சாபங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது கொடுக்கக் கூடியவர்களின் ஆழ்மனதிலிருந்து வேதனைகளால் வெளிப்படக்கூடிய அதிர்வுகள் என்று சொல்லப்படுகிறது. சிலர் கொடுக்கும் சாபம் நிச்சயம் பலித்துவிடும். அப்படி சாபம் பெற்றுவிட்டால், அது நம் வாழ்வில் விடாமல் கஷ்டத்தை கொடுக்கும். எனவே, நிச்சயமாக இந்த 6 பேரிடம் மட்டும் சாபம் வாங்கவே கூடாது. அவர்கள் யார் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1.ஒருவர் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்ளும்போது அடுத்தவர்கள் அவ்வாறு இல்லாமல் போனால், அந்த நபர் மனம் நொந்து வேதனையடைவதன் அதிர்வாக அவரை ஏமாற்றிய நபர்களுக்கு கஷ்டங்கள் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
2. ஒருவர் அவருடைய உழைப்பாலும், அறிவாலும் குறுகிய காலத்திலேயே பணம் சம்பாதித்து உயர்ந்த இடத்திற்கு வந்தால், அதைப் பார்த்து பொறாமைப்பட்டு சிலர் விடும் சாபம் பலிக்காது என்று சொல்வார்கள். இதுவே, அடுத்தவர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி அதன் மூலமாக லாபம் சம்பாதித்தால், பணத்தை இழந்தவர்கள் மனக்குமுறலுடன் விடும் சாபமானது கட்டாயம் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
3. காதலர்கள் அல்லது கணவன், மனைவி உறவுகளில் ஒருவர் மற்றவரை சார்ந்து எமோஷனலாக இருக்கும்படி செய்துவிட்டு பணத்திற்காகவோ, வசதிக்காகவோ அவரை ஏமாற்றிவிட்டு வேறு நபரிடம் செல்லும்போது அந்த நபர் மனம் நொந்துக் கொடுக்கும் சாபம் கட்டாயம் பலிக்கும்.
4. தனது பிள்ளைகளுக்காக உழைத்து வியர்வை சிந்தி அவர்களை வளர்த்த பெற்றவர்கள் மனம் நொந்துப் போகும்படி நடக்கும் பிள்ளைகள் வாழ்வில் முன்னேறவே மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
5. பெற்றவர்கள் இல்லாத வீட்டில் தன்னுடைய தம்பியை அண்ணன் அல்லது அக்கா போன்ற மூத்த சகோதரர்கள் வளர்த்திருப்பார்கள். அப்படி சிறு வயதிலிருந்து தன்னை வளர்த்த இரத்த சொந்தங்களை அவமானப்படுத்தினால் அவர்கள் மனவேதனை அடையும்போது, அது சாபமாக மாறிவிடும்.
6. சமூகத்தில் அதிகமாக செல்வாக்கு மற்றும் செல்வம் உடையவர்கள் அவர்களுக்கு கீழே இருக்கும் நபர்களை அவமானப்படுத்துவது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யும்போது அந்த நபர்கள் மனவேதனையுடன் அளிக்கும் சாபமானது கட்டாயம் பலிக்கும். எனவே, இதுபோன்ற செயல்களை செய்து மற்றவர்களிட சாபம் பெறாமல் இருப்பது நம் வாழ்வில் வளர்ச்சியடைவதற்கும், நல்ல நிலைக்கு செல்வதற்கும் வழிவகுக்கும்.