தரையில் படுப்பதிலும், தலையணை இல்லாமல் உறங்குவதிலும் உள்ள நன்மைகள் தெரியுமா?


தலையணையோடு உறக்கம்
தலையணையோடு உறக்கம்
Published on

‘பாயில் படு நோயை விரட்டு’ என்பது நமது முன்னோர்கள் கூறிய அனுபவ பழமொழி. தரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது. பாயில் படுத்தால் இரத்த ஓட்டம்  சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு.

கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி வரவே வராது. அதோடு, கர்ப்பிணிகள் பாயில் உறங்குவது அவர்களின் சுகப்பிரசவத்திற்கு உதவும்.   பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் ‘சிசேரியன்’ தேவைப்படாது. பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பு சீர்படும். குழந்தை வேகமாக வளர உதவிடும். கல்வி கற்கும் மாணவ, மாணவியர் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது.

பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதையே அதிகம் விரும்புவர். அதன் காரணம் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்னை இருக்கும். பாயில் சமமாக கால், கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து கொழுப்பைக் குறைக்கிறது.

ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது. இரும்பு மரக் கட்டிலில், பிளாஸ்டிக் போம் மெத்தையில் உறங்குவதை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவது நம் உடலில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தக் கூடியது. பாயின் எண்ணற்ற  நன்மைகளை உணர்ந்த நமது பெரியோர்கள், கல்யாண சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையவே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தலையணை இல்லாமல் தூங்குவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

பொதுவாகவே, தூக்கம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது. தூங்கும்போது கொஞ்சம் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தலையணையை பயன்படுத்துவது வழக்கம். தூங்கும்போது உங்கள் தலையை வசதியாக உயரத்தில் வைத்திருக்க இது உதவுகிறது. ஆனால், சில நேரங்களில் கழுத்து வலி, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு இது காரணமாகின்றது.

இதையும் படியுங்கள்:
பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் ஒளிந்திருக்கும் 6 ஆபத்துகள் தெரியுமா?

தலையணையோடு உறக்கம்

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் உடல் வலி, தண்டு வட பிரச்னை ஏற்படாது. உடலின் எலும்புகளை சீராக்க முடியும், முகச் சுருக்கம் ஏற்படாது. உடல் இயற்கையான நிலையில் இருக்கும். இதனால் நமது கழுத்து, முதுகில் வலி ஏற்படாது. மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் வரும். தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு தலையணை பயன்படுத்தினால் கழுத்து வலி, முதுகு பிரச்னைகள் மற்றும் கடுமையான நோய் நிலைமைகளை உருவாக்கும். தலையணை வைத்து தூங்குவதால் கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படக்கூடும்.

உயரமான தலையணை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை குறைப்பதன் காரணமாக கூந்தல் உதிர்வு ஏற்படவும் காரணமாக அமைகின்றது. இரு தலையணை பயன்படுத்துவோருக்கு ஆரோக்கியமான தூக்கம் கிடைக்காது. இதனால் பல்வேறு மன அழுத்தம் சோர்வு போன்ற நிலை ஏற்படுகின்றது.

தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்கும். ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளையும் குறைக்க உதவும். மேலும், ஆசிட் ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளையும் கட்டுப்படுத்த உதவும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை போன்றவற்றை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். தோள்பட்டை அழுத்தத்தைக் குறைத்து தோள்பட்டை வலியை இல்லாமல் இருக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com