளன

இஞ்சி உடலை உறுதியாக்குகிறது குழம்பில் சேர்க்கப்படுகிற மொச்சையில் புரதம் அதிகம் சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம் மஞ்சள் பூசணியில் துத்தநாக சத்து அதிகம் மாவுச்சத்து புரதம் கொழுப்பு மூன்றும் சேர்த்து சமச்சீர் உணவு பொங்கல் இதில் சேர்க்கப்படும் வெல்லம் நாவின் உமிழ் நீர் சுரப்பியிலிருந்து வயிற்றுக்குள் இருக்கும் செரிமான என்சைம் வரை அனைத்தையும் தூண்டி விடும் தாது உப்புக்கள் நிறைந்த கரும்பு பற்களுக்கும் ஈறுகளுக்கும் பலம் கொடுக்கக்கூடியது இவ்வாறாக பொங்கலன்று செய்கின்ற உணவுகளிலும் சரி, கூரை பூவிலும் சரி இத்தனை மருத்துவ தன்மைகள் அடங்கியுள்ளன பார்த்தீர்களா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com