அழகான கையெழுத்து கொண்ட இந்தியப் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

ஆகஸ்ட் 14, உலக கையெழுத்து தினம்
மகாத்மா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ்
மகாத்மா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ்
Published on

ருவரின் கையெழுத்து அவரது ஆளுமைத் தன்மையையும் அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. இந்தியப் பிரபலங்களில் அழகான கையெழுத்துக்கு பெயர் பெற்றவர்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அழகான கையெழுத்துக் கொண்ட அரசியல்வாதிகள்:

1. மகாத்மா காந்தி: தேசப்பிதாவின் கையெழுத்து தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தது. அது அவருடைய தனித்துவமான ஆளுமையை பிரதிபலித்தது.

2. ஜவஹர்லால் நேரு: இந்தியாவின் முதல் பிரதமர் நேரு நேர்த்தியான கையெழுத்தை பெற்றிருந்தார். அவருடைய கையெழுத்து ஸ்டைலானதாகவும் படிக்க எளிதாகவும் இருக்கும்.

3. ஏ.பி.ஜே அப்துல் கலாம்: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நேர்த்தியான மற்றும் தெளிவான கையெழுத்துக்காக பாராட்டப்பட்டார். அது அவரது நுட்பமான இயல்பை பிரதிபலிக்கிறது.

4. சுபாஷ் சந்திரபோஸ்: அவரது தனித்துவமான தலைமைப் பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் அவரது கையெழுத்து நேர்த்தியாகவும் சீராகவும் இருந்தது.

5. சர்தார் வல்லபாய் பட்டேல்: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் பட்டேல் அவரது ஆளுமைத் தன்மையைப் போலவே வலுவான மற்றும் நிலையான கையெழுத்தைப் பெற்றிருந்தார்.

6. இந்திரா காந்தி: இந்தியாவின் பெண் பிரதமரான இந்திரா சுத்தமாகவும் தெளிவாகவும் எழுதும் பாணியைக் கொண்டிருந்தார். அவரது கடிதங்கள் மற்றும் குறிப்புகள் அவரது வலுவான ஆளுமைத் தன்மை மற்றும் தலைமைப் பண்புகளை பிரதிபலிக்கின்றன.

7. சுஷ்மா ஸ்வராஜ்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான இவர் தெளிவான கையெழுத்துக்கு பெயர் பெற்றவர். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் கடிதங்களின் தெளிவுகளுக்காகப் பாராட்டப்பட்டவர்.

8. பிரியங்கா காந்தி: தனது ஸ்டைலான மற்றும் நேர்த்தியான கையெழுத்துக்காக பாராட்டப்படுகிறார்.

9. கங்கணா ரனாவத்: தனது தனிப்பட்ட குறிப்புகளை தெளிவான கையெழுத்தில் எழுதி, பாராட்டப்படுபவர்.

விளையாட்டு வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர்: சச்சின் தெளிவான நேர்த்தியான கையெழுத்தைக் கொண்டவர். தனது தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் செய்திகளை ரசிகர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எழுதுவதால் அவர்களால் எப்போதும் விரும்பப்படுகிறார்.

டிராவிட்: இந்திய கிரிக்கெட்டின், ‘தி வால்’ என்று அழைக்கப்படும் டிராவிட் அழகான நேர்த்தியான கையெழுத்துக்கு பெயர் போனவர்.

விஸ்வநாதன் ஆனந்த்: இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் துல்லியமான மற்றும் நேர்த்தியான கையெழுத்தைக் கொண்டுள்ளார்.

பி.வி.சிந்து: ஒலிம்பிக்கில் பேட்மிட்டனில் பதக்கம் பெற்றவர். நேர்த்தியான, ஒழுங்கான கையெழுத்தைக் கொண்டவர். கையால் எழுதப்பட்ட குறிப்புகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.

விராட் கோலி: கோலியின் ஸ்டைலான மற்றும் தெளிவான கையெழுத்து அவர் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் மிக்க ஆளுமையை பிரதிபலிக்கிறது.

இந்திய நடிகர்கள்:

1. அமிதாப்பச்சன்: பழம்பெரும் பாலிவுட் நடிகரான அமிதாப் தனது அழகான மற்றும் நேர்த்தியான கையெழுத்துக்கு பெயர் பெற்றவர். அவர் அடிக்கடி தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் கடிதங்களை தனது கையால் எழுதுவது வழக்கம். இதனால் ரசிகர்கள் அவரை எப்போதும் போற்றுகிறார்கள்.

2. கமலஹாசன்: கமலின் கையெழுத்து தெளிவாக மற்றும் நேர்த்தியாக இருக்கும். அவரது ஸ்கிரிப்டுகள் மற்றும் தனிப்பட்ட குறிப்புகள் பெரும்பாலும் அவரது துல்லியத் தன்மையை பிரதிபலிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கலாசார மரபு கொண்ட கையெழுத்துக் கலை!
மகாத்மா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ்

3. ஆமிர் கான்: நேர்த்தியாகவும் ஒழுக்கமாக வடிவமைக்கப்பட்ட கையெழுத்தையும் பெற்றவர். இது அவரது நுட்பமான இயல்பை பிரதிபலிக்கிறது.

4. மாதவன்: தெளிவான மற்றும் ஸ்டைலான கையெழுத்துக்குப் பெயர் பெற்றவர். தனது கையால் எழுதப்பட்ட குறிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டை அடிக்கடி பெறுகிறார்.

5. விஜய்: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவான விஜய் எளிமைக்கும் அழகான கையெழுத்துக்கும் பெயர் பெற்றவர். அது ரசிகர்களால் போற்றப்படும் வகையில் இருக்கும்.

இவர்கள் தவிர, நடிகைகள் தீபிகா படுகோன், மாதுரி தீட்சித், சமந்தா, நயன்தாரா ஆகியோரும் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட துல்லியமான அழகான கையெழுத்து கொண்டவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com