ஓடிடி சந்தா செலவைக் கட்டுப்படுத்துவது எப்படி?

How to control Ott Subscription charges?
OTT Subscription
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் ஓடிடி தளங்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் பெருமளவு அதிகரித்து விட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது, ஓடிடி தளங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்நேரத்தில் பலருக்கும் பொழுதுபோக்கு அம்சமாகவே ஓடிடி தளங்கள் மாறின. அதற்கேற்ப ஓடிடி தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

பயனர்களின் பொழுதுபோக்கு வசதிக்கேற்ப, திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல மாதங்களாக ஓடிடி சந்தாவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் மாதா மாதம் ஒரு கணிசமான தொகை செலவிடப்படகிறது. அவ்வகையில் ஓடிடி சந்தா செலவைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக ஓடிடி தளங்கள் மட்டுமின்றி மற்ற ஆன்லைன் சந்தாக்களிலும் ‘ஆட்டோ ரினீவல் (Auto Renewal)’ என்ற ஒரு வசதி இருக்கும். இந்த ஒரு வசதி தான் பல ஓடிடி வாடிக்கையாளர்களுக்கு மாதா மாதம் ஒரு செலவை ஏற்படுத்தி விடுகிறது. புதிதாக ஆன்லைன் மற்றும் ஓடிடி சந்தாவை செலுத்தும் போது, ஆட்டோ ரினீவல் என்ற ஆப்ஷனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயனர்களுக்கு திணிக்கும். இதற்கு சம்மதம் கொடுத்து விட்டால், மாதந்தோறும் ஓடிடி சந்தா முடியும் போதெல்லாம், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே சந்தா தொகை எடுத்துக் கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும்.

உண்மையைச் சொல்வதென்றால், பலரும் ஓடிடி தளங்களுக்கு சந்தா செலுத்தி விட்டு அதனைப் பயன்படுத்தாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் ஓடிடி சந்தா செலவைக் கட்டுப்படுத்த முதலில் ஆட்டோ ரினீவல் என்ற வசதியை ஆஃப் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களின் அனுமதியின்றி ஓடிடி சந்தாவை புதுப்பிக்க முடியாது. தொடக்கத்தில் ஆட்டோ ரினீவல் என்ற ஆப்ஷனை நீங்கள் கொடுத்து விட்ட பிறகு, அதனை ஆஃப் செய்ய நினைத்தால், பயன்பாட்டில் உள்ள சந்தா முடிவதற்குள் ஆஃப் செய்ய வேண்டும்.

பல ஓடிடி தளங்களில் புதிய படங்களோ அல்லது வெப் சீரியஸ்களோ வருவதில்லை. இதற்கு மாறாக ஏற்கனவே வெளியான பழைய படங்கள் அல்லது நாடகங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. எந்த ஓடிடி தளத்தில் அதிக அளவில் புதிய படங்கள் வெளி வருகின்றனவோ அதனை சரிபார்த்து, சந்தா செலுத்தலாம். வார இறுதி நாட்களில் ஒருநாளை ஒதுக்கி, பயன்படுத்தப்படாத ஓடிடி தளங்களுக்கு சந்தா செலுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
செலவே இல்லாத வார இறுதி நாட்கள் சாத்தியமா?
How to control Ott Subscription charges?

அப்படியே ஓடிடி தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கென்று தனியாக சந்தா செலுத்த வேண்டாம். ஏனெனில் தற்போது ரீசார்ஜ் கட்டணத்துடன், ஓடிடி சந்தா வசதியும் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டால் ஓடிடி சந்தா செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.

மேலும் இந்த முறையில் ஆட்டோ ரினீவல் ஆப்ஷனும் இருக்காது. ஒரு சில ஓடிடி தளங்கள் புதிய படங்கள் மற்றும் நேரலை விளையாட்டுப் போட்டிகளை பதிவிறக்கம் செய்யாமல், ஆன்லைனில் பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கின்றன. இது மாதிரியான ஓடிடி தளங்களைப் பயன்படுத்தினால் சந்தா செலவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதையும் படியுங்கள்:
இனி ஓடிடி போல் சந்தா செலுத்தி புது புது ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்தலாம்..! BytePe-வின் புதிய வசதி..!
How to control Ott Subscription charges?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com